சமஸ்கிருதி அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடம்

சமஸ்கிருதி அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடம் (Sanskriti Museum & Art Gallery) என்பது [1] இந்தியாவில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு அருங்காட்சியகம் ஆகும். புலு இமாம் என்பவரால் 1991 ஆம் ஆண்டில் அவர் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள இஸ்கோ என்னும் இடத்தில் முதன் முதலாக பாறை ஓவியத்தை கண்டுபிடித்த பின்னர் நிறுவப்பட்ட அருங்காட்சியகம் ஆகும். அதனைக் கண்டுபிடிப்புக்குப் பின்னர், இந்தியாவில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வட கரன்புரா பள்ளத்தாக்கின் அவர் அதிக எண்ணிக்கையிலான வரலாற்றுக்கு முந்தைய தொல்பொருள் உட்பட மீசோ-சால்கோலிதிக் பாறை ஓவியங்களைக் கண்டுபிடித்து அவற்றை வெளியுலகின் பார்வைக்குக் கொண்டு வந்தார்.[2]

சமஸ்கிருதி அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடம்
Map
நிறுவப்பட்டது1991
அமைவிடம்சமஸ்கிருதி மையம், ஹசாரிபாக்
வகைதொல்பொருள், மானுடவியல், பழங்குடியினர் கலை
இயக்குனர்புலு இமாம்
வலைத்தளம்Official website

சமஸ்கிருதி அருங்காட்சியகத்தில் பழைய கற்காலம் மற்றும் புதிய கற்கால காலங்களைச் சேர்ந்த கல் கருவிகள், நுண்கல், மற்றும் வெண்கலம் முதல் இரும்புக் காலத்தைச் சேர்ந்தவை உள்ளிட்ட பல கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் பானைகள் செய்தல் தொடர்பானவையும் அங்கு உள்ளன. மற்றும் ஹசாரிபாக் பகுதியைச் சுற்றிலும் கண்டுபிடிக்கப்பட்ட பௌத்தம் தொடர்பான கலைப்பொருள்களும் அங்கு உள்ளன. [3] இங்கு பிர்ஷர்கள், சந்தாலிகள், மற்றும் குருக் என்று அழைக்கப்படுகின்ற ஓரவோன் [4] இன மக்கள் தொடர்பான பல கலைப்பொருள்கள் உள்ளன. இந்த இன மக்களின் வாழ்க்கை அமைப்பு, நாட்டுப்புறப் பாடல்கள், தாவரத் தொடர்பியல் உள்ளிட்டவற்றைக் கொண்ட அனைத்துப் பொருண்மைகளும் இங்குள்ள அருங்காட்சியக ஆய்வுக் காப்பகம் மற்றும் நூலகத்தில் கிடைக்கிறது. இது ஒரு காட்சிக்கூடத்தையும் கொண்டு அமைந்துள்ளது. அந்தக் காட்சிக்கூடத்தில்   உள்ளூர் கைவினைப்பொருட்கள் மற்றும் ஜவுளி, மற்றும் ஹசாரிபாக்கின் சுமார் 200 கோவர் (திருமணக் கலை) மற்றும் சோஹ்ராய் (அறுவடை கலை) தொடர்பான ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. [5]

இந்த அருங்காட்சியகம் தற்போது அவரது தனியார் [6] கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இது 3 ஏக்கர் வளாகத்தில் மரங்களைக் கொண்டிருந்த இடத்தில் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் (1919) தேயிலைத் தோட்ட மாவட்ட தொழிலாளர் சங்க கட்டிடமாக இயங்கி வந்தது. மரங்களின் தோப்பு இருந்தது.

சமஸ்கிருதி அருங்காட்சியகத்தில் ஒரு சிறிய நூலகம் மற்றும் ஒரு ஆய்வு ஆவணக் காப்பகம் ஆகியவை உள்ளன. மேலும் புகைப்பட மற்றும் காட்சி ஆவணங்கள் அருங்காட்சியகத்தில் உள்ள கண்காட்சிகளை படி எடுக்கும் வசதிகளைக் கொண்டு அமைந்துள்ளன. நூலகத்தில் அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடம் ஆகியவற்றில் ஆவணங்கள், நூல்கள், நாளிதழ்கள் மற்றும் செய்தி மடல்கள் உள்ளிட்ட பல வெளியீடுகள் உள்ளன. [7]

சமஸ்கிருதி அருங்காட்சியகக் கட்டிடம்

அருங்காட்சியகச் சேகரிப்புகள் தொகு

இந்த அருங்காட்சியகத்தில் மூன்று முக்கிய காட்சிக் கூடங்கள் உள்ளன. அவை தொல்பொருள் காட்சிக்கூடம், இனவியல் காட்சிக்கூடம், மற்றும் பழங்குடி கலை மற்றும் கைவினைப் பொருள்கள் காட்சிக்கூடம் ஆகியவையாகும்.

 
வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவை
 
சால்கோலிதிக் மற்றும் இரும்புக்காலத்தைச் சேர்ந்தவை

சிறப்புகள் தொகு

இந்த அருங்காட்சியகம் கோவர் மற்றும் சோக்ராஜ் ஆகியோரின் ஓவியங்களுக்குப் பெயர் பெற்றதாகும். அவை பல பாணிகளில் இங்கு அமைந்துள்ளன. கலைக்கூடத்திற்கு அருகில் அமைந்துள்ள பல வீடுகளின் சுவர்கள் அழகாக வண்ணம் அடிக்கப்பட்ட நிலையில் அமைந்துள்ளன. இஸ்கோவின் குகை ஓவியங்கள் இந்த அருங்காட்சியக உட்பகுதியின் முக்கியமான அம்சமாக அமைந்துள்ளது. [8]

பார்வையாளர்கள் குறிப்பு தொகு

நகரிலிருந்து மிக எளிதில் சென்று அடையும் வகையில் இதன் அமைவிடம் உள்ளது. திபுகர்கா என்னும் இடத்தில் இது அமைந்துள்ளது. இங்கு வரும் பார்வையாளர்கள் மின்சார ஆட்டோ ரிக்ஷாவிலோ, ஈஆட்டோ ரிக்ஷாவிலோ இந்த இடத்தை வந்தடையலாம். [8]


குறிப்புகள் தொகு

  1. "Sanskriti Museum And Art Gallery In Hazaribagh, India - Explore Location, History, Reviews, Photos And All About Sanskriti Museum And Art Gallery Hazaribagh". www.seejharkhand.com. Archived from the original on 2017-12-04. பார்க்கப்பட்ட நாள் 2016-06-23.
  2. "About us- Sanskriti Centre". sinclairenvironmental.com. Archived from the original on 2012-09-21. பார்க்கப்பட்ட நாள் 2016-06-23.
  3. "Sanskriti Museum & Art Gallery". sanskritimuseum.blogspot.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2016-06-23.
  4. "Kurukh people", Wikipedia (in ஆங்கிலம்), 2020-01-03, பார்க்கப்பட்ட நாள் 2020-01-04
  5. "The Painted Forest Villages of Hazaribagh – Asian Art Newspaper". www.asianartnewspaper.com. பார்க்கப்பட்ட நாள் 2016-06-23.
  6. "Sanskriti Museum and Art Gallery, Hazaribagh, India | Museum/Art Gallery". 4mark.net. பார்க்கப்பட்ட நாள் 2016-06-23.
  7. "Sanskriti Museum & Art Gallery: Sanskriti Museum & Art Gallery". sanskritimuseum.blogspot.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2016-06-27.
  8. 8.0 8.1 Tour Travel World

மேலும் காண்க தொகு