சந்த் கபீர் விருது

சந்த் கபீர் விருது (Sant Kabir Award) என்பது கைத்தறி பாரம்பரியத்தை உயிரோடு வைத்திருப்பதில் மதிப்புமிக்க பங்களிப்பைச் செய்கின்ற சிறந்த நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இந்திய அரசு விருது ஆகும். பாரம்பரியமான திறமைகளையும் வடிவமைப்புகளையும் பற்றிய அறிவைப் பரவலாக்குதன் மூலம் கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையிலான தொடர்புகளை உருவாக்க வேண்டும் என்பதற்காக  இந்திய அரசால் உருவாக்கப்பட்டதாகும்.[1]

15 ஆம் நூற்றாண்டின் விசித்திரமான கவிஞரும் இந்தியாவின் ஆன்மீக கவிஞரும் துறவியுமான கபீர் தாசரை நினைவு செய்யும் விதமாக  இந்த விருதுக்கு இப்பெயரிடப்பட்டது.

1965 இல் அறிமுகப்படுத்தப்பட்ட  இந்த விருதானது திறமை வாய்ந்த கைவினைக் கலைஞர்கள், நெசவாளர்களுக்காகவும் இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகிறது.[2]

தொகுத்துணர்தல் தொகு

ஒவ்வொரு ஆண்டும், வெற்றி பெறுபவர்களை இரண்டு கட்ட தேர்வு முறைகள் பயன்படுத்தப்படுகிறது. முதல் கட்ட தேர்வு அந்தந்த மண்டல இயக்குநர்களின் மட்டத்தில் செய்யப்படும். இறுதித் தேர்வானது கைத்தறி மேம்பாட்டு ஆணையாளரின் உயர்மட்ட தேர்வுக் குழுவால் செய்யப்படுகிறது. விருதானது ஒருதங்க நாணயமும், ஒரு சால்வையும், மேற்கோள்கள் அடங்கிய சான்றிதழையும் கொண்டுள்ளது. இது தவிர, ஒரு வருட காலப் பகுதியில் 10 விதமான புதிய, உயர்ந்த சிறப்பம்சங்களுடைய, மேன்மையான, உயர்தரமான அழகியல் பொருட்களை உற்பத்தி செய்வதற்காகவும் ரூ. 6 லட்சம் நிதி உதவியும் வழங்கப்படும்.[3]

மேலும் இந்திய அரசானது, இனக் கலவரங்களின் போதும் இன மோதல்களின் போதும் தைரியமாக செயல்பட்டவர்களை பாராட்டும் விதமாக 1990 ஆம் ஆண்டு முதல் கபீர் புரஸ்கார் விருதை (Kabir Puraskar award) இந்திய உள்துறை அமைச்சகம் வழங்குகிறது.[4]

குறிப்புகள் தொகு

  1. "Guidelines for Sant Kabir Award" (PDF). Office of development Commissioner of Handlooms. Archived from the original (PDF) on 19 மார்ச் 2013. பார்க்கப்பட்ட நாள் 23 November 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "President to confer National Awards, Shilp Guru Awards and Sant Kabir Awards Tomorrow". President of India website. : 08-11-2012. பார்க்கப்பட்ட நாள் 2013-09-16. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "Mukherjee to confer national awards, Shilp Guru awards, Sant Kabir awards". Samachar.com. 8 November 2012. Archived from the original on 2 February 2013. Retrieved 23 November 2012.
  4. "Nominations for Kabir Puraskar Invited". Press Information Bureau, Ministry of Home Affairs. June 4, 2012. Retrieved 2014-05-21.

வெளி இணைப்புகள் தொகு

  • "Sant Kabir Award". Development Commissioner for Handlooms. Archived from the original on 2014-06-17. பார்க்கப்பட்ட நாள் 2020-03-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்த்_கபீர்_விருது&oldid=3793939" இலிருந்து மீள்விக்கப்பட்டது