கேம்பிரிச்சு ஆங்கிலம்: ஆரம்ப ஆங்கிலத் தேர்வு

கேம்பிரிச்சு ஆங்கிலம்: ஆரம்ப ஆங்கிலத் தேர்வு (Cambridge English: Key English Test (KET)) என்பது கேம்பிரிச்சு ஆங்கில மொழி மதிப்பீடு வழங்கும் ஆங்கில மொழித் தேர்வு ஆகும். கேம்பிரிச்சு ஆங்கிலம்: ஆரம்ப ஆங்கிலத் தேர்வு எளிமையான சூழ்நிலைகளில் ஆங்கிலத்தில் தொடர்பாடல் கொள்வதற்கு ஏற்ற ஓரு அடிப்படை அளவு தரமாகவுள்ளது.

கேம்பிரிச்சு ஆங்கிலம்: ஆரம்ப ஆங்கிலத் தேர்வுக்கும் ஐரோப்பிய மொழித் தேர்வுக்குமிடைலான ஒப்பீடு.

கேம்பிரிச்சு ஆங்கிலம்: ஆரம்ப ஆங்கிலத் தேர்வு இரு வகையான தேர்வுகளைக் கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று வயது வந்தவர்களுக்கும், மற்றது பாடசாலை மாணாக்கருக்குமானது. இரு தேர்வுகளும் ஒரே அளவு தரத்தைக் கொண்டுள்ளதுடன், ஒரே தேர்வு அமைப்பினைக் (3 தேர்வுத் தாள்கள்) கொண்டுள்ளது. பாடசாலை மாணாக்கருக்கான தேர்வு பாடசாலை ஆர்வம், அனுபவம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.[1]

இவற்றையும் பார்க்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

உசாத்துணை தொகு