சராய் முல்க் கனும்

சராய் முல்க் கனும் (அண். 1341 – 1408) என்பவர் தைமூரின் மூத்த மனைவியாவார். இவர் தைமூரிய பேரரசின் பேரரசியாக பதவி வகித்தார்.[1][2][3]

சராய் முல்க்
தைமூரியப் பேரரசின் பேரரசி
ஆட்சிக்காலம்அண். 1370 – 1405
பிறப்புஅண். 1341
இறப்புஅண். 1408 (அகவை 66–67)
சமர்கந்து, தைமூரியப் பேரரசு
துணைவர்பால்கின் அமீர் உசைன்
தைமூர்
பெயர்கள்
சராய் முல்க்
மரபுபோர்சிசின் (பிறப்பு)
பர்லாஸ் தைமூரியம் (மணம்)
தந்தைகசன் கான் இப்னு யசர்
தாய்புர்லா-கதுன்
மதம்இசுலாம்

பிறப்பின் அடிப்படையில் இவர் மொகுலிசுதானின் இளவரசி ஆவார். இதனை ஆண்ட கசன் கான் இப்னு யசரின் மகள் ஆவார். மேலும் இவர் செங்கிஸ் கானின் நேரடி வழித்தோன்றல் ஆவார்.[4]

குடும்பம் மற்றும் பரம்பரை தொகு

சராய் முல்க் கனும் என்பவர் மொகுலிசுதானின் இளவரசியாக அண். 1341 ஆம் ஆண்டு சகதாயி கானரசின் கடைசி கானாகிய கசன் கான் இப்னு யசருக்கு மகளாகப் பிறந்தார். சராயின் தாத்தா, கான் யசர் ஆவார். அவர் சகதை கானின் எள்ளுப் பேரன் ஆவார். இவ்வாறாக சராய், மங்கோலியப் பேரரசை தோற்றுவித்தவரும் அதன் ககானுமாகிய (பேரரசர்) செங்கிஸ் கானின் நேரடி வழித்தோன்றல் ஆவார். சராய் ஐரோவாசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற அரச குடும்பமாகிய போர்சிசின் குடும்பத்தின் உறுப்பினர் ஆவார்.

ஒரு கானின் மகளாகப் பிறந்த காரணத்தினால் சராய் கனும் ("கானின் மகள் அல்லது இளவரசி") என்ற பட்டத்தை பிறப்புரிமை அடிப்படையில் பயன்படுத்தினார்.

உசாத்துணை தொகு

  1. Renard, ed. by John (1998). Windows on the House of Islam : Muslim Sources on Spirituality and Religious Life. University of California Press. பக். 246. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-21086-8. 
  2. Lal, Ruby (2005). Domesticity and Power in the Early Mughal World. Cambridge University Press. பக். 217. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-521-85022-3. 
  3. Belozerskaya, Marina (2012). Medusa's Gaze : the Extraordinary Journey of the Tazza Farnese. Oxford University Press. பக். 99. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-973931-8. https://archive.org/details/medusasgazeextra0000belo. 
  4. Shterenshis, Michael (2013). Tamerlane and the Jews. Hoboken: Taylor and Francis. பக். 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:113687366X. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சராய்_முல்க்_கனும்&oldid=3583125" இலிருந்து மீள்விக்கப்பட்டது