சலங்கை அல்லது சதங்கை (Chilanka or Silangai) என்பது காலில் அணியப்படும் ஓர் அணிகலனாகும். இந்தி, உருது மொழிகளில் இதை குங்ரு என்றும் கூங்ரு அல்லது கூங்கர் என்று அசாமிய மொழியிலும் அழைக்கின்றனர். ஒரு உலோகத்தின் பல உலோக மணிகள் ஒன்றாக கட்டப்பட்டு சலங்கைகள் உருவாக்கப்படுகின்றன. நடனக் கலைஞர்களின் கணுக்காலில் ஓர் இசைக் கொலுசாக சலங்கை கட்டப்படுகிறது [1]. சலங்கை எழுப்பும் ஒலிகள் அவற்றின் உலோகக் கலவை மற்றும் அளவைப் பொறுத்து சுருதிகளில் பெரிதும் வேறுபடுகின்றன. நடனத்தின் தாள அம்சங்களை வெளிப்படுத்தவும் சிக்கலான அடிச்சுவடுகளை பார்வையாளர்கள் கேட்டு இரசிக்கவும் சலங்கை உதவுகிறது. சலங்கைகள் கணுக்காலுக்கு மேலே அணியப்பட்டு பக்கவாட்டு கால் முட்டி மற்றும் இடைநிலை கால்முட்டியை அலங்கரிக்கின்றன. பொதுவாக 50 முதல் 200 எண்ணிக்கைக்கும் மேலான மணிகள் சலங்கைகளில் கட்டப்பட்டிருக்கும். சிறு நடனக் கலைஞர்கள் 50 மணி கொண்ட சலங்கையுடன் தங்களது நடனத்தை தொடங்குவர். நடனத்தில் பயிற்சியும் நிபுணத்துவமும் அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் அணியும் சலங்கையிலும் மணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். பரதநாட்டியம், குச்சுப்புடி, கதக், ஒடிசி முதலான இந்திய நடன்ங்களை ஆடும் போது நடனக் கலைஞர்கள் தங்கள் காலில் சலங்கை அணிவர்.

சலங்கை ஒரு சோடி
கதக் நடன் கலைஞர் நம்ரிதா ராய் 400 மணிகள் கொண்ட சலங்கையுடன் ஆடுகிறார்

குங்ரு வதன் என்பது வி. அனுராதா சிங் என்ற புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர் உருவாக்கிய அழகியலான இசை வடிவமாகும். சலங்கையிலுள்ள மணிகளே இந்த இசை வடிவத்திற்கான இசை கருவிகளாகும். நடனம் அனுமதிக்கப்படாத பல விழாக்களில் அனுராதா சிங் இவ்விசையை பயன்படுத்தியிருக்கிறார், பாதங்களின் அசைவு மட்டுமே குங்ரு வதன் இசையின் மையப்பொருளாகும். ஒரே இடத்தில் 100 நிமிடங்களுக்கும் மேலாக இவ்விசை நிகழ்த்தப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சலங்கை&oldid=3449899" இலிருந்து மீள்விக்கப்பட்டது