கோவூர் (Kovur) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் இருக்கும் மண்டலத் தலைமையிடம் மற்றும் கணக்கெடுப்பில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.

கோவூர்
Kovur
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்நெல்லூர்
ஏற்றம்15 m (49 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்48,512
மொழிகள்
 • அலுவல்பூர்வம்தெலுங்கு
நேர வலயம்இ.சீ.நேIndian Standard Time (ஒசநே+5:30)
அ.கு.எண் -->524137
தொலைபேசிக் குறியீடு08622

புவியியல் அமைப்பு தொகு

14.4833° வடக்கு 79.9833° கிழக்கு[1] என்ற அடையாள ஆள்கூறுகளில் கோவூர் கிராமம் பரவியுள்ளது.மேலும், கடல் மட்டத்தில் இருந்து 15 மீட்டர்கள் (52 அடி) உயரத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது

மக்கள் தொகையியல் தொகு

இந்திய நாட்டின் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி[2] கோவூர் நகரத்தின் மக்கள் தொகை 48,512 ஆகும். இத்தொகையில் 52.67% சதவீதத்தினர் ஆண்கள் மற்றும் 47.4 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். சராசரியாக இக்கிராமத்தின் படிப்பறிவு 79% ஆகும். இது ஆந்திரப் பிரதேசத்தின் சராசரி படிப்பறிவு சதவீதமான 68.7% என்பதை விட அதிகமாகும். ஆண்களின் படிப்பறிவு சதவீதம் 82.14% ஆகவும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 78.11 ஆகவும் இருந்தது.

அரசியல் தொகு

ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தொகுதியாக கோவூர் விளங்குகிறது. 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், நெல்லூர் மாவட்டத்தின் மிகப்பெரிய சட்டப்பேரவைத் தொகுதியான இங்கு 2,53,095 பதிவுபெற்ற வாக்காளர்கள் இருந்தனர்.

தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொகு

தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்:[3]

  • 1978 - பெல்லகுரு ராமச்சந்திர ரெட்டி
  • 1983, 1985 மற்றும் 1989 - நல்லப்பரெட்டி சிறீனிவாசுலு ரெட்டி
  • 1993, 1994 மற்றும் - நல்லப்பரெட்டி பிரசன்ன குமார் ரெட்டி[4]
  • 2004 - பொலம்ரெட்டி சிறீனிவாசுலு ரெட்டி
  • 2009 - நல்லப்பரெட்டி பிரசன்ன குமார் ரெட்டி
  • 2012- நல்லப்பரெட்டி பிரசன்ன குமார் ரெட்டி *2014- பொலம்ரெட்டி சிறீனிவாசுலு ரெட்டி

மேற்கோள்கள் தொகு

  1. Falling Rain Genomics.Kovur
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  3. "Election Commission of India. AP Assembly results.1978-2004". Archived from the original on 2007-09-30. பார்க்கப்பட்ட நாள் 2016-01-17.
  4. "123telugu.com.AP Assembly results 2009". Archived from the original on 2009-06-06. பார்க்கப்பட்ட நாள் 2016-01-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவூர்&oldid=3575189" இலிருந்து மீள்விக்கப்பட்டது