கெய்சேரி மாகாணம்

கெய்சேரி மாகாணம் (Kayseri Province, துருக்கியம்: Kayseri ili ) என்பது துருக்கியின் என்பத்தோரு மாகாணங்களில் ஒரு மாகாணமாகும். இது நடு துருக்கி பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் மக்கள் தொகை 1,255,349 ஆகும். இதில் 1,000,000 பேர் கெய்சேரி நகரில் மட்டுமே வாழ்கிறவர்கள் ஆவர். இந்த மாகாணம் 16,917  கி.மீ 2 பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த மாகாணத்தில் எல்லைகளாக சிவாஸ் மாகாணம், அதனா மாகாணம், நீட் மாகாணம், கஹ்ரமன்மாரா மாகாணம், யோஸ்கட் மாகாணம் மற்றும் நெவஹிர் மாகாணம் போன்ற மாகாணங்கள் அமைந்து உள்ளன.

இந்த மாகாணமானது தொன்மக் கதைகள் மற்றும் துருக்கிய வரலாற்றில் முக்கிய இடம்பெற்ற சில நபர்களுடன் தொடர்புடைய ஒரு பகுதியாகும். இது அனத்தோலியாவில் ( அனத்தோலியா ) அமைந்துள்ளது. மேலும் இது எர்சியஸ் மலை , ஹசன் மலை மற்றும் அலி மலை போன்ற மலைகளால் சூழப்பட்டுள்ளது. இப்பகுதியில் வாழ்ந்ததாகக் கூறப்படும் அலி பாபாவின் ( நாற்பது திருடர்கள் ) நினைவாக அலி மலைக்கு அப்படி ஒரு பெயரிடப்பட்டது.

வரலாறு தொகு

 
அலடாயிலருக்குக் கீழே ஒரு குன்றிலிருந்து பாயும் அருவிகள்.
 
எர்சியஸ் மலை ( துருக்கியம்: Erciyes Dağı ),  கெய்செரிக்கு 25 கி.மீ. தெற்கே அமைந்துள்ளது மத்திய அனடோலியாவின் மிக உயர்ந்த மலை (3916 மீட்டர்), மற்றும் அழிந்து வரும் எரிமலை அதன் உச்சியில் அமைந்துள்ளது.

கெய்சேரி என்ற நவீன பெயரால் அறியப்படுவதற்கு முன்பு இந்த நகரமானது முதன்முதலில் மசாகா நகரம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் , உரோமானியர் காலத்தில் மாகாணத்தின் பெயர் கைசரியா நகரம் என்றும், பின்னர் கெய்சர் நகரம் என மாற்றப்பட்டது. 1084 இல் டேனிஷ்மேண்ட் காசி கெய்சேரியை கைப்பற்றினார். செல்யூக் பேரரசு பின்னர் மாகாணத்தை நவீனப்படுத்தியது, புதிய கட்டிடங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் போற்றவை சுற்றிலும் கட்டப்பட்டன. இந்த காலகட்டத்தில், கெய்சேரியின் முதல் மருத்துவமனையான ஐஃபாஹேன் மற்றும் அனடோலியா முழுவதுக்குமான முதல் மருத்துவமனை கட்டப்பட்டது. இது சுல்தானின் மகள் இளவரசி கெவர் நெசிபே ஹதுனின் நினைவாக கட்டப்பட்டது. அவர் இளம் வயதிலேயே ஒரு நோயால் இறந்தார். 1206 இல் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன.

பின்னர், கெய்சேரி துருக்கியில் உள்ள கவிஞர்கள், கலைஞர்களின் பண்பாட்டு மெக்காவாக மாறியது. சேயிட் புர்ஹானெடின் அங்கு வசித்து வந்தார், அதேபோல் காடே புர்ஹானெடின் மற்றும் செரானி போன்ற பலர் இருந்தனர். சேனாரி 1807 இல் பிறந்தார். உதுமானியக் கட்டிடக் கலைஞரான சினான் தி கிரேட் கெய்சேரியைச் சேர்ந்தவர்.

துருக்கிய தொன்மங்களின் படி, ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து மாதத்தில் ஹசன் பாபா என்ற நபர் மலைகளைக் கடந்து அலி பாபா பனியைக் கொண்டு வருவார், அது உருகாது என்று கூறப்படுகிறது.

இந்த மாகாணம் பண்டைய கப்படோசியா நகரத்துடன் ஒத்திருக்கிறது.

நவீன கெய்சேரி தொகு

கெய்சேரி தற்போது நவீன கட்டிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் நிறைந்த மாகாணமாகும். துருக்கியின் மிகவும் பிரபலமான சிலைகள் மற்றும் நினைவுச்சின்னங்களில் சில இங்கு அமைந்துள்ளன. நவீன நகரமான கெய்சேரி நகரானது மெலிகாசி மாவட்டத்தில் உள்ளது.

கெய்சேரியில் போக்குவரத்து தொகு

வாடகை மகிழுந்து மற்றும் பேருந்து போக்குவரத்தைத் தவிர, கெய்சேரியில் நவீன வானூர்தி நிலையம் உள்ளது, கெய்சேரி பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் துருக்கி ஏர்லைன்ஸ் உட்பட 13 வானூர்தி போக்குவதரத்து நிறுவனங்கள் சேவை அளிக்கின்றன. மேலும் கெய்சேரியில் உள்ள முக்கிய பொதுப் போக்குவரத்துக் கூறுகளின் நகர தொடருந்து அமைப்பை கெய்சேரி கொண்டுள்ளது,

படக்காட்சியகம் தொகு

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெய்சேரி_மாகாணம்&oldid=3905109" இலிருந்து மீள்விக்கப்பட்டது