சம்சாத் பேகம்

இந்தித் திரைப்படப் பாடகி

சம்சாத் பேகம் (Shamshad Begum, ஷம்ஷாத் பேகம், ஏப்ரல் 14, 1919 – ஏப்ரல் 23, 2013)[1][2] இந்தித் திரையுலகின் முதல் பின்னணிப் பாடகர்களில் ஒருவராவார். தனித்தன்மை வாய்ந்த குரல்வளம் பெற்றிருந்த இவர் பலவகையானப் பாடல்களை பாடியுள்ளார். இந்தி, பெங்காலி, மராத்தி, குசராத்தி,தமிழ் மற்றும் பஞ்சாபி மொழிகளில் 6000க்கும் கூடுதலான திரைப்பாடல்களைப் பாடியுள்ளார்.[3] இந்தித் திரையுலகின் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களான நௌசத், எஸ். டி. பர்மன், சி. இராமச்சந்திரா , ஓ. பி. நய்யார் போன்றவர்களின் இசையமைப்பில் பாடியுள்ளார். 1940 ஆம் ஆண்டிலிருந்து 1970 ஆம் ஆண்டு வரையில் சம்சாத்தின் பாடல்கள் பரவலான வரவேற்பைப் பெற்றிருந்தன. இன்றும் அவரது புகழ்பெற்ற பாடல்கள் மீள்கலப்பு செய்யப்பட்டு வருகின்றன.

சம்சாத் பேகம்
பிறப்பு(1919-04-14)ஏப்ரல் 14, 1919
அம்ரித்சர், பஞ்சாப், இந்தியா
இறப்பு23 ஏப்ரல் 2013(2013-04-23) (அகவை 94)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகி
தொழில்(கள்)பாடகி
இசைத்துறையில்1933–76

புகழ்பெற்றப் பாடல்கள் தொகு

பாடல் திரைப்படம் ஆண்டு இசையமைப்பு
மேரே பியா கயே ரங்கூன் பதங்க 1949 சி. ராமச்சந்திரா
கபி ஆர் கபி பார் ஆர் பார் 1954 ஓ. பி. நய்யார்
கஹிங் பெ நிஹாஹேங் கஹிங் பெ நிஷானா சிஐடி 1956 ஓ. பி. நய்யார்
லேகெ பெஹ்லா பெஹ்லா பியார் சிஐடி 1956 ஓ. பி. நய்யார்
கஜ்ரா மொகபத்வாலா ஆங்கியோன் மே ஐசா டாலா கிஸ்மத் 1968 ஓ. பி. நய்யார்

மேற்சான்றுகள் தொகு

  1. இந்திய அஞ்சல் துறை, தெற்காசியப் பிரிவு, ஆகத்து 1998 Available online பரணிடப்பட்டது 2013-05-17 at the வந்தவழி இயந்திரம்
  2. "Shamshad Begum dies at 94 – The Times of India". Timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2013-04-24.
  3. BBC News: India singing legend Shamshad Begum dies
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்சாத்_பேகம்&oldid=3356872" இலிருந்து மீள்விக்கப்பட்டது