கென்னத் ஆரோ

கென்னத் யோசப் ஆரோ (Kenneth Joseph Arrow 23 ஆகஸ்ட் 1921 - 21 பிப்ரவரி 2017) ஓர் அமெரிக்க பொருளாதார நிபுணர், கணிதவியலாளர், எழுத்தாளர் மற்றும் அரசியல் கோட்பாட்டாளர் ஆவார் . 1972 இல் ஜான் ஹிக்ஸுடன் பொருளாதார அறிவியலுக்கான நோபல் நினைவு பரிசின் கூட்டு வெற்றியாளராக இருந்தார்.

கென்னத் ஆரோ
தேசிய அறிவியல் பதக்கம் வழங்கும் விழாவில், 2004
பிறப்பு(1921-08-23)23 ஆகத்து 1921
நியூயார்க்கு நகரம்,அமெரிக்கா.
இறப்பு21 பெப்ரவரி 2017(2017-02-21) (அகவை 95)
பேலோ ஆல்டோ, கலிபோர்னியா, அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
நிறுவனம்இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்
துறைகுறும்பொருளியல்
பொது சமநிலைக் கோட்பாடு
சமூக வாய்ப்புக் கோட்பாடு
பயின்றகம்நியூயார்க் சிட்டி கல்லூரி
கொலம்பியா பல்கலைக்கழகம்
தாக்கம்
  • ஆல்பிரட்டு டார்சுக்கி[1]
தாக்கமுள்ளவர்
பங்களிப்புகள்பொதுச் சமநிலைக் கோட்பாடு
நலப்பொருளாதார அடிப்படைக் கோட்பாடுகள்
ஆரோவின் முடிவிலா கோட்பாடுகள்
உள்ளார்ந்த வளர்ச்சிக் கோட்பாடுகள்
விருதுகள்
ஆய்வுக் கட்டுரைகள்

பொருளாதாரத்தில், அவர் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய புதுச்செவ்வியல்வாதப் பொருளாதாரக் கோட்பாட்டில் ஒரு முக்கிய நபராக இருந்தார். அவரது முன்னாள் பட்டதாரி மாணவர்கள் பலர் நோபல் நினைவு பரிசை வென்றிருக்கிறார்கள்.

கல்வி மற்றும் ஆரம்பகால வாழ்க்கை தொகு

ஆரோ 1921 ஆகஸ்ட் 23 அன்று நியூயார்க் நகரில் பிறந்தார் . ஆரோவின் தாயார், லிலியன் (க்ரீன்பெர்க்), ருமேனியாவின் ஐயாசியைச் சேர்ந்தவர் ஆவார். அவரது தந்தை ஹாரி அரோ, அருகிலுள்ள போடு இலாயீயைச் சேர்ந்தவர் . [4] [5] இவர் உருமேனிய யூதர்கள் ஆவார். அவரது குடும்பம் அவரது கல்வி வாழ்க்கைக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. [6] பெரும் மந்தநிலையின் போது வளர்ந்த அவர் தனது இளமை பருவத்தில் சமூகவுடைமையினைத் தழுவினார். [7]

டவுன்சென்ட் ஹாரிஸ் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற அவர், பின்னர் 1940 ஆம் ஆண்டில் நியூயார்க்கின் சிட்டி கல்லூரியில் கணித பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.பின்னர் இவர் தனது கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்றார்.[7] அவர் 1941 ஆம் ஆண்டில் முதுகலைப் பட்டம் பெற்றார். [8] அவர் 1942 முதல் 1946 வரை அமெரிக்க ரானுவ விமான படையில் வானிலை அதிகாரியாக பணியாற்றினார். [9]

கல்வி வாழ்க்கை தொகு

1951 இல், அவர் கொலம்பியாவில் முனைவர் பட்டம் பெற்றார். [8] அவர் 1960 களில் பொருளாதார ஆலோசகர்களின் கழகத்தில் ராபர்ட் சோலோவுடன் பணியாற்றினார் . [10] 1968 ஆம் ஆண்டில், ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றினார். அவர் அங்கு இருந்த காலத்தில் தான் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.

