சமூகப்பணி

social service

சமூகப்பணி[1] என்பது தனி நபராலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களாலோ சமூக நலன் கருதியும் மேம்பாடு கருதியும் செய்யப்படும் சேவையாகும்.[2] சமூகப்பணி தொடர்பான வரையறைகள் குறித்து நோக்கும்போது, சமூகப்பணி என்பது மனிதனின் சமூகச் செயல்திறனை உருவாக்கவதாகும் என வெர்னர் டபிள்யு போகம் (Werner W. Boehmm) என்ற அறிஞர் கூறுகிறார்.[சான்று தேவை] மேலும், சமூகப்பணி மக்கள் தங்கள் தேவைகளைத் தாங்களே நிறைவு செய்து கொள்வது அல்லது சிக்கல்களைத் தாங்களே எவ்வாறு வென்று முன்னேறுவது என்பதற்கு வழிகாட்டுவது என்ற தத்துவத்தின் கீழ் செயற்படுகிறது. என ஸ்ரோப் (Stroup) என்ற அறிஞர் வரையறுக்கின்றார்.[சான்று தேவை]

சமுகப் பணியாளர்
தொழில்
பெயர்கள் சமுக சேவகர், சமூகப் பணி மேலாளர், மனநல சமூக ஆர்வலர், குழந்தைகள் நலச் சமுகப் பணியாளர், முதியோர் நலச் சமுகப் பணியாளர், குழந்தைகள் கற்றலில் குறைபாடுகள் களையும் சமுகப் பணியாளர், மது & மருந்து அடிமைத் தளையிலிருந்து புணர்வாழ்வு அளிக்கும் சமுக சேவகர்கள், தடயவியல் சமூகப் பணியாளர்கள், சமூக மேம்பாட்டு ஆலோசகர்கள், மருத்துவச் சேவைத் தொண்டர்கள், மனித உரிமைகளுக்காக சமுக சிந்தனையாளர்கள், பன்னாட்டுச் சமூக பணியாளர்கள்
செயற்பாட்டுத் துறை பொருளாதாரம், கல்வி, சுற்றுச்சூழல், சமுகவியல், சட்டம், மருத்துவம், தத்துவம், அரசியல், மானுடவியல், மனநல மருத்துவம் மற்றும் ஆலோசனைகள் மூலம் சமூக சுதந்தரம், மனித உரிமைகள், சமூக முன்னேற்றம், சமூக மாற்றங்களை முன்னெடுத்து செல்வதாக இருக்கும்.
விவரம்
தகுதிகள் பட்டப் படிப்பு
தொடர்புடைய தொழில்கள் கல்வி அலுவலர் & ஆசிரியர்கள், உளவியலாளர், மனநலப்பயிற்சியாளர், மனநல ஆலோசகர், சமுதாய சிகிச்சை, சமுகக் கொள்கை மற்றும் திட்டமிடல், மனித உரிமைகள் வழக்கறிஞர், சமுக நீதிக்கான ஆர்வலர், இடித்துரைப்பாளர்கள், முதியோர் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவர்,

செயல்முறை சமூகப்பணி தொகு

  • பங்களிப்பு
  • ஒருங்கிணைப்பு
  • சமூகத் தொடர்பு
  • பொருளாதார வெகுமதி
  • சமூக அந்தஸ்து

சமூகப்பணியின் இலக்குகள் தொகு

  • முற்கூட்டிய பாதுகாப்பு
  • உளவளத்துணை வழங்குதல்
  • புணர்வாழ்வு அளித்தல்

சமூகப்பணியின் இயல்புகள் தொகு

  • இது ஒரு தொழில் வாண்மை சார்ந்தது.
  • சமூக மாற்றத்தினை மேன்மைப்படுத்துகிறது.
  • மக்களின் நலன்களினை மேன்மைப்படுத்துகிறது.
  • சமூநீதி மற்றும் மனித உரிமைகள் என்பன அடிப்படை அம்சங்களாகும்.
  • சமூக முறைமைகள் மற்றும் மனித நடத்தை தொடர்பான கோட்பாடுகளைப் பயன்படுத்துகிறது.
  • மனித உறவு முறைகளில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கின்றது.

மேற்கோள்கள் தொகு

  1. Huff, Dan. "Chapter I. Scientific Philanthropy (1860-1900)". The Social Work History Station. Boise State University. Archived from the original on 2012-05-19. பார்க்கப்பட்ட நாள் 2008-02-20. {{cite web}}: External link in |work= (help)
  2. https://www.aasw.asn.au/information-for-the-community/what-is-social-work

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமூகப்பணி&oldid=3928059" இலிருந்து மீள்விக்கப்பட்டது