கோவிந்த் நரேன்

கோவிந்த் நரேன் (Govind Narain) என்பவர் (5 மே 1916 – 3 ஏப்ரல் 2012) ஒரு இந்தியக் குடிமைப் பணி அதிகாரி ஆவார். நரேன் கர்நாடகாவின் 8வது ஆளுநராக பணியாற்றினார்.

கோவிந் நரேன்
8வது கருநாடக ஆளுநர்
பதவியில்
2 ஆகத்து 1977 – 15 ஏப்ரல் 1983
முன்னையவர்உமா சங்கர் தீட்சித்
பின்னவர்அஷோக்நாத் பானர்ஜி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1916-05-05)5 மே 1916
மைன்புரி, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு3 ஏப்ரல் 2012(2012-04-03) (அகவை 95)
புது தில்லி, இந்தியா

இவர் முன்னர் இந்தியாவின் 12வது பாதுகாப்பு செயலாளராக 1973 முதல் 1975 வரையும், இந்தியாவின் உள்துறை செயலாளராக 1971 முதல் 1973 வரையும் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் தலைமைச் செயலாளராக 1958 முதல் 1961 வரையும் பணியாற்றி உள்ளார்.[1] இவர் 1951 முதல் 1954 வரை நேபாள மன்னரின் ஆலோசகராகவும் செயலாளராகவும் பணியாற்றினார்.

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும் தொகு

நரேன் உத்தரப்பிரதேசத்தின் மைன்புரியில் காயஸ்தா குடும்பத்தில் பிறந்தார். அலகாபாத் பல்கலைக்கழகம் மற்றும் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்தார்.

பணி தொகு

நரேன் 1939-ல் இந்தியக் குடிமைப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இப்பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு இந்தியாவின் உள்துறை செயலாளராகவும், இந்தியாவின் பாதுகாப்பு செயலாளராகவும் இருந்தார். உள்துறை செயலாளராக, 1971 இந்திய-பாகிஸ்தான் போரின் போது இவர் முக்கிய பங்கு வகித்தார். பின்னர் இவர் பாதுகாப்பு செயலாளராக ஆனார். 1973 மற்றும் 1975க்கு இடையில் இவர் பதவி வகித்தார். இவர் உத்தரப்பிரதேசத்தின் தலைமைச் செயலாளராகவும் இருந்தார். மேலும் நேபாள மன்னரின் ஆலோசகராக 1951-ல் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான உறவுகளை உருவாக்கப் பணியமர்த்தப்பட்டார்.

அரசியல் வாழ்க்கை தொகு

நரேன், கர்நாடகாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1977 மற்றும் 1983க்கு இடையில் இவர் பதவியில் இருந்தார். இவருக்கு 2009ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம விபூசண் விருதினை வழங்ககியது.

மேற்கோள்கள் தொகு

  1. "Bangladesh war-era Home Secretary Govind Narain dies". 4 April 2012.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவிந்த்_நரேன்&oldid=3454653" இலிருந்து மீள்விக்கப்பட்டது