சத்துருக்கொண்டான் படுகொலை

சத்துருக்கொண்டான் படுகொலை (Sathurukondan massacre) 1990 செப்டம்பர் 9 அன்று இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் சத்துருக்கொண்டான் பகுதியில் தங்கியிருந்த 184 இலங்கைத் தமிழ் அகதிகள் இலங்கை அரச படைகளால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆகும்.[1][2][3][4][5] இது தொடர்பாக இலங்கை அரசு இரு விசாரணைக் குழுக்களை அமைத்தும், எவரும் கைது செய்யப்படவில்லை.

சத்துருக்கொண்டான் படுகொலைகள்
சத்துருக்கொண்டான் படுகொலை is located in இலங்கை
சத்துருக்கொண்டான் படுகொலை
இடம்மட்டக்களப்பு, இலங்கை
ஆள்கூறுகள்7°42′58″N 81°42′0″E / 7.71611°N 81.70000°E / 7.71611; 81.70000
நாள்செப்டம்பர் 9, 1990 (+6 கி.இ.நே)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
இலங்கைத் தமிழ் பொதுமக்கள்
தாக்குதல்
வகை
வெட்டி, எரியூட்டப்படல்
ஆயுதம்வாள்கள், கத்திகள்
இறப்பு(கள்)184
காயமடைந்தோர்1
தாக்கியோர்இலங்கை படைத்துறை

இச்சம்பவத்தை விசாரணை செய்த நீதிபதியின் அறிக்கைப்படி 27 வயதான மோகன சுந்தரி எனும் தாயும் அவரது 3 மாதக்குழந்தையும் படையினரால் "மண்ணா" கத்திகளால் சாகும்வரை குத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டனர்.[3] அத்தோடு 5 கைக்குழந்தைகள், 42 பத்துவயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டுள்ளனர்.[3]

படுகொலைகள் தொகு

சத்துருக்கொண்டான் கிராமம் மட்டக்களப்பு நகருக்கு அருகே அமைந்துள்ளது. 1990 செப்டம்பர் 9 மாலை 5:30 மணியளவில், சீருடை அணிந்த இராணுவத்தினரும், மற்றும் சில ஆண்களும் கிராமத்தினுள் நுழைந்து கிராம மக்கள் அனைவரையும் வீதியில் கூடுமாறு பணித்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள இராணுவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். விசாரணைகள் முடிந்த பின்னர் அவர்கள அனைவரும் விடுவிக்கப்படுவர் என அவர்கள் உறுதியளிக்கப்பட்டனர்.

இத்தாக்குதலில் உயிர் தப்பியதாகக் கருதப்படும் ஒரேயொருவர் கந்தசாமி கிருஷ்ணகுமார் (அகவை 21). இவர் பின்னர் கொடுத்த சாட்சியத்தில்:

ஐம்பது கொமாண்டோக்கள் தம்மில் 150 பேரை சத்துருக்கொண்டான் இராணுவ முகாமிற்குக் கொண்டு சென்றனர். தாம் அங்கு செல்லும் போது மாலை 7.00 அல்லது 8.00 மணியிருக்கலாம். இவர்களில் இருந்து பிரிக்கப்பட்ட நான்கு பேர் கத்திகளாலும், வாள்களாலும் தாக்கப்பட்டு முகாமிற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டனர். மீதமிருந்த அனைவரும் டயர்களுடன் சேர்த்து எரிக்கப்பட்டனர்.[1]

காயமடைந்த கிருஷ்ணகுமார் இருட்டில் மறைந்து ஒருவாறு தப்பி வெளியேறினார். மொத்தம் 184 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.[1][3][6]

நீதி விசாரணை தொகு

இலங்கை அரசாங்கத்தினால், இப்படுகொலைச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்தவென இரு விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. ஓய்வுபெற்ற நீதிபதி கே. பாலகிட்ணர் இவ்விசாரணைகளை நடத்தவென அக்காலத்தில் ஆட்சியிலிருந்த பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டார். நீதிபதி தனது அறிக்கையில் படுகொலை நிகழ்ந்ததற்கான வலுவான சாட்சியங்கள் இருப்பதாகவும் குற்றவாளிகளுக்கெதிரான கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் சனாதிபதியை வேண்டிக்கொண்டார். இதுவரை இவ்வாறான சட்ட நடவடிக்கைகளோ, காவல்துறை விசாரணைகளோ மேற்கொள்ளப்பட்டதாக தகவலெதுவும் இல்லை.

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "The massacre at Sathurukondan: 9th September 1990 – Report 8". யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு. பார்க்கப்பட்ட நாள் 8 செப்டம்பர் 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Chapter 45: War continues with brutality". Asia Times. Archived from the original on 2012-07-21. பார்க்கப்பட்ட நாள் 8 செப்டம்பர் 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |= ignored (help)
  3. 3.0 3.1 3.2 3.3 "Batticaloa massacre victims remembered". தமிழ்நெட். பார்க்கப்பட்ட நாள் 8 செப்டம்பர் 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Towards reconciliation". Dailynews. பார்க்கப்பட்ட நாள் 8 செப்டம்பர் 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "World Report 2000: Sri Lanka". மனித உரிமைகள் கண்காணிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 8 செப்டம்பர் 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "Arrests and subsequent disappearances from the village of Sathurukondan and other Villages". Archived from the original on 2006-10-24. பார்க்கப்பட்ட நாள் 4 சூலை 2007.

வெளி இணைப்புக்கள் தொகு