கோயி தம்புரான்

திருவிதாங்கூரின் இராணிகளையும். இளவரசிகளையும் திருமணம் செய்து கொள்பவர்களின் பட்டமாகும்

கோயி தம்புரான் (Koyi Thampuran) என்பது திருவிதாங்கூரின் இராணிகளையும். இளவரசிகளையும் திருமணம் செய்து கொள்பவர்களின் பட்டமாகும். கோயி தம்புரான்கள் திருவிதாங்கூர் இராச்சியத்தில் முக்கியத்துவத்தையும் கௌரவத்தையும் பெற்றிருந்தனர். திருவிதாங்கூரில், கோயி தம்புரான்களின் பத்து குலங்கள் இருந்தன. கிளிமானூரில் (ஆற்றிங்கல்) குடியேறியவர்கள் மிகவும் பழமையானவர்கள் ஆவர். மற்றவர்கள் கீர்த்திபுரம் (மாவேலிக்கரா), பள்ளம் (கோட்டயம்), பாளையக்காரர் (திருவல்லா), நீராழி (சங்கனாச்சேரி), அனந்தபுரம் (கார்த்திகபள்ளி), செம்ப்ரோல் (செங்கனூர்), செறுகோல் (பத்தனம்திட்டா), வடக்கேமட்டம் ஆகியவை.

வரலாறு தொகு

 
மகாராஜா சுவாதித் திருநாளின் தந்தை ராஜ ராஜா வர்மம் வல்லிய கோயி தம்புரான்

1310 இல் மாலிக் கபூர் படையெடுப்பிற்குப் பிறகு, வீர உதய மார்த்தாண்டவர்மன், கோலாத்திரி அரச குடும்பத்திலிருந்து அனுப்பப்பட்ட இளவரசிகளுக்கு ஆதரவாக பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது (ஆற்றிங்கல் ராணிகள், குன்னுமேல் ராணிகள்). ரவி வர்மாவுக்குப் பிறகு மன்னர்களின் வரிசை தாய்வழி முறையான மருமக்கதாயம் என்ற சட்டத்தின் மூலம் நாயர்களுக்குத் தொடர்ந்தது. இவ்வாறு, தெற்கு சேர வம்சம் 1310 க்குப் பிறகு தாய்வழி மரபான மருமக்கதாயத்தை ஏற்றுக்கொண்டது. 1310 ஆம் ஆண்டில் ஆற்றிங்கல் மற்றும் குன்னுமேல் இளவரசிகளை வேணாட்டுக்கு தத்து கொடுத்ததன் மூலம், இந்த ராணிகளின் மகன்களுக்கு மட்டுமே மன்னராகும் உரிமை இருந்தது. மேலும் பிரபுக்கள் அல்லாத நாயர் பெண்களிடமிருந்து அரசனின் சொந்த மகன்களுக்கு அடுத்த அரசனாக உரிமை இல்லை. ஆற்றிங்கல் ராணி கேரளாவின் பிற திருமண வம்சங்களிலிருந்து கோலாத்திரி வம்சத்திலிருந்து வேணாடு சேர அரச குடும்பங்கள் இளவரசரையும் இளவரசிகளையும் தத்தெடுக்கத் தொடங்கினார். [1] ரவி வர்மனின் மரணத்திற்குப் பிறகு, கோலாத்திரி அரசக் குடும்பத்திலிருந்து இரண்டு இளவரசிகள் தத்தெடுக்கப்பட்டு, ஆற்றிங்கல்லின் ராணிகளாக நிறுவப்பட்டனர். வேணாடு அரசக் குடும்பம் பெண் வழியில் தொடர்ந்தது. கோலாத்திரி குடும்பத்திலிருந்து இளவரசிகள் தத்தெடுக்கப்பட்டனர். சமீபத்திய தத்தெடுப்பு 1994 இல் நடந்தது. இந்த பாரம்பரியம் வேணாடு குடும்பத்திலிருந்து பல தத்தெடுப்புகளும் கோலாத்திரிக்குச் சென்றன. கோயி தம்புரான்கள் பிரபுத்துவ மனிதர்களாக இருந்தனர். இவர்கள் இந்த ஆற்றிங்கல் ராணிகளுக்கு இளவரசர் அல்லது கணவர்களாக மாறத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். [2]

பட்டமும் நிலையும் தொகு

அரச குடும்பத்தின் பெண்கள் "ஆற்றிங்கல்லின் ராணிகள்" என்று அழைக்கப்பட்டனர். இவர்களுக்கு ஆற்றிங்கல்லின் மூத்த தம்புரான் (மூத்த ராணியின் கணவர்), ஆற்றிங்கல்லின் இளைய தம்புரான்" (இளைய ராணியின் கணவர்), "ஆற்றிங்கல்லின் கொச்சு தம்புரான்" (முதல் இளவரசியின் கணவர்) என்றும் பெயரிடப்பட்டது. [3] சில வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, திருவிதாங்கூர் வம்சத்துடன் நெருங்கிய தொடர்புடைய 10 முக்கிய பிரபுத்துவ வீடுகள் அல்லது அரண்மனைகளிலிருந்து கோயி தம்புரான் அல்லது இளவரசர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மூத்த, இளைய மகாராணிகளின் இளவரசர்கள் முறையே வல்லிய கோயி தம்புரான், கொச்சு கோயி தம்புரான் என்று அழைக்கப்பட்டனர்.

