கொடிக்குன்னில் சுரேஷ்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி
கொடிக்குன்னில் சுரேசு, கேரள அரசியல்வாதி. இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கொடிக்குன்னு என்ற ஊரில் பிறந்தார். இவர் 1962-ஆம் ஆண்டின் சூன் நான்காம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்று, மாவேலிக்கரை மக்களவைத் தொகுதியினை முன்னிறுத்துகிறார். பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆவார்.[1]
பதவிகள் தொகு
இவர் கீழ்க்காணும் பதவிகளையும், பொறுப்புகளையும் ஏற்றுள்ளார்.[1]
- 1989: ஒன்பதாவது மக்களவையில் உறுப்பினர்
- 1991: பத்தாவது மக்களவையில் உறுப்பினர்
- 1996: பதினொன்றாவது மக்களவையில் உறுப்பினர்
- 1999: பதின்மூன்றாவது மக்களவையில் உறுப்பினர்
- 2009: பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர்
- மே, 2014: பதினாறாவது மக்களவையில் உறுப்பினர்
சான்றுகள் தொகு
- ↑ 1.0 1.1 http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=477 பரணிடப்பட்டது 2014-03-19 at the வந்தவழி இயந்திரம் உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை