சக்காரா மன்னர்கள் பட்டியல்

சக்காரா மன்னர்கள் பட்டியல் (Saqqara Tablet), புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட 19-ஆம் வம்சத்தின் மூன்றாம் பார்வோன் இரண்டாம் ராமேசஸ் ஆடசிக் காலத்தில் (கிமு 1279 - கிமு 1213), சக்காரா நகரத்தில், 58 எகிப்திய மன்னர்கள் பட்டியல் செவ்வக வடிவலான கற்பலகையில், குறுங்கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்டுள்ளது. 1861-ஆம் ஆண்டில் சக்காரா தொல்லியல் களத்தில் கணடுபிடிக்கப்பட்ட இம்மன்னர்கள் பட்டியல், தற்போது எகிப்திய அருங்காட்சியகத்தில் உள்ளது.[1]

மன்னர் இரண்டாம் ராமேசஸ் வடித்த அபிதோஸ் மன்னர்கள் பட்டியல், கர்னாக் மன்னர்கள் பட்டியல் துரின் மன்னர்கள் பட்டியல்களில், முதல் வம்ச மன்னர்கள் தொடங்கி, இறுதியாக 19-ஆம் வம்ச மன்னர்கள் வரை பெயர்கள் பொறிக்கப்பட்டது. ஆனால் சக்காரா மன்னர்கள் பட்டியலில் 19-ஆம் வம்ச மன்னர்கள் பெயர்கள் தொடங்கி, இறுதியாக முதல் வம்ச மன்னர்கள் பெயர்கள் வரை குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் இரண்டாம் இடைநிலைக் காலத்தில் எகிப்தை ஆண்ட எகிப்தியர் அல்லாத ஐக்சோஸ் போன்ற இன மன்னர்களின் பெயர்கள் பொறிக்கப்படவில்லை. மேலும் எகிப்தின் இறை நம்பிக்கையை மீறி ஆட்சி செய்த எகிப்திய மன்னர் அக்கெனதெனின் பெயரும் இப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை. [2]

செவ்வக வடிவிலான கற்பலகையில், 58 மன்னர்களின் பெயரும் குறுங்கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது. அவைகளில் பல மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ள்து. [3] [4]

சக்காரா மன்னர்கள் பட்டியலின் வரைபடம், ஆண்டு 1864-65. வெள்ளை நிறப்பகுதிகள் சிதிலமடைந்துள்ளது.

சக்காரா மன்னர்கள் பட்டியல் தொகு

சக்காரா மன்னர்களின் பட்டியலில் 19-ஆம் வம்ச மன்னர்களின் பெயரிலிருந்து, முதல் வம்ச மன்னர்கள் பெயர் வரை 58 பார்வோன்கள் பெயர்கள் குறிக்கப்பட்டடுள்ளது. இப்பட்டியலை மேல் வரிசையின் வலது புறத்திலிருந்து, கீழ் வரிசையின் இடது புறமாக படிக்க வேன்டும்.

மேல் வரிசை கீழ் வரிசை
எண் பார்வோன் பெயர் கல்வெட்டில் பெயர் எண் பார்வோன் பெயர் கல்வெட்டில் பெயர்
1 இரண்டாம் ராமேசஸ் யுசர்-மாத்-செதெப்-இன்-ரா 30 நெபரேப்பிரே கா-நெபர்-ரா
2 முதலாம் சேத்தி மென்-மாத்-ரா 31 செப்செஸ்கரெ செப்செஸ்-கா-ரா
3 முதலாம் ராமேசஸ் மென்-பெஹ்தி-ரா 32 நெபரிர்கரே ககை நெபர்-இர்-க-ரா
4 ஹொரெம்ஹெப் ஜேசெர்-கெபெரு-ரா-செதெப்-இன்-ரா 33 சகுரா சகுரா
5 மூன்றாம் அமெனம்ஹத் நெப்-மாத்-ரா 34 யுசர்காப் யுசர்-கா-இப்
6 நான்காம் தூத்மோஸ் மென்-கெப்பெரு-ரா 35 தம்திஸ்? பெயர் அழிந்துள்ளது
7 இரண்டாம் அமென்கோதேப் ஆ-கெபெரு-ரா 36 பிச்செரிஸ்? பெயர் அழிந்துள்ளது
8 மூன்றாம் தூத்மோஸ் மென்-கெபெர்-ரா 37 ஜெத்தெப்பிதா பெயர் அழிந்துள்ளது
9 இரண்டாம் தூத்மோஸ் ஆ-கெப்பெர்-இன்-ரா 38 செப்செஸ்காப் பெயர் அழிந்துள்ளது
10 முதலாம் தூத்மோஸ் ஆ-கெப்பெர்-கா-ரா 39 மென்கௌரே பெயர் அழிந்துள்ளது
11 முதலாம் அமென்கோதேப் ஜெசெர்-கா-ரா 40 காப்ரா காப்-ரா
12 முதலாம் அக்மோஸ் நெப்-பெஹ்தி-ரா 41 ஜெதெப்பிரே ஜெத்-எப்-ரா
13 இரண்டாம் மெண்டுகொதேப் நெப்ஹெப்பெத்ரே 42 கூபு கூபு
14 மூன்றாம் மெண்டுகொதேப் செ-ஆங்க்-கா-ரா 43 சினெபெரு சினெபெரு
15 முதலாம் அமெனம்ஹத் செ-ஹெதெப்-இப்-ரா 44 ஹுனி ஹுனி
16 முதலாம் செனுஸ்ரெத் கெப்பர்-கா-ரா 45 நெப்கா நெப்-கா-ரா
17 இரண்டாம் அமெனம்ஹத் நூப்-கௌ-ரா 46 செகெம்கெத் ஜோசெர்-தேத்தி
18 இரண்டாம் செனுஸ்ரெத் கா-கெப்பர்-ரா 47 ஜோசெர் ஜோசெர்
19 மூன்றாம் செனுஸ்ரெத் கா-கௌ-ரா 48 காசெகெம்வி பேபி
20 மூன்றாம் அமெனம்ஹத் நி-மாத்- ரா 49 ஹட்ஜெபா பெயர் அழிந்துள்ளது.
21 நான்காம் அமெனம்ஹத் மாத்-கெரு-ரா 50 செக்கெமிப்-பெரென்மாத்? நெபர்-கா-சோகர்
22 சோபெக்நெபரு (இராணி) சோபெக்-கா-ரா 51 சேத்-பெரிப்சென்? நெபர்-கா-ரா
23 இரண்டாம் பெப்பி நெபர்-கா-ரா 52 செனெத்ஜ் செனெத்ஜ்
24 மெரென்ரே நெம்தியம்சாப் I மெர்-என்-ரா 53 வெனெக் வாத்ஜ்லாஸ்
25 முதலாம் பெப்பி பெப்பி 54 நய்நெத்செர் பா-நெத்-ஜெரு
26 தேத்தி தேத்தி 55 ரனெப் காகௌ
27 உனாஸ் உனீஸ் 56 ஹோதெப்செகெம்வி பவ்-நெத்-ஜெர்
28 ஜெத்கரே இசேசி மாத்-கா-ரா 57 குவா கியு-பெகு
29 மென்கௌஹோர் கையூ மென்-கௌ-ஹோர் 58 அனெத்ஜிப் மெர்பாபென்

புது எகிப்து இராச்சியத்தினரின் பிற மன்னர்கள் பட்டியல் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Robert Morkot. The Egyptians: An Introduction. Routledge, 2005. ISBN 0-415-27103-7. Page 74.
  2. Quoted from: Gerald Verbrugghe, John Moore Wickersham. Berossos and Manetho, Introduced and Translated. University of Michigan Press, 2001. Page 104.
  3. de Rougé, Emmanuel (1865). Album photographique de la mission remplie en Égypte. Paris. பக். 152, photographs 143–145. 
  4. Hawass, Zahi (2010). Inside the Egyptian Museum with Zahi Hawass. Cairo: American Univ in Cairo Press. பக். 299, photographs 156-157. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789774163722. 

ஆதார நூற்பட்டியல் தொகு

  • Auguste Mariette: La table de Saqqarah in Revue Archeologique Vol 10, Paris 1864, p. 168-186, Pl. 17
  • Emmanuel de Rougé: Album photographique de la mission remplie en Égypte, Paris 1865, Photographs, No. 143-145
  • Auguste Mariette: Monuments divers recueillis en Égypte et en Nubie (Tables), Paris 1872, Vol. II, Pl. 58
  • Eduard Meyer: Ägyptische Chronologie, Pl. 1, (Berlin 1904)