கோயி தம்புரான்கள் ஆற்றிங்கல் ராணிகளைத் திருமணம் செய்ததன் மூலம் கௌரவத்தை அடைந்திருந்தாலும், தங்களது துணைவிகள், அரச குழந்தைகளை விட தாழ்ந்தவர்களாக கருதப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இவர்கள் ராணிகளுடன் ஒரே வாகனங்களில் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை. மேலும் அவர்கள் அருகே அமர அனுமதிக்கப்படவில்லை. இவர்கள் தங்கள் அரச வாழ்க்கைத் துணைவிகளுக்கும் குழந்தைகளுக்கும் மரியாதைக்குரிய அனைத்து அடையாளங்களையும் வழங்க வேண்டும். மேலும், இவர்களுக்கு அரச பட்டங்கள் மட்டுமே பொதுவில் மட்டுமே வழங்கப்பட்டது. இவர்களில் இருவர் தங்கள் துணைவிகள் மீது தங்கள் செல்வாக்கை செலுத்த முயன்றாலும் இவர்களுக்கு இராச்சிய நிர்வாகத்தில் எந்தப் பங்கும் இருந்ததில்லை. திருவிதாங்கூர் அரசனின் பிரபுத்துவமற்ற நாயர் வாழ்க்கைத் துணைவிகளான அம்மச்சி பனபிள்ளை அம்மாக்களின் நிலையுடன் ஒப்பிடும்போது, கோயி தம்புரான்களின் நிலை மிகவும் சிறப்பானதாக இருந்தது. 20 ஆம் நூற்றாண்டில், கோயி தம்புரான்களின் நிலையில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன. 1924 ஆம் ஆண்டில், மகாராணி சேது லட்சுமி பாய் சில எதிர்ப்புகளை மீறி அரசவையில் தனக்கு அடுத்தபடியாக அமர இடமளித்தார். மேலும் மகாராஜா சித்திரை திருநாளின் சகோதரி கார்த்திகை திருநாள் லட்சுமி பாயியின் அப்போதைய இராணுவத்தளபதியான ஜி.வி.ராஜாவுடனானத் திருமணத்துடன் கிட்டத்தட்ட இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டன. அப்போதும் கூட, கோயி தம்புரான்கள் நிர்வாகத்தில் தலையிட அனுமதிக்கப்படவில்லை. மகாராஜா சித்திரை திருநாள் இறுதியில் தனது மைத்துனரான ஜி.வி.ராஜாவிடம், அப்போதைய அரச அரசாங்கத்தில் பதவியும் அதிகாரமும் வழங்கினார்.

பிரபல கோயி தம்புரான்கள் தொகு

 
மகாராணி பரணித் திருநாள் லட்சுமி பாயியை மணந்த கேரள வர்மா வல்லியா கோயி தம்புரான்

மகாராணி பரணித் திருநாள் லட்சுமி பாயியை மணந்த கேரள வர்மா வல்லியா கோயி தம்புரான், மகாராணி கார்த்திகை திருநாள் லட்சுமி பாயியை மணந்த ஜி.வி. ராஜா ஆகியோர் தங்கள் சொந்தத் திறன் அடிப்படையில் பிரபலமாக மாறினர்.

 
மகாராணி கார்த்திகை திருநாள் லட்சுமி பாயியை மணந்த ஜி.வி. ராஜா

கேரள வர்மா வல்லிய கோயி தம்புரான் (1845-1914) கேரளாவின் காளிதாசராக புகழ் பெற்றார். இவர் சட்டமன்ற உறுப்பினராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். கதகளி மீதான இவரது ஆர்வம் இவரை மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் கதகளி பாடல்களை எழுத வைத்தது. இவரது புகழ்பெற்ற படைப்புகள் காளிதாசரின் 'அபிக்ஞான சகுந்தலம்' என்ற மொழிபெயர்ப்பாகும். மலையாள இலக்கியத்தில் முதல் நாடகமான இது, இவருக்கு 'கேரள காளிதாசன்' என்ற பட்டத்தை பெற்றுத் தந்தது. வீட்டுக் காவலில் இருந்தபோது, காளிதாசரின் மேகதூதத்தின் வரிசையில் மயூரசந்தேசம் என்ற கவிதை நூலை எழுதினர். இந்நூலில், திருவனந்தபுரத்தில் இருந்த தனது மனைவி பரணித் திருநாள் லட்சுமி பாயிக்கு தனது செய்திகளை அனுப்ப ஹரிபாடு கோயிலின் மயில்களைப் பயன்படுத்தினார். இவர் 1914 இல் ஒரு வாகன விபத்தில் இறந்தார். [4]

