சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான அகாதமி விருது

சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான அகாதமி விருது (ஆங்கில மொழி: Academy Award for Best International Feature Film) (முன்னர்: சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்) அகாதமி விருதுகளில் ஒன்றாகும். அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) ஆல் வழங்கப்படுகிறது.[1] ஆங்கில மொழியில் அல்லாத திரைப்படத்திற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான அகாதமி விருது
Academy Award for Best International Feature Film
விளக்கம்ஆங்கில மொழியில் அல்லாத சிறந்த திரைப்படம்
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
முன்பு அழைக்கப்பட்டது பெயர்சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான அகாதமி விருது (2020 முன்னர்)
முதலில் வழங்கப்பட்டது1947
தற்போது வைத்துள்ளதுளநபர்பாரசைட்டு (2019)
இணையதளம்oscars.org

இவ்விருதினை அதிக முறை வென்ற நாடு இத்தாலி ஆகும். 28 பரிந்துரைகளில் 14 முறை இவ்விருதினை வென்றுள்ளது. அதிக முறை பரிந்துரைக்கப்பட்டது பிரான்சு ஆகும். 37 முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2019 இல் வெளியான தென்கொரியத் திரைப்படம் பாரசைட்டு மட்டுமே இவ்விருதினையும் சிறந்த திரைப்படத்திற்கான விருதினையும் வென்றுள்ளது.[2]

தகுதி தொகு

பிற அகாதமி விருதுகளைப் போல இவ்விருதிற்கு பரிந்துரைக்கப்படும் திரைப்படம் ஐக்கிய அமெரிக்காவில் வெளியிடத் தேவையில்லை. பல்வேறு நாடுகளினால் பரிந்துரைக்கப்படும் திரைப்படங்கள் தொடர்ச்சியாக 7 நாட்கள் குறந்தது ஒரு திரையரங்கில் திரையிடப்பட்டு இருக்க வேண்டும்.[1][3]

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு