மார்க்கசு துல்லியசு சிசெரோ (/ˈsɪs[invalid input: 'ɨ']r/; பாரம்பரிய இலத்தீன்: [ˈmaːr.kʊs ˈtʊl.li.ʊs ˈkɪ.kɛ.roː]; பண்டைக் கிரேக்கம்Κικέρων Kikerōn, ஆங்கில வடிவம் துல்லி[1] /ˈtʌli/; 3 ஜனவரி கி.மு106 – 7 திசம்பர் கி.மு43) ஒரு உரோமானியரும் மெய்யியலாளரும், அரசியலாளரும், வழக்கறிஞரும், சொற்பொழிவாளரும், அரசியல் கோட்பாட்டாளரும், மன்ற உறுப்பினரும், அரசியலமைப்பாளரும் ஆவார்.. இவர் உரோமானியச் செல்வந்தர் குலத்தின் செல்வ வளமிக்க நகரியக் குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் பரவலாக உரோமின் மாபெரும் சொற்பொழிவாளராகவும் உரைநடையாளராகவும் கருதப்பட்டவர்.[2][3]

சிசெரோ
(MARCUS TULLIUS CICERO)
கி.பி முதல் நூற்றாண்டுச் சிசெரோவின் சிலை, கேப்பிட்டோலினே அருங்காட்சியகம், உரோம் நகர்
மன்ற உறுப்பினர், உரோமக் குடியரசு
பதவியில்
கி.மு63–கி.மு63
முன்னையவர்உலூசியசு ஜூலியசு சீசர், கையசு மார்சியசு ஃபிகுலசு
பின்னவர்டெசிமசு ஜூனியசு சிலானசு, உலூசியசு இலிசினசு முரேனா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு200px
3 January 106 BC
ஆர்ப்பினம், உரோமக் குடியரசு
(இக்கால ஆர்ப்பினோ, இலாசியோ, இத்தாலி)
இறப்பு7 திசம்பர் கி.மு43 (அகவை 63)
ஃபோர்மியா, உரோமக் குடியரசு
இளைப்பாறுமிடம்200px
தேசியம்உரோமானியர்
அரசியல் கட்சிOptimate
பெற்றோர்
  • 200px
வேலைஅரசியலாளர், வழக்கறிஞர், சொற்பொழிவாளர், மெய்யியலாளர், கவிஞர்
சிசெரோ
கருப்பொருள்அரசியல், சட்டம், மெய்யியல், யாப்பியல்
இலக்கிய இயக்கம்இலத்தீனப் பொற்காலம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்சொற்பொழிவுகள்: In Verrem, In Catilinam I-IV, Philippicae
Philosophy: De Oratore, De Re Publica, De Legibus, De Finibus, De Natura Deorum, De Officiis

இலத்தின் மொழியின்பால் இவரது செல்வாக்கு செறிவானது. இலத்தீனில் மட்டுமன்றி பிற ஐரோப்பிய மொழிகளின் உரைநடையும் கூட பீன்னாட்களில் 19ஆம் நூற்றாண்டுவரை, ஒன்று இவரைப் பின்பற்றியது அல்லது எதிர்த்துச் செயல்பட்டது..[4] Michael Grant அவர்களின் கூற்றுப்படி,சிசெரோவைப் போல "வேறு எம்மொழியின் அறிஞருமே இவ்வளவு தாக்கத்தை ஐரோப்பிய மொழிகளின் இலக்கியத்திலும் எண்ணவோட்டத்திலும் செலுத்தியதில்லை".[5] சிசெரோ கிரேக்க மெய்யியலின் முதன்மையான சிதனைப்பள்ளிகலையுமுரோமானியருக்கு அறிமுகப்படுத்தினர். மேலும் புதிய பல மெய்யியல் கலைச்சொற்களை இலத்தின மொழியில் உருவாகினார். காட்டாக humanitas, qualitas, quantitas, and essentia போன்ற கலைச்சொற்களை பயன்படுத்தி செவ்வியல் இலத்தீன் மொழியை வளப்படுத்தினார்.[6] இதனால் இவர் மொழியியலாளர், மொழிபெயர்ப்பாளர், மெய்யியலாளர் எனவெல்லாம் பன்முகத் தளங்களில் பெயர்பெற்றார்.

இவரது நூல்கள் ஐரோப்பியப் பண்பாட்டில் பெருந்தாக்கம் செலுத்தி வருபவையகும். உரோம வரலாற்றை எழுத இவரது நூல்கள் இன்றும் முதன்மையான சான்ருகளை அளித்து வருகின்றன. குறிப்பாக உரோமக் குடியரசு வீழ்ச்சியின் கடைசி காலம் குறித்து எழுத இவையே பெரிதும் பயன்படுகின்றன.[7]

நூல்கள் தொகு

தொடக்க காலச் சால்சிடோனியன் தேவாலயம் சிசெரோவை உண்மையான பேகன் என அறிவித்தது. எனவே இவரது நூல்கள் காப்பாற்றுவதற்குரியன வாயின. பின்வந்த உரோமனிய எழுத்தாளர்கள் இவரது நூல்களில் இருந்து பரவலாக எடுத்தாண்டுள்ளனர் De Re Publica (குடியரசு பற்றி) , De Legibus (சட்டங்கள் பற்றி),ஆகிய நூல்களும் பிற நூல்களும் நிலவும் இத்தகைய பகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளன. பண்டைய வழக்கங்கள், பண்டைய சட்டம் சார்ந்து சிசெரோ உரிமைகள் குறித்த தொடக்க நிலைக் கருதல்களை மெல்ல விளித்துள்ளார். சிசெரோ நூலகளில் ஆறு கவிதை நூல்களும் கிடைத்துள்ளன. மேலும் எட்டு மெய்யியல் நூல்களும் கிடைத்துள்ளன. அவரது சொற்பொழிவுகளில் 88 உரைகள் பதிவாகியுள்ளன. ஆனால் 55 மட்டுமே அவற்றில் இப்போது கிடைக்கின்றன.