மகாராணியான கார்த்திகை திருநாள் லட்சுமி பாயைத் திருமணம் செய்த பூஞ்சார் வம்சத்தைச் சேர்ந்த கார்த்திகை நாள் கோதவர்மா ராஜா (1908-1971), பிரபலமாக லெப்டினன்ட் கர்னல் ஜி.வி. ராஜா என்று அழைக்கப்பட்டார். கார்த்திகை திருநாளுக்கு 16 வயதை எட்டியவுடன், இவருக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. வழக்கமாக, கோயி தம்புரான்கள் திருவிதாங்கூர் இளவரசிகளுக்கும், ராணிகளுக்கும் மணமகனாக தேர்வு செய்யப்படுவார்கள். [5] உத்திராடம் திருநாளின் கூற்றுப்படி, மகாராஜா சித்திரை திருநாள் மற்றும் சேது பார்வதி பாய் ஆகியோர் கோயில் தம்புரான்களை புறக்கணித்து, பூஞ்சார் அரண்மனையைச் சேர்ந்த பி. ஆர். கோதவர்மா ராஜா என்பவரை திருமணம் செய்து வைத்தனர். [6] இவருக்கு வெளிநாட்டு பிரமுகர்களைக் கையாளும் பொறுப்பு வழங்கப்பட்டது. மேலும் இவர் அப்போதைய அரசின் விளையாட்டு, சுற்றுலா துறைகளின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். ராஜா பின்னர் பல வெளிநாட்டு பிரமுகர்களை அழைப்பதன் மூலமும், கோவளம் அரண்மனையில் விருந்துகளை ஏற்பாடு செய்வதன் மூலமும் கோவளத்தை ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக உருவாக்கினார் என்று கேரள சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது. கேப்டன். திருவாங்கூர் இராணுவத்தின் நாயர் படையணியின் கட்டளை அதிகாரிகளில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டார். இவர் 1949 வரை அதில் பணியாற்றினார் . ராஜா திருவிதாங்கூர் விளையாட்டு அமைப்பு, திருவிதாங்கூர்-கொச்சி துடுப்பாட்டச் சங்கம், திருவிதாங்கூர் அரச விமானச் சஙக்ம் (பின்னர் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்றப்பட்டது), [7] விளையாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பிற இருபது அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களை நிறுவினார். மேலும் கேரளாவில் சுற்றுலா மேம்பாடு மற்றும் மேற்கூறிய நிறுவனங்களின் நிறுவனர் தலைவராகவும் இருந்தார். [8] இவர் மாநிலத்தின் முதல் பயண நிறுவனத்தை 1959 இல் நிறுவினார். [9] திருவனந்தபுரம் விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கும் இவர் முன்முயற்சி எடுத்தார். [10] 1971 ல் விமான விபத்தில் இவர் கொல்லப்பட்டார்.

குறிப்புகள் தொகு

  1. Mateer, Rev. Samuel. Native Life in Travancore : VOL I AD 1883. பக். 388. 
  2. Staff Reporter, Our. "New member in Travancore family". 
  3. Velu Pillai, TK. Travancore State Manal Vol II. பக். 121. 
  4. Datta, Amaresh. The Encyclopaedia Of Indian Literature (Volume Two) (Devraj To Jyoti). Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8126011947. 
  5. Mewat, Mahi. The Indian Encyclopaedia. பக். 4690. 
  6. Uma Maheshwari, S. Thrippadidanam. 
  7. "Trivandrum International Airport, Thiruvananthapuram, Kerala". Airport Technology. பார்க்கப்பட்ட நாள் 14 January 2015.
  8. cricinfo, India. "History of Kerala cricket By Professor AS Balakrishnan". CricInfo 2000. Archived from the original on 4 May 2014. பார்க்கப்பட்ட நாள் 14 January 2015.
  9. Interserve, Kerala Travels. "KTIL". பார்க்கப்பட்ட நாள் 14 January 2015.
  10. "Trivandrum International Airport/History, Wikipedia, the free encyclopedia"Trivandrum International Airport 'The airport was established as part of the Royal Flying Club under the initiative of Colonel Goda Varma Raja, husband of H. H. Princess Karthika Thirunal of Travancore Kingdom.[8] Col G.V Raja, being a trained pilot, felt the need an airport to accommodate Travancore in the aviation map of India. In 1935, on royal patronage of H.H Maharaja Chitra Thirunal, Tata Airlines made its maiden flight to the airport using DH.83 Fox Moth aircraft under command of India's first pilot Nevill Vintcent, carried two passengers Jamshed Navoroji, a Tata company official, and Kanchi Dwarakadas, commercial agent of Travancore to Bombay Presidency along with a special mail from Viceroy of British India, Lord Willingdon wishing birthday greetings to the Maharaja.[9] The first flight from the airport took off on 1 November 1935, carrying mails of Royal Anchal (Travancore Post) to Bombay. Soon in 1938, the Royal Government of Travancore acquired a Dakota aircraft as Maharajah's private aircraft and placed 1st Squadron of Royal Indian Air Force (Travancore) for protection of State from aerial attacks.'
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோயி_தம்புரான்&oldid=3179879" இலிருந்து மீள்விக்கப்பட்டது