கோஸ்ட்டா ரிக்கா தேசிய காற்பந்து அணி

கோஸ்ட்டா ரிக்கா தேசிய காற்பந்து அணி (Costa Rica national football team), இரசிகர்களால் லா செலெ அல்லது லாசு டைக்கோசு என்றழைக்கப்படும் தேசிய அணி கோஸ்ட்டா ரிக்காவின் சார்பாக பன்னாட்டு காற்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடுகிறது. இதனை கோஸ்ட்டா ரிக்கா காற்பந்துக் கூட்டமைப்பு (Federación Costarricense de Fútbol) மேலாண்மை செய்கிறது. வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பில் மெக்சிக்கோ, ஐக்கிய அமெரிக்காவை அடுத்து மூன்றாவது மிகவும் வெற்றிகரமான அணியாக விளங்குகிறது. நடு அமெரிக்காவில் மிகவும் வெற்றிகரமான அணியாக நான்கு உலகக்கோப்பைகளில் இறுதிப் போட்டிகளில் விளையாடத் தகுதிப் பெற்றுள்ளது. இத்தாலியில் நடந்த 1990 உலகக்கோப்பையில் கடைசி பதினாறுவர் சுற்றினை எட்டியுள்ளது. 2006இல் செருமனியில் நடந்த உலகக்கோப்பையில் மிகவும் மோசமாக விளையாடி 32 அணிகளில் 31வது இடத்தை பிடித்தது.

கோஸ்ட்டா ரிக்கா
Shirt badge/Association crest
அடைபெயர்டைகோசு
லா செலெ
கூட்டமைப்புகோஸ்ட்டா ரிக்கா கால்பந்துக் கூட்டமைப்பு
மண்டல கூட்டமைப்புUNCAF (நடு அமெரிக்கா)
கண்ட கூட்டமைப்புவட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு
தலைமைப் பயிற்சியாளர்ஜோர்ஜ் லூயி பின்ட்டோ[1]
அணித் தலைவர்பிரியன் ரூயிசு
Most capsவால்ட்டர் சென்டெனோ (137)
அதிகபட்ச கோல் அடித்தவர்ரொலன்டோ ஃபோன்செகா (47)
தன்னக விளையாட்டரங்கம்எசுடேடியோ நேசியோனல் டெ கோஸ்ட்டா ரிக்கா (2011)
பீஃபா குறியீடுCRC
பீஃபா தரவரிசை31 2
அதிகபட்ச பிஃபா தரவரிசை17 (மே 2003)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை93 (சூலை 1996)
எலோ தரவரிசை31
அதிகபட்ச எலோ14 (மார்ச்சு 1960)
குறைந்தபட்ச எலோ81 (மார்ச்சு 1983)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 கோஸ்ட்டா ரிக்கா 7–0 எல் சல்வடோர 
(குவாத்தமாலா நகரம், குவாத்தமாலா; 14 செப்டம்பர் 1921)
பெரும் வெற்றி
 கோஸ்ட்டா ரிக்கா 12–0 புவேர்ட்டோ ரிக்கோ 
(பர்ரான்குய்யிலா, கொலொம்பியா; 10 திசம்பர் 1946)
பெரும் தோல்வி
 மெக்சிக்கோ 7–0 கோஸ்ட்டா ரிக்கா கோஸ்ட்டா ரிக்கா
(மெக்சிக்கோ நகரம், மெக்சிக்கோ; 17 ஆகத்து 1975)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்4 (முதற்தடவையாக 1990 இல்)
சிறந்த முடிவுபதினாறுவர் சுற்று; 1990
கான்காகேஃப் தங்கக்கோப்பை
பங்கேற்புகள்15 (முதற்தடவையாக 1963 இல்)
சிறந்த முடிவுவாகையர்; 1963, 1969,
1989
கோபா அமெரிக்கா
பங்கேற்புகள்4 (முதற்தடவையாக 1997 இல்)
சிறந்த முடிவுகால்-இறுதி; 2001, 2004

வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பின் தங்கக்கோப்பைப் போட்டிகளில் மூன்றுமுறை (1963, 1969, 1989) வெற்றி பெற்றுள்ளது. நடு அமெரிக்க நாடுகளின் கோப்பையை ஏழு முறை வென்றுள்ளது. நான்கு முறை பங்கேற்ற கோபா அமெரிக்கா போட்டிகளில் 2001இலும் 2004இலும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

மேற்சான்றுகள் தொகு