சிறீதர் சில்லால்

சிறீதர் சில்லால் (Shridhar Chillal) (பிறப்பு:1938), இடது கை விரல்களில் 29 அடி 8 அங்குல (909.6 செமீ அல்லது 358.1 அங்குலம்) நீளத்திற்கு நகங்களை வளர்த்து உலக சாதனை நிகழ்த்தியவர். இவரது கட்டை விரல் நகம் மட்டும் 6.5 அடி (197.8 செமீ /77.87 அங்குலம்) நீளம் கொண்டது. இவர் 1952 ஆம் ஆண்டு முதல் தனது இடது கை விரல்களில் நகங்களை வெட்டும் வழக்கத்தை நிறுத்தினார்.[1]

சிறீதர் சில்லால்
பிறப்பு1937 (அகவை 86–87)
புனே, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா
பணிஓய்வு பெற்ற புகைப்படக் கலைஞர்

இவர் 66 ஆண்டுகளாக இடது கை விரல்களில் நகங்களை பாதுகாப்புடன் வளர்த்த காரணத்தினால், இடது கை செயல் இழக்கும் நிலைக்கு ஆளானார்.[2]

11 சூலை 2018 அன்று இவரது நீண்ட நகங்கள் வெட்டி எடுக்கப்பட்டு நியூயார்க் நகர அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Swatman, Rachel (29 September 2015). "Check out the longest fingernails ever in Shridhar Chillal's Record Holder Profile Video" (in English). Guinness World Records. http://www.guinnessworldrecords.com/news/2015/9/record-holder-profile-video-shridhar-chillal-and-the-longest-fingernails-ever-398817. பார்த்த நாள்: 5 December 2015. 
  2. Harding, Luke (11 December 2000). "Record fingernails go under the hammer" (in English). The Guardian (New Delhi). https://www.theguardian.com/world/2000/dec/11/lukeharding. பார்த்த நாள்: 5 December 2015. 
  3. Mahdawi, Arwa (12 July 2018). "Nails in the coffin: man with world's longest fingernails finally cuts them off" (in English). The Guardian (New York). https://www.theguardian.com/us-news/2018/jul/11/longest-fingernails-shridhar-chillal-cut-off. பார்த்த நாள்: 12 July 2018. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீதர்_சில்லால்&oldid=3780150" இலிருந்து மீள்விக்கப்பட்டது