கேள்வியும் நானே பதிலும் நானே

கேள்வியும் நானே பதிலும் நானே (Kelviyum Naane Pathilum Naane) என். முருகேஷ் இயக்கி 1982 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக், அருணா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஆர். ராதா மற்றும் எம். எஸ். அக்பர் தயாரித்தனர். 7 மே 1982 அன்று வெளிவந்த இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்தார்.[1][2][3]

கேள்வியும் நானே பதிலும் நானே
இயக்கம்என். முருகேஷ்
தயாரிப்புஆர். ராதா
என். எஸ். அக்பர்
கதைதூயவன்
இசைஇளையராஜா
நடிப்புகார்த்திக்
அருணா
ஸ்ரீவித்யா
கைசங்கர்
ஒளிப்பதிவுகோவிந்தன் - குமார்
படத்தொகுப்புஎன். முருகேஷ்
விநியோகம்எஸ். டி. கன்பைன்ஸ்
வெளியீடுமே 7, 1982 (1982-05-07)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

  • கார்த்திக் - நிர்மல் / பாபு
  • அருணா - ஜானகி
  • பூர்ணிமா தேவி - உஷா
  • ஸ்ரீவித்யா - சத்தியவதி
  • ஜெய்ஷ்ங்கர் - ராஜகோபால் (கௌரவ தோற்றம்)
  • வடிவுக்கரசி - பங்கஜம் (கௌரவ தோற்றம்)

கதைச்சுருக்கம் தொகு

நிர்மல் (கார்த்திக்) உஷாவிற்கு (பூர்ணிமா தேவி) பியானோ கற்றுக்கொடுக்கிறான். ஜானகி (அருணா) எனும் பெண்ணை அடிக்கடி நிர்மல் சந்திக்க நேரிடுகிறது. பின்னர், நிர்மலும் ஜானகியும் காதல் செய்கிறார்கள். மாணவி உஷா தன் காதலை நிர்மலிடம் சொல்ல, நிர்மல் நிராகரிக்கிறேன். மனமுடைந்த உஷா, தற்கொலை செய்து கொள்கிறாள்.

பின்னர், நிர்மலை பாபு என்று நினைத்து பலர் நிர்மலை அணுகினர். நிர்மலின் திருமணத்தின் பொழுது, சத்யவதி (ஸ்ரீவித்யா) நிர்மலை தன் மகன் பாபு என்று நினைத்து திருமணத்தை நிறுத்த முயல்கிறார். அது பாபு இல்லை நிர்மல் என்று அவருக்கு புரிய வருகிறது. திருமணமான சில நாட்களுக்கு பிறகு, நிர்மல் ஒரு வாகன விபத்தில் சிக்கி, அவனது வாகனம் தீப்பிடித்து எரிந்து விடுகிறது. நிர்மல் இறந்ததாக போலீஸ் அறிக்கை அளித்தனர்.

உண்மையில், உஷாவின் தாய் தான் சத்தியவதி. பாபு எனும் காதாபாத்திரத்தை உருவாக்கினார் சத்யவதி. நிர்மல் ஜானகியிடம் உண்மையை சொன்னபொழுது, அது நிர்மல் இல்லை பாபு என்று நினைக்கிறாள் ஜானகி. ஜானகி சத்யவதியின் மகள் என்று ஜானகியின் தந்தை கூறுகிறார். அதைக்கேட்டு, நிர்மலை சத்யவதி மன்னிக்கிறார். நிர்மலை கொலைசெய்த குற்றத்திற்காக பாபு சிறை செல்கிறான். நிர்மலை காப்பாற்ற, ராஜகோபால் (ஜெய்கணேஷ்) எனும் வழக்கறிஞரை நியமனம் செய்தார் சத்தியவதி. இறுதியாக, நிர்மலுக்கு விடுதலை கிடைத்ததா? சத்யவதி என்னவானார்? போன்ற கேள்விகளுக்கு விடை காணுதலே மீதிக் கதையாகும்.

ஒலிப்பதிவு தொகு

வாலி எழுதிய பாடல்களுக்கு, இளையராஜா இசையமைத்தார்.[4][5]

  1. ஆடை கொண்டு ஆடும் - எஸ். பி. சைலஜா, உன்னி மேனன்
  2. என்றும் வானவெளியில் - உன்னி மேனன்
  3. நினைத்து நினைத்து வர்ணித்த ஓவியம் - பி. சுசீலா
  4. சொல்லிக்கொடு சொல்லிக்கொடு - கங்கை அமரன், பி. ௭ஸ். சசிரேகா

மேற்கோள்கள் தொகு

  1. "www.jointscene.com". Archived from the original on 2010-05-16. பார்க்கப்பட்ட நாள் 2019-02-25.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "popcorn.oneindia.in". Archived from the original on 2012-07-13. பார்க்கப்பட்ட நாள் 2019-02-25.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. "cinesouth.com".[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "www.raaga.com".
  5. "thiraipaadal.com".