சிந்துநதிப் பூ

சிந்துநதிப் பூ (Sindhu Nathi Poo) என்பது இயக்குனர் செந்தமிழன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரஞ்சித், ராஜகுமாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சௌந்தர்யன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் சனவரி 14, 1994.

சிந்துநதிப் பூ
இயக்கம்செந்தமிழன்
தயாரிப்புகே. டி. குஞ்சுமோன்
கதைசெந்தமிழன்
இசைசௌந்தர்யன்
நடிப்புரஞ்சித்
ராஜகுமாரி
ஜெய்சங்கர்
தாமு
கசான் கான்
ரவிசங்கர்
சாமிக்கண்ணு
வடிவேலு
வாசுவிக்ரம்
கல்பனா
மனோரமா
ராசாத்தி
யுவஸ்ரீ
சத்யா
ஒளிப்பதிவுகார்த்திக்ராஜா
படத்தொகுப்புஆர். டி. அண்ணாதுரை
வெளியீடுசனவரி 14, 1994
ஓட்டம்2:15 மணி நேரம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம் தொகு

வாலிபனான சக்திவேல் தனது சொந்த கிராமத்திற்கு திரும்ப வருவதிலிருந்து இந்த திரைப்படம் ஆரம்பிக்கிறது. திரும்பி வரும் அவனை கிராம மக்கள் கடவுளாக மதிக்கின்றனர். அவனை திருக்கவால் என்று அழைக்கின்றனர். திருக்கவால் இன்னும் தனது தந்தை செட்டியார், மாற்றாந்தாய் அலமு, அவர்களது மகன் மற்றும் மகளை வெறுக்கிறான். இரக்க குணம் படைத்த திருக்கவால் சீக்கிரமே முணுமுணுத்தான், கொடுமுடி மற்றும் திருக்கவாலின் தந்தை செட்டியார் ஆகியவர்களை எதிரிகளாக்கிக் கொள்கிறான். செட்டியார் வீட்டில் வேலை செய்யும் பசுபதி மற்றும் சின்னப்புள்ள இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். இது ஊருக்கு தெரிய வருகிறது. இதன் காரணமாக, திருக்கவால் அவர்களுக்கு திருமணத்தை ஏற்பாடு செய்கிறான். திருமணம் நடந்த சில நாட்களிலேயே விபத்து காரணமாக பசுபதி இறக்கிறான். கிராம மக்கள் அப்பாவியான திருக்கவால் மீது பழி போடுகின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன், திருக்கவால் தனது தந்தை செட்டியார், தனது தாய் செண்பகவள்ளி மற்றும் அவனது குழந்தை தங்கை சிட்டுவுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறான். செட்டியார் செண்பகவள்ளியின் தங்கை அலமுவுடன் தகாத உறவு வைத்திருக்கிறார். இதன் காரணமாக அலமு கர்ப்பம் அடைகிறாள். இதை அறிந்த செண்பகவள்ளி குழந்தையான தனது மகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்கிறாள். கோபமடைந்த திருக்கவால் தனது தந்தையின் காலை காயமடைய செய்து விட்டு தப்பித்து ஓடுகிறான். குழந்தை தொழிலாளியாக பணிபுரிந்து வாழ்கிறான்.

சின்னப்புள்ளயின் பாட்டியான அப்பாயி இறக்கிறார். இதற்குப் பிறகு, விதவையான சின்னப்புள்ளயுடன் திருக்கவாலுக்கு தகாத உறவு இருப்பதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கு அடுத்து நடக்கும் நிகழ்வுகளே மீதி கதையாகும்.

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

சிந்துநதிப் பூ படத்தில் தான் இயக்குனர் செந்தமிழன் அறிமுகமானார்.[1]

பாடல்கள் தொகு

சிந்துநதிப் பூ
பாடல்கள்
வெளியீடு1994
ஒலிப்பதிவு1994
இசைப் பாணிதிரைப்பட பாடல்கள்
நீளம்28:58
இசைத் தயாரிப்பாளர்சௌந்தர்யன்

இந்த திரைப்படத்திற்கு பின்னணி இசை மற்றும் பாடல்கள் திரைப்பட இசையமைப்பாளர் சௌந்தர்யனால் அமைக்கப்பட்டது. இந்த திரைப்படத்தின் பாடல்கள் 1994 ஆம் ஆண்டு வெளியாயின. மொத்தம் ஏழு பாடல்கள் இத்திரைப்படத்தில் இடம்பெற்றன. இந்த திரைப்படத்திற்கு பாடல்களை வைரமுத்து எழுதியிருந்தார்.[2][3] இந்த திரைப்படத்தின் "ஆத்தாடி என்ன ஒடம்பு" பாடல் நகைச்சுவை நடிகர் கலக்கப்போவது யாரு ராமர் 2018ஆம் ஆண்டு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நகைச்சுவையாக பயன்படுத்திய காரணத்தால் மீண்டும் பிரபலமடைந்தது. சமூக வலைத்தளங்களிலும் பிரபலமடைந்தது.[4][5]. மீண்டும் பிரபலமடைந்ததன் காரணமாக 2019 ஆம் ஆண்டு ஹிப்ஹாப் தமிழா ஆதி தனது நட்பே துணை திரைப்படத்திற்கு இப்பாடலை ரீமிக்ஸ் செய்திருந்தார்.[6]

எண் பாடல் பாடகர்(கள்) நேரம்
1 'குப்பையிலே நெல்' சாகுல் ஹமீது 1:40
2 'ஆலமரம்' சுஜாதா மோகன், குழுவினர் 2:43
3 'மத்தாளம் கொட்டுதடி' எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா, லூஸ் மோகன் 4:54
4 'ஆத்தாடி என்ன உடம்பு' சாகுல் ஹமீது, சுஜாதா மோகன் 4:31
5 'கடவுளும் நீயும்' உண்ணிமேனன், எஸ். ஜானகி 5:11
6 'ஆத்தி வாடையிலே' கே. ஜே. யேசுதாஸ், ஆஷா லதா 5:05
7 'அடியே அடி சின்னப்புள்ள' மனோ, எஸ். ஜானகி 4:51

வெளி இணைப்புகள் தொகு

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=sindhunadhi%20poo பரணிடப்பட்டது 2010-06-07 at the வந்தவழி இயந்திரம்
  1. Mannath, Malini (28 January 1994). "Poorly crafted". இந்தியன் எக்சுபிரசு: p. 6. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19940128&printsec=frontpage. 
  2. "MixRadio — Sindunadhi Poov by Soundaryan". mixrad.io. Archived from the original on 19 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 19 February 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Sindunadhi Poov — Hungama". hungama.com. பார்க்கப்பட்ட நாள் 19 February 2015.
  4. "ஆர்.டி.ஓ ஆபீஸில் சாதாரண வேலை... இன்று விஜய் டிவியின் நம்பர்.1 காமெடியன்!". Indian Express. 6 August 2020.
  5. "Luck Knocks KPY Ramar’s Doors!". nettv4u.com. 7 September 2019. https://nettv4u.com/latest-tamil-celebrity-news/luck-knocks-kpy-ramar-s-doors. 
  6. "'Natpe Thunai': Latest single 'Aathadi' from the Hiphop Tamizha starrer unveiled". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 15 February 2019. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/natpe-thunai-latest-single-aathadi-from-the-hiphop-tamizha-starrer-unveiled/articleshow/68009100.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்துநதிப்_பூ&oldid=3739934" இலிருந்து மீள்விக்கப்பட்டது