கொக்கு
Egret
பெரிய கொக்கு (ஆர்டியா ஆல்பா மோடெசுடா)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பெலிகேனிபார்மிசு
குடும்பம்:
அர்டெயிடே
பேரினம்

எக்ரெட்டா
ஆர்டியா
பூபூல்கசு
மீசோபோயிக்சு

கொக்குகள் (Egret) அர்டெயிடே குடும்பத்தினைச் சார்ந்த பறவைகளாகும். ஹெரான்களில் ஒரு வகை கொக்குகள் என்றும் அறியப்படுகின்றன. இவை வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் இறகுகளைக் கொண்டன. இனப்பெருக்க காலத்தில் மென்மையான புகைத்திரை (பொதுவாகப் பால் வெள்ளை) போன்ற இறகுகளைக் கொண்டுள்ளன. கொக்குகள் ஹெரான்களிலிருந்து உயிரியல் ரீதியாக வேறுபட்ட குழு அல்ல, அதே கட்டமைப்பைக் கொண்டுள்ளன.

உயிரியல் தொகு

 
பெரிய கொக்கு, பறக்கும்போது
 
இந்தியாவின் ஆந்திராவின் கொல்லேரு ஏரியில் சாயங்காலத்தில்

பல கொக்குகள் எக்ரெட்டா அல்லது ஆர்டீயா பேரினத்தினைச் சார்ந்த சிற்றினங்களாக உள்ளன. அவற்றில் கொக்குகளை விட ஹெரான்கள் எனப் பெயரிடப்பட்ட பிற உயிரினங்களும் உள்ளன. ஒரு ஹெரான் மற்றும் ஒரு கொக்குக்கும் இடையிலான வேறுபாடு மிகவும் தெளிவற்றது. மேலும் உயிரியலை விடத் தோற்றத்தைப் பொறுத்தது. "கொக்கு " என்ற வார்த்தை "வெள்ளி ஹெரான்" மற்றும் "தூரிகை" ஆகிய இரண்டையும் குறிக்கும் பிரெஞ்சு வார்த்தையான ஐகிரெட்டிலிருந்து (aigrette) வந்தது. இது இனப்பெருக்க காலத்தில் கொக்கின் முதுகில் காணப்படும் நீண்ட, இழை நீண்ட, இழை இறகுகளைக் குறிக்கிறது ("எக்ரெட்ஸ்" என்றும் அழைக்கப்படுகிறது).

சமீபத்திய ஆண்டுகளில் பல கொக்குகள் ஒரு பேரினத்திலிருந்து மற்றொரு பேரினத்திற்கு மறுவகைப்படுத்தப்பட்டுள்ளன. பெரிய கொக்கு கேசுமெரோடியசு, எக்ரெட்டா அல்லது ஆர்டியா சிற்றினமாக வகைப்பட்டுள்ளது.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தொப்பி தயாரிப்பாளர்கள் அதிக எண்ணிக்கையிலான கொக்கின் இறகுகளைப் பறித்ததால், 19ஆம் மற்றும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், உலகின் சில கொக்கு இனங்கள் இடைவிடா வேட்டையாடுததால்ஆபத்தில் இருந்தன. இதனால் இனப்பெருக்கம் செய்யும் கொக்குகள் உலகம் முழுவதும் பல இடங்களில் கொல்லப்பட்டன.

பசிபிக் ரீஃப் ஹீரோன் (எக்ரெட்டா சாக்ரா), சிவப்பு நிற கொக்கு மற்றும் கரைக் கொக்கு உள்ளிட்ட பல கொக்குகள் இரண்டு தனித்துவமான வண்ணங்களைக் கொண்டுள்ளன. இவற்றில் ஒன்று முற்றிலும் வெள்ளையானது. சிறிய நீல கொக்கு இளம் குஞ்சுகள் முழுவதும் வெண்மையான சிறகுகளைக் கொண்டுள்ளது.

வகைபாட்டியல் தொகு

 
எகிப்திலிருந்து கொக்கு
 
இந்தியாவின் பாலக்காட்டில் எக்ரெட்

வாழ்விடம் தொகு

உப்பு நீர் மற்றும் நன்னீர் சதுப்புநிலங்களில் கொக்குகள் வாழ்கின்றன.[1]

மேற்கோள்கள் தொகு

  1. The Cornell Lab of Ornithology. "Egret". All About Birds. Cornell University. பார்க்கப்பட்ட நாள் 11 August 2015.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொக்கு&oldid=3271955" இலிருந்து மீள்விக்கப்பட்டது