சிசாபங்மா

உலகின் 14வது உயரமான மலை இமயமலையில் அமைந்துள்ளது

சிசபங்மா உலகின் 14 ஆவது உயரமான மலையும், எண்ணாயிரம் மீட்டர்களுக்கு அதிகமான உயரத்தைக் கொண்ட மலைகளுள் உயரம் குறைந்ததும் ஆகும். இது 8013 மீட்டர் (26,289 அடிகள்) உயரம் கொண்டது. இது முழுதாகவே சீனாவுக்குள் இருப்பதும், 1950 களிலும் அதற்குப் பின்னரும் இப் பகுதிக்குள் செல்வதற்குச் சீனா தடை விதித்திருந்ததாலும், வெளிநாட்டவர்கள் இதில் ஏறும் முயற்சியில் இறங்க முடியாதிருந்தது. இதனால் எண்ணாயிரம் மீட்டர்களுக்கு மேற்பட்ட மலைகளுள், உச்சியை அடைவதில் கடைசியாக வெற்றிபெற்ற மலையும் இதுவே.

Shishapangma
Shishapangma (left) from mountain flight, Nepal
உயர்ந்த இடம்
உயரம்8,027 m (26,335 அடி)[1][2][3][4]
Ranked 14th
இடவியல் புடைப்பு2,897 m (9,505 அடி)[5]
Ranked 111th
இடவியல் தனிமை91 km (57 mi) Edit on Wikidata
பட்டியல்கள்எண்ணாயிர மீட்டரை மீறும் மலைகள்
Ultra
புவியியல்
அமைவிடம்Nyalam County, Tibet, China
மூலத் தொடர்Jugal/Langtang Himal, இமயமலை
ஏறுதல்
முதல் மலையேற்றம்2 May 1964 by Xǔ Jìng et al. (Chinese)
(First winter ascent 14 January 2005 Piotr Morawski and Simone Moro)
எளிய அணுகு வழிsnow/ice climb

திபேத்திய மொழியில் இதன் பெயர் "புல் சமவெளிகளுக்கு மேலுள்ள உச்சி" என்னும் பொருள் தருவது. இம் மலை தென்-நடுத் திபேத்தில், நேபாளத்துடனான எல்லையில் இருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. 8,000 மீட்டர்களுக்கு மேற்பட்ட உயரம் கொண்ட மலைகளுள் முழுவதுமாகச் சீனாவுக்குள் இருக்கும் மலை இது மட்டுமே.

இவற்றையும் பார்க்கவும் தொகு

குறிப்புகள் தொகு

  1. "Shishapangma". Peakbagger.com.
  2. "青藏高原的伟大崛起" (in சீனம்). China National Geographic. October 2009. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
  3. "Shisha Pangma". 8000ers.com. 13 February 2008. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
  4. "Shisha Pangma". summitpost.org. Mar 7, 2007. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
  5. "High Asia II: Himalaya of Nepal, Bhutan, Sikkim and adjoining region of Tibet". Peaklist.org. பார்க்கப்பட்ட நாள் 2014-05-29.
  6. "Shisha Pangma on Peakware". Archived from the original on 2 ஜனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 16 March 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிசாபங்மா&oldid=3759369" இலிருந்து மீள்விக்கப்பட்டது