கெர்ரிமாண்டரிங்

கெர்ரிமாண்டரிங் என்பது தேர்தல் மாவட்டங்களை\தொகுதிகளை பிரிக்கும் போது குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு அல்லது குழுவுக்கு ஏற்றவாறு எல்லைகளை வகுப்பது ஆகும். இவ்வாறு பிரிக்கப்படும் தேர்தல் மாவட்டங்கள்\தொகுதிகள் கெர்ரிமாண்டர் எனப்படும். கெர்ரிமாண்டரிங் எனப்படுவது எதிர்மறை பொருள் உடையது. இதில் உடைப்பது, சேர்ப்பது என்ற இரு முறைகள் பயன்படும்.[1][2][3]

அடிப்படை நிலையில்(புரிதலுக்காக) கெர்ரிமாண்டரிங் பிரிக்கப்படும் வரைபடம்

அரசியல் நிலை, மக்களின் இனம், நிறம், மொழி, வர்க்கம், மத நம்பிக்கைகள் போன்ற குறிப்பிட்ட மக்கள்தொகை பரம்புதலின் படி குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு உதவும் வகையிலோ அதற்கு பாதகம் ஏற்படுத்தும் வகையிலோ கெர்ரிமாண்டரிங் இருக்கும். குறிப்பாக அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அல்லது மற்ற இன சிறுபான்மையினர் பெருபான்மையாக உள்ள தேர்தல் மாவட்டங்கள்\தொகுதிகள் "பெரும்பான்மையாக சிறுபான்மையினர் உள்ள மாவட்டங்கள்" என பிரிக்கப்பட்டுள்ளதை இதற்கு காட்டாக கூறலாம்.

மேற்கோள்கள் தொகு

  1. "Gerrymandering Definition & Meaning - Merriam-Webster". 15 June 2023.
  2. John C. Wells (3 April 2008). Longman Pronunciation Dictionary (3rd ). Pearson Longman. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4058-8118-0. 
  3. "The ReDistricting Game". USC Annenberg's Media Center. Archived from the original on 4 December 2016. பார்க்கப்பட்ட நாள் 10 February 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெர்ரிமாண்டரிங்&oldid=3893617" இலிருந்து மீள்விக்கப்பட்டது