க. ரா. இராமசாமி

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி

க. ரா. இராமசாமி (ஆங்கிலம்: K. R. Ramasamy) ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சேவகர், மற்றும் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு, தொடர்ச்சியாக ஐந்துமுறை [1] இந்திய தேசிய காங்கிரசு மற்றும் த.மா.கா கட்சிகளின் சார்பாக திருவாடாணை சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1989, 1991, 1996, 2001 மற்றும் 2006 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4][5][6] தொடர்ந்து 2016 ஆவது ஆண்டில் நடைபெற்ற 2016 சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார்.

கே. ஆர். இராமசாமி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇ.தே.கா
துணைவர்சாந்தி
பிள்ளைகள்காரியமாணிக்கம் & ராசாத்தி
வாழிடம்(s)தேவகோட்டை, தமிழ்நாடு, இந்தியா
வேலைஉழவர் & சமூகப்பணி

சிறப்பு தொகு

இவர் தமிழ்நாடு பொது கணக்குக்குழு தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.[7][8][9] இவரது தந்தை கரியமாணிக்கம் அம்பலம் திருவாடானை சட்டமன்றத் தொகுதியிலிருந்து நான்குமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.[10]

வகித்த பதவிகள் தொகு

சட்டமன்ற கட்சித் தலைவர் தொகு

ஆறாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற இவர் காங்கிரசு கட்சியின் சட்டமன்ற தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[11]

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
2016 காரைக்குடி இ.தே.கா 46.40
2006 திருவாடானை இ.தே.கா 46.94
2001 திருவாடானை த.மா.கா 39.12
1996 திருவாடானை த.மா.கா 61.77
1991 திருவாடானை இ.தே.கா 62.92
1989 திருவாடானை இ.தே.கா 35.56

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-23. பார்க்கப்பட்ட நாள் 2012-02-22.
  2. eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1989/StatisticalReportTamilNadu89.pdf
  3. eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1991/StatisticalReport-Tamil%20Nadu91.pdf
  4. eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1996/StatisticalReport-TN96.pdf
  5. eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2001/Stat_Rep_TN_2001.pdf
  6. eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2006/StatReport_TN_2006.pdf
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-03-21. பார்க்கப்பட்ட நாள் 2012-04-19.
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-04-06. பார்க்கப்பட்ட நாள் 2012-04-19.
  9. http://www.hindu.com/2007/07/27/stories/2007072751100300.htm[தொடர்பிழந்த இணைப்பு]
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-05-26. பார்க்கப்பட்ட நாள் 2012-04-19.
  11. "கே. ஆர். இராமசாமி நியமனம்". தினத்தந்தி செய்தித்தாள். 31 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 31 மே 2016.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._ரா._இராமசாமி&oldid=3597773" இலிருந்து மீள்விக்கப்பட்டது