ஆரோ 1979 ஆம் ஆண்டில் ஸ்டான்போர்டுக்குத் திரும்பிய பின்னர், ஜோன் கென்னியில் பொருளாதாரப் பேராசிரியராகவும், ஆராய்ச்சிப் பேராசிரியராகவும் ஆனார். 1991 ஆம் ஆண்டில் இவர் பேராசிரியர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.1995 இல் சியனா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பிரிவினைக் கற்பித்தார்.

அவரது முன்னாள் மாணவர்கள் ஐந்து பேர் நோபல் பரிசு வென்றனர். இதில் எரிக் மாஸ்கின், ஜான் ஹர்சானி, மைக்கேல் ஸ்பென்ஸ் மற்றும் ரோஜர் மியர்சன் ஆகியோர் அடங்குவர். [11] இவரது ஆவணங்களின் தொகுப்பு டியூக் பல்கலைக்கழகத்தின் ரூபன்ஸ்டைன் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. [12]

விருதுகள் மற்றும் கரவங்கள் தொகு

அரோவுக்கு 1957 இல் ஜான் பேட்ஸ் கிளார்க் பதக்கம் வழங்கப்பட்டது [13] மற்றும் 1959 இல் அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாதமியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [14] 1972 இல் ஜான் ஹிக்ஸுடன் இணைந்து பொருளாதார அறிவியலுக்கான நோபல் நினைவு பரிசின் கூட்டு வெற்றியாளராக இருந்தார். 1986 ஆம் ஆண்டில் வான் நியூமன் தியரி பரிசு பெற்றவர். [8] நாட்டின் மிக உயர்ந்த விஞ்ஞான விருதான 2004 ஆம் ஆண்டு தேசிய அறிவியல் பதக்கத்தைப் பெற்றவர்களில் ஒருவர் ஆவார்.பொருளாதாரத்தில், அவர் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய புதுச்செவ்வியல்வாதம் பொருளாதாரக் கோட்பாட்டில் ஒரு முக்கிய நபராக இருந்தார். அவரது முன்னாள் பட்டதாரி மாணவர்கள் பலர் நோபல் நினைவு பரிசை வென்றிருக்கிறார்கள்.

சான்றுகள் தொகு

  1. Kenneth Joseph Arrow (2017). On Ethics and Economics: Conversations with Kenneth J. Arrow. Routledge. பக். 12, 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-138-67606-0. https://books.google.com/books?id=byjTjgEACAAJ. 
  2. (in ja)The Nikkei. 24 October 2014. http://www.nikkei.com/article/DGXLASDG23048_T21C14A0CR0000/. பார்த்த நாள்: 14 November 2015. 
  3. "Professor Kenneth Arrow ForMemRS, elected 2006". London: அரச கழகம். Archived from the original on 17 November 2015.
  4. "Premiat Nobel cu origini românești, Doctor Honoris Causa al Universității "Al. I. Cuza" din Iași". Jurnalul.ro. பார்க்கப்பட்ட நாள் 1 November 2014.
  5. Arrow and the Foundations of the Theory of Economic Policy
  6. "American Jewish Recipients of the Nobel Prize". Fau.edu. Archived from the original on 14 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 November 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. 7.0 7.1 "Econ Journal Watch – Ideological Profiles of the Economics Laureates". Econjwatch.org. பார்க்கப்பட்ட நாள் 1 November 2014.
  8. 8.0 8.1 8.2 "Kenneth J. Arrow – Biographical". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 1 November 2014.
  9. "Kenneth J. Arrow, MA, PhD". Stanford University. பார்க்கப்பட்ட நாள் 1 November 2014.
  10. "American President". Millercenter.org. Archived from the original on 2 November 2014. பார்க்கப்பட்ட நாள் 1 November 2014.
  11. John B. Shoven. "Kenneth Arrow Contributions to Economics" (PDF). Siepr.stanford.edu. Archived from the original (PDF) on 1 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 1 November 2014.
  12. "Kenneth J. Arrow Papers, 1939–2009". Rubenstein Library, Duke University.
  13. "John Bates Clark Medal". American Economic Association. பார்க்கப்பட்ட நாள் 25 February 2017.
  14. "Book of Members, 1780–2010: Chapter A" (PDF). American Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 25 April 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கென்னத்_ஆரோ&oldid=3551204" இலிருந்து மீள்விக்கப்பட்டது