கைலாசு நாத் கட்சு

இந்திய அரசியல்வாதி

கைலாசு நாத் கட்சு (Kailash Nath Katju) (1887 சூன் 17   - 1968 பிப்ரவரி 17) இவர் ஓர் இந்தியாவின் முக்கியமான அரசியல்வாதி ஆவார் . இவர் ஒடிசா மற்றும் மேற்கு வங்க ஆளுநராகவும், மத்திய பிரதேச முதல்வராகவும், மத்திய உள்துறை அமைச்சராகவும், மத்திய பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்துள்ளார். இவர் இந்தியாவின் மிக முக்கியமான வழக்கறிஞர்களில் ஒருவராகவும் இருந்தார். புகழ்பெற்ற ஐ.என்.ஏ வழக்குகள் உட்பட இவரது காலங்களில் மிகவும் மோசமான சில நிகழ்வுகளில் இவர் ஒரு பகுதியாக இருந்தார். முனைவர் கட்சு ஆரம்பத்தில் இந்தியாவில் பிரிட்டிசு ஆட்சிக்கு எதிரான சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு பல ஆண்டுகள் சக சுதந்திர போராட்ட வீரர்களுடன் சிறையில் அடைக்கப்பட்டார்.

கைலாசு நாத் கட்சு
பாதுகாப்பு அமைச்சர்
பதவியில்
10 சனவரி 1955 – 31 சனவரி 1957
முன்னையவர்பல்தேவ் சிங்
பின்னவர்வே. கி. கிருஷ்ண மேனன்
Minister of Home Affairs
பதவியில்
25 அக்டோபர் 1951 – 10 சனவரி 1955
முன்னையவர்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி
பின்னவர்கோவிந்த் வல்லப் பந்த்
மூன்றாவது மத்தியப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்
பதவியில்
31 சனவரி 1957 – 11 மார்ச் 1962
முன்னையவர்பகவந்த்ராவ் மாந்த்லோய்
பின்னவர்பகவந்த்ராவ் மாந்த்லோய்
இரண்டாவது மேற்கு வங்காள ஆளுநர்களின் பட்டியல்
பதவியில்
21 சூன் 1948 – 1 நவம்பர் 1951
முன்னையவர்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி
பின்னவர்அரேந்திர கூமர் முகர்சி
ஒடிசாவின் முதல் ஆளுநர்
பதவியில்
15 ஆகத்து1947 – 20 சூன் 1948
முன்னையவர்சந்துலால் மாதவ்லால் திரிவேதி
பின்னவர்ஆசப் அலி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கைலாசு நாத் கட்சு

(1887-06-17)17 சூன் 1887
ஜோரா, ஜோரா மாநிலம், மால்வா ஏஜென்சி, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
(present-day மத்தியப் பிரதேசம், இந்தியா)
இறப்பு17 பெப்ரவரி 1968(1968-02-17) (அகவை 80)
அலகாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ரூப் கிசோரி
பிள்ளைகள்5; சிவநாத் கட்ஜு உட்பட
வேலை
  • வழக்கறிஞர்
  • அரசியல்வாதி

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

கைலாசு நாத் கட்சு 1887 சூன் 17 அன்று ஜோரா (இன்றைய மத்திய பிரதேசம் ) சுதேச மாநிலத்தில் பிறந்தார். இவரது குடும்பம் ஜோராவில் குடியேறிய காஷ்மீர் பண்டிதர்கள் குடும்பமாகும் . இவரது தந்தை திரிபுவன் நாத் கட்சு மாநிலத்தின் முன்னாள் திவான் ஆவார். [1] கைலாசு நாத் ஜோராவில் உள்ள பார் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். பின்னர், ரங்மகால் உயர்நிலைப் பள்ளியில் படிக்க இலாகூருக்கு அனுப்பப்பட்டார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் தனது மெட்ரிகுலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்று மார்ச் 1905 இல் இலாகூரில் உள்ள போர்மன் கிறிஸ்த்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். அதே ஆண்டு சூலை மாதம், அலகாபாத்தில் உள்ள முயர் மத்திய கல்லூரியில் சேர்ந்தார். செப்டம்பர் 1907 இல், அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டம் பெற்றார். மாகாணத்தில் இரண்டாவது இடத்தில் இருந்தார். 1908 ஆம் ஆண்டில், அதே பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் 1914 இல் அலகாபாத்திற்குச் செல்வதற்கு முன்பு கான்பூரில் சட்டத் தொழிலைத் தொடங்கினார். 1919 இல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இவர் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்று 1921 இல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக சேர்ந்தார்.

