சறுக்கும் எறும்பு

ஒரு வகை எறும்பு

சறுக்கும் எறும்புகள் (gliding ants) என்பவை மரத்தில் இருந்து கீழே விழுகையில் தங்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த வல்ல எறும்புப் பேரினங்கள். பெரும்பாலான சறுக்கும் உயிரினங்களைப் போல் இவையும் மழைக்காடுகளில் உள்ள மரங்களில் வாழ்கின்றன. ஏதோ ஒரு காரணத்தால் மரத்தில் இருந்து இவை கீழே விழ நேர்ந்தால் பல நூறு அடி கீழே போவதோடு நீரில் விழுந்து உயிர்விடவோ அல்லது வேறு விலங்குக்கு இரையாகவோ நேரிடலாம். இதைத் தவிர்க்கும் பொருட்டு இந்த எறும்புகள் கீழே விழ நேர்கையில் தங்கள் பார்வைத் திறனைப் பயன்படுத்தி (பிற எறும்புகளுக்குப் பார்வைத் திறன் குறைவென்பதாலேயே ஃபெரமோன்களைப் பயன்படுத்தி ஒன்றையொன்று பின் தொடர்கின்றன.) மரத்தின் தண்டுப் பகுதியைச் சரியாக வந்தடைகின்றன.

பறக்கும் எறும்பு

[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. Yanoviak S. P., and Dudley, R. "The role of visual cues in directed aerial descent of Cephalotes atratus workers (Hymenoptera: Formicidae)." Journal of Experimental Biology. Vol. 209, 1177-1783. April 18, 2006. Accessed 2009-06-08.
  2. Dudley, R., Byrnes, G., Yanoviak S.P., Borrell, B., Brown, R.M., and McGuire, J.A. "Gliding and the Functional Origins of Flight: Biomechanical Novelty or Necessity?. பரணிடப்பட்டது 2011-01-12 at the வந்தவழி இயந்திரம்" Annual Review of Ecology, Evolution, and Systematics. Vol. 38, 179-201. December, 2007. Accessed 2009-06-08.

பெருநாட்டு மழைக்காடுகளில் வாழும் செஃபலோடிஸ் ஏட்ரியஸ் இனமே முதன் முதலில் கண்டறியப்பட்ட சறுக்கும் எறும்பாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சறுக்கும்_எறும்பு&oldid=3893847" இலிருந்து மீள்விக்கப்பட்டது