கேப் அர்கோனா

கேப் அர்கோனா (SS Cap Arcona) என்பது செருமனி நாட்டின் சொகுசுக் கப்பல் ஆகும். இக்கப்பல் 1940ம் ஆண்டுவரை ஜெர்மனிக்கும் தென் அமெரிக்காவிற்கும் இடையே மக்களை ஏற்றிச்செல்லும் போக்குவரத்து சொகுசு கப்பலாக பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் பின்னர் இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனி அதன் ஆதாயத்திற்காக இக்கப்பலை தளவாடங்களை ஏற்றிச்செல்ல பயன்படுத்திக்கொள்ள எடுத்துக்கொண்டது.

The Cap Arcona, on 1 January 1927.
கப்பல் (Germany)
பெயர்: Cap Arcona
இயக்குனர்: Hamburg-Südamerikanische Dampfschiffahrtsgesellschaft
கட்டியோர்: Blohm & Voss shipyard, ஆம்பர்கு
துவக்கம்: 21 July 1926
வெளியீடு: 14 May 1927
பணிக்காலம்: 29 October 1927 (maiden voyage)
சொந்தத் துறை: ஆம்பர்கு, Germany
அழைக்கும்பெயர்: The Queen of the South Atlantic
விதி: Requisitioned into the கிரிக்ஸ்மரினா in 1940.
கப்பல் (Germany)
பெயர்: Cap Arcona
இயக்குனர்: Kriegsmarine
வாங்கியது: 1940
பணிவிலக்கம்: 1940–14 April 1945
விதி: Sunk on 3 May 1945. Wreck dismantled in 1949.
குறிப்பு: Used as floating barracks until the vessel returned to active service ferrying civilians and military personnel as part of Operation Hannibal
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:[[

Failed to render property vessel class: vessel class property not found.

]] Imported from Wikidata (?)
நிறை:27,561 BRT, 15,011 net
பெயர்வு:11,500 long tons (12,880 US tons)
நீளம்:205.9 meters (675.52 ft)
196.2 m (floating)
வளை:25.8 m (84.6 ft)
Draught:12.8 m (8.7 m)
உந்தல்:Two steam turbines, two propellers. 17,500 kW
விரைவு:Service: 20 knots[note 1]
கொள்ளளவு:1,315 (1927) (575 1st Classe, 275 2nd Classe, 465 in dormitories (until 1937), total 1315, from 1937 : 850)
பணிக்குழு:475

போரின் போது இரஷ்யாவில் உள்ள கிழக்கு பிரஷ்யா பகுதியிலிருந்து ஜெர்மனி தனது துருப்புக்களையும் பொதுமக்களையும் இக்கப்பலின் மூலம் அப்புறப்படுத்த முடிவு செய்தது. 1945ம் ஆண்டு நாசி படைகளின் கைதிகள் உட்பட 5800 பேர் இக்கப்பலில் வந்த போது இங்கிலாந்தின் ராயல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் கப்பல் மூழ்கி அனைவரும் இறந்தனர். அப்போது நடந்த இந்த சம்பவம் மூலம் கடலில் நடந்த பெரிய இழப்பு இது என்று முடிவு செய்யப்பட்டது.

வரலாறு தொகு

இக்கப்பலில் பெயர் ரோகான் தீவில் உள்ள ஒரு இடத்தைக்குறிக்கும். 1927ம் ஆண்டு ரோகென் (Rugen) தீவில் வைத்து இக்கப்பல் தனது பயணத்தை துவங்கியது. இதன் எடை 27.561 டன் ஆகும். இக்கப்பலில் கட்டுமானம் நடந்தபோது சொகுசு கப்பல் போல்தான் முதலில் கட்டப்பட்டது. அதே போல் இதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் பெரும்பாலும் வசதிபடைத்த பெரும் பணக்காரர்கள் தான்.[1]

கடற்படை சேவை தொகு

1940 ஆண்டு வரை போக்குவரத்திற்காக பயன்டுத்தப்பட்ட இக்கப்பல் இதன் நிறம் சாம்பல் நிறமாக மாற்றப்பட்டு செருமனி படைகளுக்காக (Kriegsmarine) பால்டிக் கடலில் கடற்படை சேவைக்காக உபயோகப்படுத்தப்படது. இக்கப்பல் முன்னர் மூழ்கிப்போன டைட்டானிக் கப்பலைப்போன்ற சபிக்கப்பட்ட கப்பல் என்று வர்ணிக்கப்படுகிறது. 1945ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் தேதி ஜெர்மனி கைதிகளையும், இராணுவ வீரர்களையும், மற்ரும் பொதுமக்கள் என 25,795 பேர்களையும் ஏற்றிக்கொண்டு [கிழக்கு பிரஷ்யா]] வழியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல பயணமானது.[2][3] இப்போது இந்த கப்பல் ஆபத்தில் சிக்கியுள்ளது என்று அதில் உள்ளவர்களுக்கு தெரியாது. ஜனவரி 30ம் தேதி அன்று சோவியத் யூனியனின் நீர்மூழ்கிக்கப்பல் (Soviet submarine S-13) நாற்பது நிமிடங்கள் தாக்கியது . அப்போது குறைந்தது 9,400 பேர் இறந்திருக்க கூடும். அதே நீர்மூழ்கிக்கப்பல் பிப்ரவரி மாதம் 11ம் தேதி டென்மார்க் நாட்டின் கோபனாவன் வழியாக சென்ற போது தாக்கியது. அப்போது 3,500 பேர் உயிரிழந்தனர். பிப்ரவரி மாதம் 20 தேதி அன்று கப்பலின் கேப்டன் (Johannes Gertz) தனது அறையில் தன்னைத்தானே மாய்த்துக்கொள்கிறார்.[4]

1945ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் தேதி மீதம் இருந்த வீரர்களை சுமந்து கொண்டு கோபனாவன் வழியாக பால்டிக் கடலில் தனது கடைசி பயணத்தை மேற்கொண்டது. இந்த நேரத்தில் இக்கப்பலின் எரிபொருள் முற்றிலும் தீர்ந்து பொயிருந்தன. இக்கப்பலின் நீண்ட தூரப்பயணம் அப்போது பொய்த்துப்போனது. அப்போது அதன் உரிமையாளர்கள் கொபன்கேவனிலிருந்து வெளியேறி நாஸ்டட் கடல் பகுதிக்கு(Neustadt Bay) வர உத்தரவிட்டனர்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2005-09-25. பார்க்கப்பட்ட நாள் 2005-09-25.
  2. Williams, David, Wartime Disasters at Sea, Patrick Stephens Ltd., Yeovil, UK, 1997, pp.235-36.
  3. Koberger, Jr., Charles W., Steel Ships, Iron Crosses, and Refugees, Praeger, NY, 1989, p. 87.
  4. Jacobs, Benjamin & Pool, Eugene, The Hundred Year Secret, The Lyons Press., Guilford, Connecticut, USA, 2004, p.32.
  5. Jacobs, Benjamin & Pool, Eugene, The Hundred Year Secret, The Lyons Press., Guilford, Connecticut, USA, 2004, pp.44-45.

மேலும் பார்க்க தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cap Arcona (ship, 1927)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேப்_அர்கோனா&oldid=3551396" இலிருந்து மீள்விக்கப்பட்டது