தொழில் தொகு

1933 இல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நடந்த மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களையும் பின்னர் தில்லியில் உள்ள செங்கோட்டையில் இந்திய தேசிய இராணுவ சோதனைகளில் குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளையும் கட்சு ஆதரித்தார். 1937 சூலை 17 அன்று, கோவிந்த்வல்லப் பந்தின் அமைச்சரவையில் ஐக்கிய மாகாணங்களின் சட்டம் மற்றும் நீதி மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சரானார். பின்னர், அல்லாகத் மாவட்டம் (தோபா) தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] அமைச்சகத்திலிருந்து 1939 நவம்பர் 2, அன்று ராஜினாமா செய்தார். பின்னர் கட்சு18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீண்டும் 1942 இல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்திய அரசியலமைப்பு சபையிலும் பணியாற்றினார். 1935 மற்றும் 1937 க்கு இடையில், அலகாபாத் நகராட்சி வாரியத்தின் தலைவராகவும், பின்னர் அலகாபாத்தின் பிரயாக் மகிலா வித்யாபீடத்தின் தலைவராகவும் பணியாற்றினார். [3]

இந்தியாவின் சுதந்திரத்தைத் தொடர்ந்து, கட்சு பல உயர் அரசியல் பதவிகளை வகித்தார். ஆரம்பத்தில் இவர் 1947 ஆகத்து 15 முதல் 1948 சூன் 20 வரை ஒடிசாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் . இவர் 1948 சூன் 21இல் மேற்கு வங்கத்தின் ஆளுநரானார். 1951அக்டோபர் 31வரை பதவியில் இருந்தார். 1951 ஆம் ஆண்டில் மாண்ட்சௌர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1951 இல் ஜவகர்லால் நேருவின் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக சேர்ந்தார். 1951 நவம்பரில் சி.ராஜகோபாலாச்சாரிக்குப் பிறகு நாட்டின் மூன்றாவது உள்துறை அமைச்சராக இருந்தார். 1955 இல் இவர் பாதுகாப்பு அமைச்சராக்கப்பட்டார் . இவர் பின்னாளில் 1957 சனவரி முதல் 1962 மார்ச் 11 வரை மத்தியப் பிரதேச முதலமைச்சராக பணியாற்றினார். பொது நிர்வாகம், வீடு, விளம்பரம், திட்டமிடல் மற்றும் மேம்பாடு, ஒருங்கிணைப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆகிய துறைகளையும் இவர் வகித்தார். [4]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

கட்சுவுக்கும் இவரது மனைவி ரூப் கிசோரிக்கும் மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் என ஐந்து குழந்தைகள் பிறந்தனர். [1] இவரது ஒரு மகன் பிரம்மா நாத் கட்ஜு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். [5] மூத்த மகன் சிவநாத் அதே நீதிமன்றத்தில் நீதிபதியாகவும், உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். சிவ் நாத்தின் மகன் (கைலாசு நாத்தின் பேரன்) மார்க்கண்டே கட்சு, இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார். இவரது பேத்தி, நியூயார்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான திலோத்தமா முகர்ஜி, அரசியல்வாதியும், முன்னாள் இராஜதந்திரி சசி தரூரின் முதல் மனைவியாவார்.

கட்சு 1967 இல் சிறுநீரக நோயிலிருந்து மீண்டிருந்தார். 1968 பிப்ரவரி 17 அன்று இவரது உடல்நிலை மோசமடைந்து அலகாபாத்தில் உள்ள தனது இல்லத்தில் இறந்தார் . [6] இறுதி சடங்குகளை மறுநாள் கங்கைக் கரையில் மகன் சிவநாத் நிகழ்த்தினார். [7]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 "Members Bioprofile: Katju, Dr. Kailas Nath". Lok Sabha. Archived from the original on 28 February 2018. பார்க்கப்பட்ட நாள் 28 February 2018.
  2. Reed, Stanley (1941). The Indian Year Book 1940–41. Bennett Coleman and Co. Ltd.. பக். 132. https://archive.org/details/in.ernet.dli.2015.108681. பார்த்த நாள்: 28 February 2018. 
  3. . 
  4. India: A Reference Annual 1960. Ministry of Information and Broadcasting. 1960. பக். 419. https://archive.org/details/in.ernet.dli.2015.100488. பார்த்த நாள்: 28 February 2018. 
  5. "Hon'ble Mr. Brahma Nath Katju". allahabadhighcourt.in. Archived from the original on 7 October 2007. பார்க்கப்பட்ட நாள் 28 February 2018.
  6. "K. N. Katju passes away". The Indian Express. Press Trust of India: p. 7. 18 February 1968. 
  7. "Katju cremated". The Indian Express. Press Trust of India: p. 9. 19 February 1968. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைலாசு_நாத்_கட்சு&oldid=3359830" இலிருந்து மீள்விக்கப்பட்டது