சரவணா ஸ்டோர்ஸ்

கடைத் தொடர்

சரவணா ஸ்டோர்ஸ் (Saravana Stores) என்பது 1970 ஆம் ஆண்டில் ஒற்றைக் கடையாக தொடங்கப்பட்டு பின்னர் சில்லறை விற்பனைக் கடைகளின் சங்கிலித்தொடராக பல கிளைக் கடைகளாக விரிந்த ஒரு நிறுவனம் ஆகும். இது இந்தியாவின் மிகப்பெரிய குடும்பத்திற்கு சொந்தமான சில்லறை வணிக சங்கிலித் தொடர் கடைகளாகும்.[2][3] பிக்பசாரின் கிஷோர் பியானி கருத்துப்படி, இது இந்தியாவின் ஒரு வட்டாரத்தில் முதல் இடத்தில் உள்ள சில்லறை விற்பனை நிலையமாகும்.[4]

சரவணா ஸ்டோர்ஸ்
வகைசில்லறை வணிகம்
வகைதுணி மற்றும் நகைக் கடைகள்
நிறுவுகை1969
நிறுவனர்(கள்)சண்முக சுந்தரம் நாடார் யோகரத்தினம், இராஜரத்தினம், செல்வரத்தினம்.
தலைமையகம்சென்னை, இந்தியா
உற்பத்திகள்துணி, ஆயத்த ஆடை, பட்டுப் படவை, நகை, மின்னணு பொருட்கள், மளிகை பொருட்கள், எழுது பொருட்கள், பாதணிகள்
வருமானம் 60.16 பில்லியன் (US$750 மில்லியன்) (2017).[1]
இயக்க வருமானம் 15.63 பில்லியன் (US$200 மில்லியன்) (2017)
பணியாளர்10000
தாய் நிறுவனம்சரவணா ஸ்டோர்ஸ் (துணி)
இணையத்தளம்supersaravanastores.com

சரவணா ஸ்டோர்ஸ் 1970 செப்டம்பர் 4 அன்று சென்னை, தி நகரில் ஒரு பாத்திரக் கடையாக மட்டும் துவக்கப்பட்டது. இது சிறிதுசிறிதாக வளர்ந்து வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் விற்கும் அங்காடியாக 1998 இல் உருவானது.[5]

இருப்பிடங்கள் தொகு

சரணா ஸ்டோர்ஸ் நிறுவனமானது சென்னையில் தியாகராய நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர், பாடி, சோழிங்கநல்லூர் மற்றும் உஸ்மான் சாலையில் என ஏழு கடைகளை இயக்குகிறது. இந்நிறுவனமானது மதுரை, திருநெல்வேலி மற்றும் கோவையில் மிகப்பெரிய கடைகளைக் கொண்டுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் இந்த நிறுவனமானது மும்பை, தில்லி மற்றும் பெங்களூரில் கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளது.[6] இந்நிறுவனம் திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் சரவணா செல்வரத்தினம் கடைகளையும் நடத்தி வருகிறது.

வருவாய் தொகு

2008 ஆம் ஆண்டில், இந்த நிறுவனத்தின் ஆண்டு வருவாய் சுமார் 6.50   பில்லியன் ரூபாய் (200 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) என அறிவித்தது.[1][7][8]

100% பால் அடிப்படையிலான ஐஸ்கிரீம் தொகு

2004 ஆம் ஆண்டில், சரவாணா ஸ்டோர்ஸ் குழுமம் ஜமாய் என்ற புதிய ஐஸ்கிரீம் பிராண்டை அறிமுகப்படுத்தியது. இது சென்னையில் தயாரிக்கப்பட்ட 100% பால் சார்ந்த ஐஸ்கிரீம் பிராண்டாகும், இது தமிழ்நாடு முழுவதும் விற்கப்படுகிறது. இது ஒரு நாளைக்கு 10000 லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்தியைக் கொண்டுள்ளது. இது ஒரு நாளைக்கு சுமார் 30000 லிட்டர் என விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[1]

 
சூப்பர் சரவணா ஸ்டோர் தானியங்கி மகிழுந்து தரிப்பிடம்

தீவிபத்து தொகு

2008 செப்டம்பர் 2, அன்று, சரவணா ஸ்டோர்ஸ் கடை கட்டிடத்திற்குள் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு ஊழியர்கள் இறந்தது மட்டுமல்லாது, பல கோடி ரூபாய் மதிப்புக்கு சேதங்கள் ஏற்பட்டன. இதற்கு காரணமாக அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை புறக்கணித்ததே காரணம் என்று நம்பப்படுகிறது. ஆனால் உரிமையாளரின் வரவுக்கு மிறிய சொத்து உரிமை கணக்கெடுப்பில் இழப்பு என்று காரணம் காட்டுவதற்காக தன்னிச்சையாக இந்த கடை தீவிபத்து ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.[9][10][11]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Saravana Stores steps into the ice-cream parlour where". The Hindu Businessline. 17 August 2004. http://www.thehindubusinessline.com/2004/08/27/stories/2004082702171900.htm. 
  2. "'We will all be slaves to MNCs,' says Saravana Stores founder"
  3. "India's Retail Store Wars- Google Books"
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-02-05. பார்க்கப்பட்ட நாள் 2020-03-17.
  5. ஆன்லைன் வர்த்தகத்தை மிஞ்சும் அண்ணாச்சி கடை, இந்து தமிழ், 2020 மார்ச், 2
  6. "Big retail brands skipping profitable markets?"
  7. "UNSUNG HEROES OF INDIAN RETAILING"
  8. "Total Turnover"
  9. "Blaze exposes fire hazards in T Nagar". Times of India. 2 September 2008. http://timesofindia.indiatimes.com/Chennai/Blaze_exposes_fire_hazards_in_T_Nagar/articleshow/3434321.cms. 
  10. "Demolition of unsafe Saravana Stores floors begins it was also sealed". The Hindu. 20 November 2008 இம் மூலத்தில் இருந்து 28 ஜூலை 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090728143549/http://www.hindu.com/2008/11/20/stories/2008112050280100.htm. 
  11. "Saravana fire and the Tamil apathy". Chennai Television. 5 September 2008 இம் மூலத்தில் இருந்து 22 பிப்ரவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120222144004/http://www.chennaitvnews.com/2008/09/saravana-fire-and-tamil-apathy.html. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரவணா_ஸ்டோர்ஸ்&oldid=3860142" இலிருந்து மீள்விக்கப்பட்டது