சிம்மராசி (திரைப்படம்)

சிம்மராசி (Simmarasi) 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஈரோடு சௌந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்குமார், குஷ்பு, மனோரமா, ஆனந்த் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சிம்மராசி
இயக்கம்ஈரோடு சௌந்தர்
தயாரிப்புஆர்.பி சௌத்ரி
கதைஈரோடு சௌந்தர்
நடிப்புசரத்குமார்,
குஷ்பு,
மனோரமா,
கனகா,
ஆனந்த் ராஜ்,
வினித்,
மணிவண்ணன்,
பொன்னம்பலம்,
தலைவாசல் விஜய்
படத்தொகுப்புவி.ஜெய்சங்கர்
வெளியீடு1998
மொழிதமிழ்

வகை தொகு

மசாலாப்படம் / நாடகப்படம்

கதை தொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

மாணிக்கவாசகம் (சரத்குமார்) புகையிரதத்தில் பயணம் செய்துகொண்டு வரும் வழியில் ஜாதிச்சண்டை போடும் ஊர் மக்களுக்குப் புத்தி கூறுகின்றார். பின்னர் படிப்படியாக அவ்வூர் மக்களின் நன்மதிப்பினைப் பெற்ற குடும்பமாக அவர் குடும்பமும் விளங்குகின்றது. அதேசமயம் அவ்வூரில் ஜாதி இல்லையேல் தான் இல்லை என்ற மூட நம்பிக்கைக் கொள்கையில் மூழ்கிப் போனவராக வாழ்கின்றவர் வேளாளர் சாதியைச் சார்ந்த மருதநாயகம் (ஆனந்தராஜ்). ஒருசமயம் அவர் வீட்டுக் குழந்தையை நெருப்பில் இருந்து காத்த வாய்பேச முடியாத ஒருவரை தன் வீட்டினுள் நுழைந்து தன் ஜாதிக் குழந்தையினைத் தீண்டிய காரணத்தினால் தீயில் இட்டு கொளுத்த முயற்சியும் செய்கின்றார். இவ்வாறு செய்யத்துணியும் சமயம் காப்பாற்றுகின்றார் மாணிக்கவாசகம். இச்சம்பவத்தினைத் தொடர்ந்து மாணிக்கவாசகத்தின்மீது வெறுப்பினைக் கொண்டிருக்கும் மருதநாயகம் அவரைப் பழிவாங்குவதற்கு சமயம் வருவரை காத்திருக்கின்றார். அதேவேளை மாணிக்கவாசகத்தின் மகனும் வெளியூரிலிருந்து அவ்வூருக்கு வருகின்றான். அவனும் தனது நண்பர்களின் திட்டத்தைப்போல அவ்வூரில் ஒரு தொழிற்சாலையை ஆரம்பிப்பதற்கான திட்டத்தைத் தன் தந்தைக்கும் கூறுகின்றான். அதனைக்கேட்டு தனது முழுச் சம்மதத்தையும் தெரிவிக்கின்றார் மாணிக்கவாசகம். ஆனால் மாணிக்கவாசகத்தின் நண்பர் அவரது மகனின் நண்பர்கள் வயலுக்குள் பாதணியுடன் உள்நுழைவதனைப் பார்த்து கோபம் கொண்டு தடுக்கின்றார். இதனைப் பார்த்து மாணிக்கவாசகத்தின் மகன் அவரைத் தாக்கவே அங்கு வரும் மாணிக்கவாசகம் தனது மகனின் கன்னத்தில் அறைகின்றார். இச்சம்பவத்தினைத் தொடர்ந்து தனது தந்தைமீது வெறுப்புடன் இருக்கும் அவர் மகன் மருதநாயகத்தின் வஞ்சகமான சொற்களால் அவருடன் கூட்டுவைத்து பின்னர் மருதநாயகம் கேட்டபடி அவருக்கே மகனாக தத்தெடுக்கப்படுகின்றார்.காவல்துறையில் அதிகாரியாக பதவியேற்றபின்னர் தனது தந்தையைக் கைது செய்யச் செல்லும் பொழுது தனது தந்தையெனக் கருதிவந்தவர் அனாதையாகவிருந்த தன்னைக் காப்பாற்றி வளர்த்து வருபவர் என்ற கதையினை தான் தாயாகக் கருதியவர் சொல்லக் கேட்டுத் தெரிந்து கொள்கின்றார். இதனைத்தொடர்ந்து மாணிக்கவாசகத்துடன் அவர் சேருகின்றாரா இல்லை மருநாயகத்துடன் சேருகின்றாரா என்பது திரைக்கதை முடிவு.

துணுக்குகள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்மராசி_(திரைப்படம்)&oldid=3660006" இலிருந்து மீள்விக்கப்பட்டது