சிறிய கரும்பருந்து

சிறிய கரும்பருந்து
At Royal Botanic Gardens, Cranbourne, Melbourne, Victoria, Australia
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
E. axillaris
இருசொற் பெயரீடு
Elanus axillaris
(Latham, 1801)
Range of E. axillaris

சிறிய கரும்பருந்து (Black-shouldered Kite) இப்பறவை ஆத்திரேலியா பகுதிகளில் திறந்த வெளிகளில் அதிகமாகக்காணப்படுகிறது. இப்பறவை ஊன் உண்ணிப் பறவையாகும். இப்பறவை ஐரோவாசியா, ஆப்பிரிக்கா, மற்றும் அமெரிக்காப் பகுதிகளில் காணப்படும் கருஞ்சிறகுப் பருந்தைப் போல் காணப்படுகிறது.

விளக்கம் தொகு

இப்பறவையின் நீளம் சாதாரணமாக 35 முதல் 38 செமீ வரையிலும் சிறகு விரிந்த நிலையில் 80 முதல் 95 செமீட்டர்கள் வரையிலும் உள்ளது. இவற்றில் ஆண பறவை சிறியதாகவும் கண்கள் சிகப்பு நிறத்திலும் காணப்படுகிறது. இப்பறவை தன் சிறகை விரித்துப் பறக்கும் போது விசில் அடிப்பதுபோல் சத்தம் எழுப்பும் தன்மை கொண்டது. இவற்றின் இனப்பெருக்க காலம் ஆகசுட் மாதத்திற்கும் சனவரி மாதத்திற்கும் இடையில் நடக்கிறது. இவை வானத்தில் சுற்றிக்கொண்டே தன் இரையை பூமியில் பார்த்து விரைந்து சென்று பிடிக்கும் வல்லமை கொண்டுள்ளது. முப்பது நாட்களுக்குள் மூன்று முட்டைகள் இட்டு அடைகாக்கிறது. இதன் குஞ்சுகள் ஐந்து வாரங்களில் வெளிவந்து தனது இரை வேட்டைக்கு தயாராகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Elanus axillaris". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறிய_கரும்பருந்து&oldid=3477254" இலிருந்து மீள்விக்கப்பட்டது