சமீர் ஆர்.தாசு

இந்திய கணினி விஞ்ஞானி மற்றும் பொறியாளர்

சமீர் ஆர்.தாசு (Samir R. Das) ஓர் இந்திய - அமெரிக்கர் ஆவார். இவர் அமெரிக்காவில் உள்ள சுடானி புரூக் பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிகின்றார். ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய அறிவியல் நிறுவனத்தில் தாசு கல்வி கற்றார். மேலும், இவர் கல்கத்தாவில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தைச் சேர்ந்தவரும் ஆவார். சியார்சியா தொழில்நுட்பப் பயிலகத்தில் தாசு முனைவர் பட்டம் பெற்றார். முன்னதாக சான் அண்டோனியோவில் உள்ள டெக்சாசு பல்கலைக்கழகம் மற்றும் சின்சினாட்டி பல்கலைக்கழகம் போன்ற பயிலகங்களில் இவர் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். அங்கே இவர் கணினி அறிவியலில் குறிப்பாக கம்பியற்ற வலையமாக்கப் பிரிவில் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.[1] 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி இவரது ஆராய்ச்சியான தற்காலிக தேவை திசையன் (AODV) 26,000 என்ற எண்ணிக்கைக்கும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. தாசின் பல ஆராய்ச்சிப் படைப்புகள் மிகவும் அதிக அளவில் மேற்கோள்களாகக் காட்டப்பட்டு இவருக்கு 54 என்ற எச்-குறியீட்டை பெற்று அளித்துள்ளன.[2]

சமீர் ஆர். தாசு
Samir R. Das
தேசியம் ஐக்கிய அமெரிக்கா
துறைகணினியியல்
பணியிடங்கள்இசுட்டோனி புரூக் பல்கலைக்கழகம், (2002 முதல்)
கல்வி கற்ற இடங்கள்ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
இந்திய அறிவியல் கழகம்
யதாவ்பூர் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்இரிச்சார்டு புச்சிமோரோ

சான்றுகள் தொகு

  1. "Samir Das". Stony Brook University. பார்க்கப்பட்ட நாள் December 22, 2013.
  2. "Samir R. Das". Google Scholar. பார்க்கப்பட்ட நாள் 28 October 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமீர்_ஆர்.தாசு&oldid=3023133" இலிருந்து மீள்விக்கப்பட்டது