கெரயிடுகள்

கெரயிடுகள் (மொங்கோலியம்: Хэрэйд) என்பவர்கள் கி.பி. 12ம் நூற்றாண்டில் அல்தை சவன் பகுதியிலிருந்த ஐந்து முக்கியமான துருக்கிய[1] அல்லது துருக்கிய-மங்கோலிய பழங்குடியின[2][3] கூட்டமைப்பினரில் (கானேடு) ஒருவர் ஆவர். இவர்கள் கி.பி. 11ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நெசுதோரியக் கிறித்தவ மதத்திற்கு மாறினர். ஐரோப்பாவின் பிரஸ்தர் ஜான் என்ற புராணக் கதாபாத்திரம் இங்கிருந்து தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கெரயிடுகள்
Хэрэйд (கெரேயிட்)
11ம் நூற்றாண்டு–13 ம் நூற்றாண்டு
நிலைகுடிமக்களாக:
லியாவோ அரசமரபு, காரா கிதை, செங்கிஸ் கானின் வழித்தோன்றல்களின் கீழ்
சமயம்
நெசுத்தோரியக் கிறித்தவம்
அரசாங்கம்கானேடு
கான் 
• 11ம் நூற்றாண்டு
மர்குஸ் புய்ருக் கான்
• 12ம் நூற்றாண்டு
சரைக் கான்
• 12ம் நூற்றாண்டு
குர்சகுஸ் புய்ருக் கான்
• –1203
தொகுருல் கான் (கடைசி)
வரலாற்று சகாப்தம்நடுக் காலம்
• தொடக்கம்
11ம் நூற்றாண்டு
• மங்கோலியப் பேரரசுக்குள்
உட்கொள்ளப்பட்டனர்.
13 ம் நூற்றாண்டு
முந்தையது
பின்னையது
  சுபு
காரா-கானித் கானேடு
[[மங்கோலியப் பேரரசு]]
தற்போதைய பகுதிகள்உறுதிப்படுத்தப்படாதது: அர்கின், கிரே

இவர்கள் ஆண்ட பகுதியானது விரிவானது ஆகும். அது தற்கால மங்கோலியா முழுவதையும் உள்ளடக்கியதாக இருந்தது. வசிலி பர்தோல்த் (1913) என்ற வரலாற்றாசிரியர் இவர்கள் ஆனன் மற்றும் கெர்லென் ஆறுகளின் மேல் பகுதியில் தூல் ஆற்றின் அருகிலே இருந்ததாகக் கூறுகிறார்.[4] இவர்கள் 1203ல் செங்கிஸ் கானால் தோற்கடிக்கப்பட்டனர். மங்கோலியப் பேரரசின் வளர்ச்சியிலே செல்வாக்கு மிக்கவர்களாகத் திகழ்ந்தனர். 13ம் நூற்றண்டில் துருக்கிய-மங்கோலிய கானேடுகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

References தொகு

  1. Michal Biran (2012). Chinggis Khan. https://books.google.com/books?id=ndPZAQAAQBAJ&pg=PT153&dq=ong+khan+turkic&hl=sv&sa=X&ved=0ahUKEwiZyOGC9cvPAhXB2SwKHRL4ChMQ6AEIKzAC#v=onepage&q=ong%20khan%20turkic&f=false. 
  2. Daniel H. Bays (2011). A New History of Christianity in China. John Wiley & Sons.. 
  3. Carter Vaughn Findley (2004). The Turks in World History. பக். 87. 
  4. V.V. Bartold in the article on Genghis Khan in the 1st edition of the Encyclopedia of Islam (1913); see Dunlop (1944:277)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெரயிடுகள்&oldid=2450115" இலிருந்து மீள்விக்கப்பட்டது