சார்கண்டே ராய்

இந்திய அரசியல்வாதி

சார்கண்டே ராய் (Jharkhande Rai ) இவர் ஓர் இந்தியாவின் பொதுவுடைமை அரசியல்வாதி ஆவார். பூமிகார் பிராமணச் சமூகத்தைச் சேர்ந்த இவர், ஒரு சிறந்த தலைவராகவும், உத்தரப்பிரதேசத்தின் பூர்வாஞ்சலில் இந்தியப் பொதுடைமைக் கட்சியின் தூண்களில் ஒருவராகவும் இருந்தார். [1] இவர் 1967, 1971 1980 இல் கோசி மக்களவைத் தொகுதியிலிருந்து 4 வது மக்களவை, 5 வது மக்களவை, 7 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் . மார்ச் 17, 1984 அன்று தான் இறக்கும் வரை இவர் அந்தப் மக்களவை உறுப்பினர் பதவியை வகித்தார். 1980களின் பிற்பகுதி வரை, கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் பொதூடைமை இயக்கம் ஒரு முக்கிய சக்தியாக இருந்தது. [2] இது பெரும்பாலும் விவசாய சமுதாயத்தில் இருந்து பரந்த ஆதரவைப் பெற்றிருந்தது. இதில் மதமோ சாதியோ ஒரு காரணியாக இல்லை சார்கண்டே ராய் உழைக்கும் மக்களின் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

சார்கண்டே ராய் 1914 இல் அசாம்கார் மாவட்டத்தின் அமிலா கிராமத்தில் இராதே ராய் என்பவரின் மகனாகப் பிறந்தார். இவர் பஸ்தி மற்றும் கோரக்பூரில் உள்ள அரசுப்பள்ளிகளில் கல்வி பயின்றார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவர் 1926 இல் கமலா தேவி என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தனர். இவர் ஒரு விவசாய மற்றும் சமூக மற்றும் அரசியல் தொழிலாளியாவார். இந்துசுத்தான் சோசலிச குடியரசுக் கட்சி , புரட்சிகர சோசலிசக் கட்சியுடன் தொடர்பிலிருந்தவர். பிரிட்டிசு ஆட்சியின் போது 8 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். பிப்ரிதி சதி வழக்கு, காசிப்பூர் ஆயுத சதி வழக்கு மற்றும் லக்னோ சதி வழக்கு ஆகியவற்றில் பங்கேற்றதற்காக 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பிறகும் இவர் 18 முறை சிறையில் அடைக்கப்பட்டார்.

வகித்த பதவிகள் தொகு

1. 1967 ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேச உணவு அமைச்சராக இருந்தார். சன்யுக்தா வித்யாக் தள் அரசு சரண் சிங் தலைமையில் நிலமற்றவர்களுக்கு நிலம் விநியோகிப்பதில் ஏற்பட்ட வேறுபாடு காரணமாக அமைச்சரவையில் இருந்து விலகினார்.

2. தலைவர், (i) இடைநிலைக் கல்லூரி, அமிலா அராம்கர் மற்றும் (ii) இடைநிலைக் கல்லூரி, சோனாடி, அராம்கர்

3. பொருளாளர், அகில இந்திய விவசாயிகள் சங்கம், புது தில்லி

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்கண்டே_ராய்&oldid=3315154" இலிருந்து மீள்விக்கப்பட்டது