கைலாலீ மாவட்டம்


கைலாலீ மாவட்டம் (Kailali District) (நேபாளி: कैलाली जिल्लाகேட்க), தூர மேற்கு நேபாளத்தின், தராய் சமவெளியின் சேத்தி மண்டலத்தில், மாநில எண் 7-இல் அமைந்த, நேபாளத்தின் 77 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தங்கடி நகரம் ஆகும்.

நேபாளத்தில் கைலாலீ மாவட்டத்தின் அமைவிடம்

கைலாலீ மாவட்டத்தின் பரப்பளவு 3,235 சதுர கிலோ மீட்டராகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 7,75,709 ஆகும். இம்மாவட்டம் தெற்கில் இந்தியாவை எல்லையாகக் கொண்டுள்ளது.

இம்மாவட்டத்தில் உள்ள டீக்காபூர் பூங்கா (Tikapur Park) நேபாளத்தின் மிகப்பெரிய பூங்காவாகும். தங்கதி நகரத்தில் வானூர்தி அருங்காட்சியகம், பைலட் பேட் உப்ரெதியால் 2014-இல் நிறுவப்பட்டது. இம்மாவட்ட மக்களால் தாரு மொழி, நேபாள மொழி மற்றும் டோட்டி மொழிகள் பேசப்படுகிறது.

தட்ப வெப்பம் தொகு

நேபாளப் புவியியல்#தட்ப வெப்ப மண்டலங்கள்[1] உயரம் பரப்பளவு %
Lower Tropical climate 300 மீட்டருக்கும் கீழ் (1,000 அடிகள்) 59.3%
Upper Tropical 300 - 1,000 மீட்டர்கள்
1,000 - 3,300 அடிகள்
25.9%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்கள்
3,300 _ 6,600 அடிகள்
13.8%

கிராம வளர்ச்சி மன்றங்கள் மற்றும் நகராட்சிகள் தொகு

 
கைலாலீ மாவட்ட கிராம வளர்ச்சி மன்றங்கள் மற்றும் நகராட்சிகளைக் காட்டும் வரைபடம்

நகராட்சிகள் தொகு

  1. தங்கடி துணை மாநகராட்சி
  2. அத்தாரியா நகராட்சி
  3. தீக்காப்பூர் நகராட்சி
  4. லம்கி சுகா நகராட்சி
  5. கோதக்கோடி நகராட்சி
  6. பஜானி – திரிசக்தி நகராட்சி

கிராம வளர்ச்சி மன்றங்கள் தொகு

  • சசௌதி
  • பௌனியா
  • சௌமலா
  • தன்சிங்காப்பூர்
  • தோடோதாரா
  • துர்கௌலி
  • தாரகா
  • கத்தாரியா
  • கோதாவரி
  • ஹசுலியா
  • ஜானகிநகர்
  • ஜோஷிபூர்
  • கைராலா
  • கோட்டா துளசிபூர்
  • மசுரியா
  • மோகன்யால்
  • முனுவா
  • நிகாலி
  • பஹல்மன்பூர்
  • பாண்டவுன்
  • பவேரா
  • பிரதாப்பூர்
  • இரத்தினபூர்
  • சஹாஜ்பூர்
  • சுகர்கா
  • தாபாப்பூர்
  • உதசிப்பூர்
  • நாராயணன்பூர்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, ISBN 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைலாலீ_மாவட்டம்&oldid=3099749" இலிருந்து மீள்விக்கப்பட்டது