சாலிவாகனன்

சாலிவாகனன் (Shalivahana) பண்டைய பரத கண்டத்தின் தென்னிந்தியாவின் தற்கால மகாராட்டிரம் கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற பகுதிகளை ஆண்ட சாதவாகனர்களின் வழித்தோன்றலில் வந்த மன்னர் என புராணங்கள் மற்றும் செவி வழிக்கதைகள் மூலம் அறியப்படுகிறது. பிரஸ்திஸ்தானத்தை தலைநகராகக் கொண்ட சாலிவாகனன், உஜ்ஜைனியை தலைநகராகக் கொண்டு ஆண்ட பேரரசர் விக்கிரமாத்தியனை வென்றவர் என்ற பெருமை உண்டு. தென்னிந்தியாவில் மட்பாண்டங்கள் செய்யும் குலால சமூகத்தினர், சாதவாகனனை தங்கள் குலத்தின் முன்னவர் எனப் போற்றி கொண்டாடுகிறார்கள். சாலிவாகனன் குறித்த செய்திகள் பவிஷ்ய புராணத்தில் குறிப்புகள் உள்ளது.

சாலிவாகன ஆண்டு தொகு

சாலிவாகனன் விக்கிரமாதித்தியனை வென்றதை கொண்டாடும் வகையில், அந்த ஆண்டு முதல் சாலிவாகன ஆண்டு கி பி 78 முதல் தொடங்குவதாக கருதப்படுகிறது.[1]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

ஆதார நூற்பட்டியல் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலிவாகனன்&oldid=3243779" இலிருந்து மீள்விக்கப்பட்டது