சித்ராங்கி (திரைப்படம்)

சித்ராங்கி 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எஸ். மணியின் இயக்கத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், புஷ்பலதா, ஆர். எஸ். மனோகர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

சித்ராங்கி
இயக்கம்ஆர். எஸ். மணி
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
மாடர்ன் தியேட்டர்ஸ்
கதைவேலவன், பூவை கிருஷ்ணன், எம்.எஸ்.கண்ணன்
இசைவேதா
நடிப்புஏ. வி. எம். ராஜன், புஷ்பலதா, ஆர். எஸ். மனோகர், ஷீலா, எஸ். வி. இராமதாஸ், ஏ. கருணாநிதி, புஷ்பமாலா, கண்ணன், நவமணி, சுலோச்சனா, அருணாதேவி
வெளியீடு1964
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கு. மா. பாலசுப்பிரமணியம், வாலி ஆகியோரின் பாடல்களுக்கு வேதா இசையமைத்திருந்தார். பாடல்களை டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, கே. ஜமுனா ராணி, பொன்னுசாமி, ரத்னமாலா ஆகியோர் பாடியிருந்தனர்.

கதை தொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

உதயகிரி நாட்டின் மன்னனுக்கு ஒரு தம்பி (ஏ.வி.எம்.ராஜன்), முடிக்குரியவன். ஆட்சியைப் பிடிக்கச் சதியில் ஈடுபடும் நாட்டின் தானைத் தலைவர் (ஆர். எஸ். மனோகர்). வெளியூருக்குச் செல்லும் இளவரசன் வழியில் விபத்து ஒன்றைச் சந்திக்கிறான். இளவரசனைக் காப்பாற்றித் தன் வீட்டுக்குக் கொண்டு செல்கிறாள் ஓர் ஏழைப் பெண் (புஷ்பலதா). இருவருக்கும் இடையில் காதல் வளருகிறது. இளவரசனை யார் என்றறியாது அவனைத் திருமணம் புரிகிறாள். முதலிரவு முடியும் முன்னரே இளவரசன் அவளைத் தனியே விட்டுச் செல்கிறான். தனது கணவனைத் தேடிச் செல்லும் புஷ்பலதா கடைசியில் ஒரு நாட்டின் மன்னனாக தனது கணவனைக் காண்கிறாள். பல இடையூறுகள், கஷ்டங்களுக்குப் பின்னர் இருவரும் இணைகின்றனர்.

இடம்பெற்ற பாடல்கள் தொகு

உசாத்துணை தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்ராங்கி_(திரைப்படம்)&oldid=3847697" இலிருந்து மீள்விக்கப்பட்டது