சொற்பொழிவுகள்
கவிதையும் மெய்யியலும்
  • (55 BC) De Oratore ad Quintum fratrem libri tres (சொற்பொழிவாளர், தன் உடன்பிறப்பு குவிண்டசுக்கான மூன்று நூல்கள்)
  • (51 BC) De Re Publica (குடியரசு பற்றி)
  • (?? BC) De Legibus (சட்டங்கள் பற்றி)
  • (46 BC) Brutus (புரூட்டசு)
  • (46 BC) Orator (சொற்பொழிவாளர்)
  • (45 BC) Hortensius – மெய்யியலில் ஓர் உசாவல், இப்போது கிடைக்கவில்லை.
  • (45 BC) Consolatio – இதே ஆண்டு ஃபிப்ரவரியில் இவரது மகன் துலியா இறந்த வருத்தம் தணிக்க எழுதியது; இதுவும் கூட கிடைக்கவில்லை
  • (45 BC) Academica (கல்விக்கழக ஐயுறவியல் குறித்து)
  • (45 BC) De Finibus Bonorum et Malorum (நன்மை, தீமையின் விளைவுகள் குறித்து) –அறவியல் பற்றிய நூல்.[9] Title also translated as "On Moral Ends"[10]
  • (45 BC) Tusculanae Disputationes (டசுகுலான் எதிர் விவாதங்கள்) – இறப்பு, வலி, மன இறுக்கமும் சார்ந்த உணர்ச்சிகளும், மகிழ்ச்சி ஆகிய உளவியல் நிலைகளைப் பற்றி 5 நூல்கள்
  • (45 BC) De Natura Deorum (கடவுள்களின் தன்மை பற்றி)
  • (44 BC) Topica
  • (44 BC) De Divinatione (தெய்வீகம் பற்றி)
  • (44 BC) De Fato (விதி பற்றி)
  • (44 BC) De Amicitia (நட்பு பற்றி)
  • (44 BC) Cato Maior de Senectute (முதுமையில் முதுவர் கேட்டோ)
  • (44 BC) Laelius de Amicitia (நட்பு பற்றி இலேயலியசு)
  • (44 BC) De Gloria (புகழ் பற்றி) – now lost.
  • (44 BC) De Officiis (கடமைகள் பற்றி)
கடிதங்கள்

கிட்டதட்ட இவர் எழுதிய 900 கடிதங்களும் பிறர் இவருக்கு எழுதிய 100கடிதங்களும் கிடைத்துள்ளன.

  • (68–43 BC) Epistulae ad Atticum (அட்டிகசுக்கு எழுதிய கடிதங்கள்)
  • (59–54 BC) Epistulae ad Quintum Fratrem (உடன்பிறப்பு குவிண்டசுக்கு எழுதிய கடிதங்கள்)
  • (43 BC) Epistulae ad Brutum (புரூட்டசுக்கு எழுதிய கடிதங்கள்)
  • (62–43 BC) Epistulae ad Familiares (நண்பர்களுக்கான கடிதங்கள்)

புனைவிலக்கியப் படம்பிடிப்புகள் தொகு

குறிப்புகள் தொகு

  1. E.g. H. Jones, Master Tully: Cicero in Tudor England (Nieuwkoop: De Graaf, 1998).
  2. Rawson, E.: Cicero, a portrait (1975) p.303
  3. Haskell, H.J.: This was Cicero (1964)p.300–301
  4. Merriam-Webster, Inc (January 1995). "Ciceronian period". Merriam-Webster's Encyclopedia Of Literature. Merriam-Webster. பக். 244. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-87779-042-6. http://books.google.com/books?id=eKNK1YwHcQ4C&pg=PA244. பார்த்த நாள்: 27 August 2013. 
  5. Cicero, Selected Works, 1971, pp.24
  6. Conte, G.B.: "Latin Literature: a history" (1987) p.199
  7. Miriam Griffin; John Boardman; Jasper Griffin; Oswyn Murray (15 January 2001). The Oxford Illustrated History of the Roman World. Oxford University Press. பக். 76-. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-285436-0. http://books.google.com/books?id=w95Nb-BJWRcC&pg=PA76. பார்த்த நாள்: 10 August 2011. 
  8. "M. Tullius Cicero, Orations: The fourteen orations against Marcus Antonius (Philippics) (ed. C. D. Yonge)". Perseus.tufts.edu. பார்க்கப்பட்ட நாள் 2013-10-03.
  9. "E-Texts : De Finibus, Book I". Epicurus.info. Archived from the original on 2013-12-09. பார்க்கப்பட்ட நாள் 2013-10-03. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  10. Cicero On Moral Ends. (De Finibus) Julia Annas – editor, Raphael Woolf – transltr Cambridge University Press, 2001

மேற்கோள்கள் தொகு

 
Opera omnia, 1566

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Marcus Tullius Cicero
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
பொது
மெய்யியல்
சிசெரோவின் நூல்கள்
நூல்தொகைகளும் அவர்கால விவரிப்புகளும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிசெரோ&oldid=3871326" இலிருந்து மீள்விக்கப்பட்டது