சிங்கப்பூர் நீரிணை

சிங்கப்பூர் நீரிணை என்பது, மேற்கே மலாக்கா நீரிணைக்கும், கிழக்கே தென்சீனக் கடலுக்கும் இடையில் அமைந்துள்ள 16 கிலோமீட்டர் அகலமும், 105 கிலோமீட்டர் நீளமும் கொண்ட ஒரு நீரிணை ஆகும். இந்த நீரிணையின் வடக்கே சிங்கப்பூரும், தெற்கில் ரியாவுத் தீவுகளும் அமைந்துள்ளன. இந்தோனீசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான எல்லைக்கோடு இந்த நீரிணையின் ஊடாகச் செல்கிறது.

சிங்கப்பூர் நீரிணையின் நிலப்படம்.

வரலாற்றுக் குறிப்புக்கள் தொகு

கிபி 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முசுலிம் எழுத்தாளரான யாக்கூபி சிங்கப்பூர் நீரிணையை, சலாகித் கடல் எனக் குறிப்பிட்டுள்ளார். இது சீனாவுக்குச் செல்லும்போது கடக்க வேண்டிய ஏழு கடல்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகின்றது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Tumasik Kingdom - Melayu Online". Archived from the original on 2009-03-12. பார்க்கப்பட்ட நாள் 2016-04-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கப்பூர்_நீரிணை&oldid=3627578" இலிருந்து மீள்விக்கப்பட்டது