சாரா சாகுப்தா

சாரா சாகுப்தா (Sara Shagufta) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு கவிஞராவார். உருது மற்றும் பஞ்சாபி மொழிகளில் இவர் கவிதைகள் எழுதினார். கராச்சியில் கடந்து செல்லும் இரயில் முன் பாய்ந்து இவர் தற்கொலை செய்து கொண்டார்.

சாரா சாகுப்தா
Sara Shagufta
பிறப்பு(1954-10-31)31 அக்டோபர் 1954
குஜ்ரன்வாலா, பாக்கித்தான்
இறப்பு4 சூன் 1984(1984-06-04) (அகவை 29)
திரிக்கு காலனி, கராச்சி, பாக்கித்தான்
தொழில்கவிஞர்
மொழிஉருது, பஞ்சாபி
தேசியம்பாக்கித்தானியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • ஆங்கெய்ன்
  • நீந்து கா ரேங்கு
துணைவர்அகமது இயாவித்து, குவாய்சர் முனாவர், அப்சல் அகமது சயீது

வாழ்க்கை தொகு

சாரா 1954 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதியன்று பாக்கித்தான் நாட்டின் குச்ரான்வாலாவில் ஓர் அடிமட்ட குடும்பத்தில் பிறந்தார். இந்தியப் பிரிவினையின்போது இவரது குடும்பம் பஞ்சாபிலிருந்து கராச்சிக்கு குடிபெயர்ந்தது. ஏழை மற்றும் படிக்காத குடும்பத்தைச் சேர்ந்த சாரா சமூகத்தில் உயர விரும்பினார். ஆனால் இவரால் மெட்ரிகுலேசன் படிப்பில் தேர்ச்சி பெற முடியவில்லை. [1] [2]

சாராவுக்கு 17 வயதில் முதல் முறையாக திருமணம் செய்து வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இவருக்கு மூன்று தோல்வியுற்ற திருமணங்கள் நடந்தன. [2] [3]

இவருடைய ஆளுமை ஒரு புதிராகவே இருந்தது. ஏழை மற்றும் படிக்காத பின்னணியில் இருந்து வந்த இவர் கல்வியின் மூலம் சமூகத்தில் உயர விரும்பினார். இவரது மாற்றாந்தாய், ஆரம்பகால திருமணம் மற்றும் அடுத்தடுத்த மூன்று திருமணங்கள் இவையெல்லாம் இவரது மன வேதனையை அதிகரித்தது. சாரா உடல்நலக்குறைவு காரணமாக மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மரணமில்லாத தற்கொலை முயற்சிக்குப் பிறகு, கராச்சியில் உள்ள திரிக் காலனி இரயில் பாதையில் குறுக்கே சென்று கொண்டிருந்த இரயிலுக்கு முன் பாய்ந்து தனது 29 ஆவது வயதில், 1984 ஆம் ஆண்டு சூன் மாதம் 4 அன்று, இரவு 11 மணியளவில் தற்கொலை செய்து கொண்டார். [1] [4]

படைப்புகள் தொகு

விமர்சகர்கள் சாராவின் கவிதை மேதையில் கவனம் செலுத்த முடியாத வண்ணம் இவரின் காதல் வாழ்க்கை . பாக்கித்தானில் அதிகம் பேசப்பட்டது. ஆனால் இவரது வார்த்தைகள் இலக்கிய வட்டங்களின் வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் செல்லவில்லை.

சாராவின் கவிதைத் தொகுப்புகள் இவரது மரணத்திற்குப் பின் வெளியிடப்பட்டன. ஆங்கெய்ன் மற்றும் நீந்து கா ரேங்கு என்ற பெயர்களில் அவற்றை சயீத் அகமது வெளியிட்டார். சயீத் அகமது சாராவின் அன்புக்கு உகந்தவராக இருந்தவராவார். அசாத் அல்வி சாராவின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து , தூக்கத்தின் நிறம் மற்றும் பிற கவிதைகள் என 2016 ஆம் ஆன்டு வெளியிட்டார். [3] ருக்சானா அகமது எழுதிய "நாம் பாவப்பட்ட பெண்கள் " என்ற புத்தகத்தில் இவரது 'வுமன் அண்டு சால்ட்டு', 'டூ டாட்டர், சீலி' மற்றும் 'தி மூன் ஈசு கொயிட்டு அலோன்' ஆகிய கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. [5]

மரபு தொகு

சாராவின் நெருங்கிய நண்பரான இந்திய எழுத்தாளர் அம்ரிதா பிரீதம் சாராவின் வாழ்க்கை மற்றும் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு இரண்டு புத்தகங்களை எழுதினார். ஏக் தி சாரா , (1990) மற்றும் சாரா சாகுப்தாவின் வாழ்க்கை மற்றும் கவிதை (1994) என்பவை அவ்விரண்டு நூல்களாகும். சாகித் அன்வர் எழுதிய மெயின் சாரா என்ற நாடகம் சாராவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதாகும். [4] டேனிசு இக்பால் எழுதி தாரிக் அமீது இயக்கிய மற்றொரு நாடகம் சாரா கா சாரா ஆசுமான் என்ற நாடகமும் சாராவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதாகும். சாரா பற்றிய அமிர்தா பிரீதத்தின் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த நாடகம் அகில இந்திய வானொலியின் உருது அரங்க விழாவில் 2015 ஆம் ஆண்டு ஒலி பரப்பப்பட்டது. [6] [3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Parekh, Rauf (2015-04-27). "Creativity and mental disorder: Urdu poets and writers who committed suicide". DAWN.COM. பார்க்கப்பட்ட நாள் 2018-02-14.
  2. 2.0 2.1 "सारा शगुफ़्ता : इंसान से पहले मौत ज़िंदा थी- Amarujala". Amar Ujala (in இந்தி). 2017-10-01. பார்க்கப்பட்ட நாள் 2018-02-14.
  3. 3.0 3.1 3.2 Modi, Chintan Girish (16 July 2016). "LITERARY REVIEW: Still I Rise!". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 14 February 2018.Modi, Chintan Girish (16 July 2016). "LITERARY REVIEW: Still I Rise!". The Hindu. Retrieved 14 February 2018.
  4. 4.0 4.1 Kamran Asdar Ali (2013-07-01). "Column: Respectability has many forms: remembering Sara Shagufta". DAWN.COM. பார்க்கப்பட்ட நாள் 2018-02-14.
  5. Ahmad, R. (1991). We sinful women: Contemporary Urdu feminist poetry. London: The Women's Press.
  6. Daftuar, Swati (2015-03-27). "A life in defiance". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2018-02-14.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா_சாகுப்தா&oldid=3278077" இலிருந்து மீள்விக்கப்பட்டது