கொத்தணிக் கோட்பாடு

கொத்தணிக் கோட்பாடு (Cluster theory) என்பது 'உத்திகளுக்கானதொரு கோட்பாடாகும். ஆல்பிரட் மார்சலின் ”பொருளாதாரக் கோட்பாடுகள்” என்ற நூல் 1890-இல் வெளியிடப்பட்டது. இந்நூலில் அவர், குறிப்பிட்ட இடங்களில் சிறப்புத் தொழிற்சலைகள் நெருக்கமாக அமைந்திருத்தலைக் கொத்தமைப்பு எனவும் அவை தொழில்துறை மாவட்டங்களெனவும் குறிப்பிட்டுள்ளார்.[1]

குறிப்பிட்ட பகுதியிலுள்ள தொழில்களில் கவனம் செலுத்துவதால் பல்வேறு பயன்களை சமூகத்திற்கு உருவாக்க முடியும் என்று இக்கோட்பாடு கூறுகிறது. ஒரு தொழிலில் குறைவான போட்டி ஏற்படுமாயின் நிறுவனங்கள் அதிக இலாபம் ஈட்டவும், நிரந்தர வாடிக்கையாளர்களை கொண்டு, குறிப்பிட்ட நிறுவனங்கள் நிலையான வருமானத்தை ஈட்டவும் முடியும். மேலும் பொருள் வழங்குநர்கள் நிரந்தரமாக அந்நிறுவனங்களுக்கு வழங்கும் போது செலவினங்கள் குறையும். புவியியல் அமைப்பு, தனிநபர் உறவுகளை மேம்படுத்த மட்டுமின்றி, சிறந்த வணிகம் நடைபெறவும் வழிவகை செய்கிறது.  

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொத்தணிக்_கோட்பாடு&oldid=3241871" இலிருந்து மீள்விக்கப்பட்டது