கொம்ப்டன் காம்மா கதிர் அவதான நிலையம்

கொம்ப்டன் காம்மாக் கதிர் அவதான நிலையம் (Compton Gamma Ray Observatory (CGRO)) நாசாவின் "பெரும் அவதான நிலையங்கள்" எனப்படும் விண்வெளி அவதான நிலையங்களில் இரண்டாவது ஆகும். இது ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியைத் தொடர்ந்து, விண்ணுக்கு ஏவப்பட்டது. இந்த அவதான நிலையம், சென். லூயிசில் உள்ள வாஷிங்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர். ஆர்தர் ஹோலி கொம்ப்டன் என்னும் அறிவியலாளரின் பெயர் இடப்பட்டது. கொம்ப்டன், காம்மா கதிர் இயற்பியலில் செய்த ஆய்வுகளுக்காக நோபல் பரிசு பெற்றவர். இது, இன்று நோத்ரோப் குரும்மன் விண்வெளித் தொழில்நுட்பம் என இன்று அழைக்கப்படுகின்ற டிஆர்டப்ளியூ (TRW) நிறுவனத்தினால் அமைக்கப்பட்டது. 14 ஆண்டுகள் உழைப்புக்குப் பின்னர் 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் நாள் அட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்தில், எஸ்டிஎஸ்-37 திட்டத்தில் ஏவப்பட்டது. இது 2000ஆவது ஆண்டு ஜூன் 4 ஆம் நாள், சுற்றுப்பாதையிலிருந்து விலகும் வரை செயல்பட்டது.

கொம்ப்டன் காம்மாக் கதிர் அவதான நிலையம்
Compton Gamma Ray Observatory (CGRO)
கொம்ப்டன் காம்மாக் கதிர் அவதான நிலையம்.
கொம்ப்டன் காம்மாக் கதிர் அவதான நிலையம்
பொதுத் தகவல்கள்
நிறுவனம்நாசா
ஏவிய தேதி ஏப்ரல் 5, 1991
சுற்றுவிலக்கம்ஜூன் 4, 2000
திணிவு17,000 கிகி (37,500 இறா)
சுற்றுப்பாதை வகை கீழ்ப் புவிச் சுற்றுப்பாதை
சுற்றுப்பாதை உயரம் 450 கிமீ (280 மை)
சுற்றுக் காலம் 90 நிமி
அமைவிடம்கீழ்ப் புவிச் சுற்றுப்பாதை
தொலைநோக்கி வகை scintillation detectors
அலைநீளம்காம்மா
விட்டம்NA
குவியத் தூரம் NA
இணையத்தளம்
http://cossc.gsfc.nasa.gov/