கோத்துகள்

கிழக்கு செருமானிய இனக்குழுவினர்

கோத்துகள் என்பவர்கள் ஒரு செருமானிய மக்கள் ஆவர். மேற்கு ரோமானிய பேரரசு வீழ்ச்சியடைந்ததில் இவர்கள் முக்கிய பங்காற்றினர். நடுக்கால ஐரோப்பாவின் வளர்ச்சிக்கும் ஒரு முக்கிய காரணமாக இருந்தனர்.[1][2] தன் புத்தகமான கோத்திகாவில் கோத்துகள் தெற்கு இசுக்காண்டினேவியாவில் இருந்து வந்தனர் என சோர்டனேசு குறிப்பிட்டுள்ளார். எனினும் இது தெளிவான குறிப்பா என்பதில் குழப்பம் நிலவுகிறது. [1]குடோனெசு என்ற மக்களைப் பற்றிக் குறிப்புகள் உள்ளன. இவர்கள் ஆரம்பகால கோத்துகளாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கி.பி. 1 ஆம் நூற்றாண்டில் தென்பகுதி விசுதுலா ஆற்றுக்கு அருகில் இவர்கள் வசித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட வியேல்பார்க் கலாசாரத்துடன் இவர்கள் தொடர்புபடுத்தப்படுகின்றனர்.[1][3] 2ஆம் நூற்றாண்டில் இருந்து வியேல்பார்க் கலாசாரமானது தெற்கு நோக்கி கருங்கடலை நோக்கி விரிவடைந்தது. இது கோத்துகளின் இடம்பெயர்வுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. 3ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செர்னியகோவ் கலாசாரம் உருவாக இது பங்களித்தது.[1][4]

உசாத்துணை தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 Heather 2012, ப. 623. "Goths, a Germanic people, who, according to Jordanes' Getica, originated in Scandinavia. The Cernjachov culture of the later 3rd and 4th cents. AD beside the Black Sea, and the Polish and Byelorussian Wielbark cultures of the 1st–3rd. cents. ad, provide evidence of a Gothic migration down the Vistula to the Black Sea, but no clear trail leads to Scandinavia."
  2. Heather 2018, ப. 673. "a Germanic tribe whose name means 'the people', first attested immediately south of the Baltic Sea in the first two centuries."
  3. Heather 2018, ப. 673. "a Germanic tribe whose name means 'the people', first attested immediately south of the Baltic Sea in the first two centuries."
  4. Pritsak 2005.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோத்துகள்&oldid=3759300" இலிருந்து மீள்விக்கப்பட்டது