சராய் (நகரம்)

சராய் என்பது தங்க நாடோடிக் கூட்டத்தின் தலை நகரமாகும்.[1][2] தொல்பொருளாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட இடம் மற்றும் வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள இடம் ஆகிய இரண்டுக்குமான ஒற்றுமை குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.[3]

1270ஆம் ஆண்டு சராயிலுள்ள கான் மெங்கு-தைமூருக்கு மரியாதை செலுத்த ரியாசான் இளவரசனான ரோமன் ஓல்கோவிச் வருகிறார். ஒரு உருசிய நூல் ஓவியம்.

பழைய சராய் தொகு

பழைய சராயானது படு கானால் நிறுவப்பட்டது. பல உருஸ் இளவரசர்கள் சராய்க்குக் கானிடம் தங்களது கூட்டணியைத் தெரிவிப்பதற்காகவும் அவருடைய ஜர்லிக்கைப் பெறுவதற்காகவும் வந்தனர். சில நேரங்களில் கான்களின் சமாதிகள் அமைக்கப்படும் இடமாகவும் இது திகழ்ந்தது. 1266ஆம் ஆண்டு பெர்கே இறந்தபோது அவர் படுவின் சராயில் புதைக்கப்பட்டார் என ரசீத்தல்தீன் குறிப்பிட்டுள்ளார்.[4]

உசாத்துணை தொகு

  1. Allsen, "Saray".
  2. Kołodziejczyk 2011: 4.
  3. Allsen, "Saray"; Siksimov 2007.
  4. MacKenzie and Curran 2002.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சராய்_(நகரம்)&oldid=3490716" இலிருந்து மீள்விக்கப்பட்டது