சவுத் பார்க்

சவுத் பார்க் (South Park) ஓர் அமெரிக்க இயங்குபடத் தொலைக்காட்சி தொடர். 1997 முதல் காமெடி சென்ட்ரல் தொலைக்காட்சி நிறுவனத்தால் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. பரவலப் பண்பாட்டை அங்கதம் செய்வது, நடப்பு நிகழ்வுகளை கிண்டல் செய்வது, மற்றும் கழிப்பறை நகைச்சுவைக்காக (toilet humor) கவனம் பெற்றுள்ளது. மொத்தத்தில் ஆறு எமி விருதுகளை பெற்றுள்ளது.

South Park
சவுத் பார்க்
வகைஇயங்குபடம்
சிட்காம்
உருவாக்கம்ட்ரே பார்க்கர்
மேட் ஸ்டோன்
குரல்நடிப்புட்ரே பார்க்கர்
மேட் ஸ்டோன்
ஐசக் ஹேஸ் (1997-2006)
மேரி கே பர்க்மன் (1997-1999)
எலைசா ஸ்னைடர் (2000-2003)
மோனா மார்ஷல்
ஏப்ரல் ஸ்டுவர்ட்
ஜான் "நேன்சி" ஹேன்சன்
ஜெனிஃபர் ஹவல்
ஏட்ரியன் பியர்ட்
முகப்பிசைப்ரைமஸ்-ஆல் தயாரிக்கப்பட்ட "சவுத் பார்க் தீம்"
நாடுஅமெரிக்கா
பருவங்கள்12
அத்தியாயங்கள்174 (list of episodes)
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புட்ரே பார்க்கர்
மேட் ஸ்டோன்
ஓட்டம்ஏறத்தாழ 22 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைகாமெடி சென்ட்ரல்
படவடிவம்NTSC (480i)
ஒளிபரப்பான காலம்ஆகஸ்ட் 13, 1997 –
இன்று
வெளியிணைப்புகள்
இணையதளம்

வரலாறு தொகு

கொலராடோ பல்கலைக்கழகத்தில் ட்ரே பார்க்கர் மற்றும் மேட் ஸ்டோன் ஆகிய இரண்டு மாணவர்களும் சவுத் பார்க் போன்ற ஒரு சிறு திரைப்படத்தை 1990களில் படைத்தனர். இதை தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கவனித்து சவுத் பார்க் ஆரம்பித்தது. ஆகஸ்ட் 13, 1997 அன்று தொடங்கி இன்று வரை 12 பருவங்களில் 174 நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. 12ஆம் பருவம் மார்ச் 2008 இல் தொடங்கியது. 2011 வரை ஒளிபரப்பு செய்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 1999இல் சவுத் பார்க்: பிகர், லாங்கர் & அன்கட் என்கிற சவுத் பார்க் திரைப்படம் வெளிவந்தது.

கதை தொகு

சவுத் பார்க்கின் கதை கொலராடோ மாநிலத்தில் "சவுத் பார்க்" என்கிற பாசாங்கு புறநகரத்தில் நடக்கிறது. இக்கதையில் முக்கிய கதாபாத்திரங்கள் ஸ்டான் மார்ஷ் (Stan Marsh), கைல் புராஃப்லாவ்ஸ்கி (Kyle Broflovski), எரிக் கார்ட்மன் (Eric Cartman), கெனி மெக்கார்மிக் (Kenny McCormick) ஆகிய நான்கு 8-வயது குழந்தைகள். இவர்களின் நண்பர்கள், பெற்றோர், பள்ளியில் ஆசிரியர்கள் போன்றவர்கள் பல நிகழ்ச்சிகளிலும் வருகின்றனர். சவுத் பார்க்கின் ஆண் பாத்திரங்களுக்கு பெரும்பான்மையாக மேட் ஸ்டோனும் ட்ரே பார்க்கரும் குரல் கொடுக்கின்றனர், ஆனால் பள்ளியின் சமயல் காரர் "ஷெஃப்" (Chef) -க்கு ஐசக் ஹேஸ் 11ஆம் பருவம் வரை குரல் கொடுக்கிறார். பெண் பாத்திரங்களுக்கு பல்வேறு குரல் நடிகைகள் குரல் கொடுத்துள்ளனர்.

கருப்பொருட்களும் செல்வாக்கும் தொகு

தொடக்கத்தில் பார்க்கரும் ஸ்டோனும் கடதாசியால் நிறுத்தியக்க இயங்குபடம் (stop-motion animation) பயன்படுத்தி சவுத் பார்க் நிகழ்ச்சிகளை படைத்தனர். இதனால் முதலாம் சவுத் பார்க் நிகழ்ச்சியை முடிக்க மூன்று மாதங்கள் வேண்டியுள்ளது. ஆனால் தற்போது கணினியில் இயங்குபட மென்பொருட்களை பயன்படுத்தி ஒரு வாரத்திலேயே ஒரு நிகழ்ச்சி முழுவதையும் உருவாக்க முடிகிறது. இதனால் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான நிகழ்ச்சிகளை சவுத் பார்க்கால் விரைவாக படைக்க முடிகிறது; எ.கா. செப்டம்பர் 11 தாக்குதல்கள் முடிந்து அக்டோபர் 2001இல் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் நுழைவதற்கு ஒரு மாதம் பிறகு சவுத் பார்க் அதை தொடர்பாக "Osama bin Laden Has Farty Pants" என்கிற நிகழ்ச்சியை வெளியிட்டுள்ளது. நடப்பு நிகழ்வுகள் பற்றியும் சமூக பிரச்சனைகளை பற்றியும் சவுத் பார்க் படைத்த நிகழ்ச்சிகள் காரணமாக பல நல்ல விமர்சனங்களும் விருதுகளும் பெற்றுள்ளது.

சர்ச்சையும் கண்டனங்களும் தொகு

சவுத் பார்க்கின் நகைச்சுவை தொடர்பாக பல முறையாக சர்ச்சைகள் ஏற்பட்டன. கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவது, பல்வேறு மதங்களை பழிப்பது, அமெரிக்க சமூகத்தில் சர்ச்சை கொண்ட தலைப்புகளை பற்றிய நிகழ்ச்சிகளை படைப்பது, "ஆபாசமான" நகைச்சுவை காரணமாக பல குடும்ப நல நிறுவனங்களும், சமயம் சார்பான நிறுவனங்களும் சவுத் பார்க்கை கண்டனம் செய்துள்ளன. தொலைக்காட்சி பண்பு நலம் மதிப்பீடுகளை பல முறையாக மீறுவதற்காக அமெரிக்க நடுவண் தொடர்பு ஆணையம் சவுத் பார்க் மீது தண்டம் அளித்துள்ளது.

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சவுத்_பார்க்&oldid=3272159" இலிருந்து மீள்விக்கப்பட்டது