சிறீவிஜயத்தின் மீதான சோழப் படையெடுப்பு

(சிறீவிஜயாவில் சோழப் படையெடுப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிறீவிஜயத்தின் மீதான சோழப் படையெடுப்பு (Chola invasion of Srivijaya) என்பது 1025 ஆம் ஆண்டில், தென்னிந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த சோழ மன்னன் முதலாம் இராசேந்திர சோழன், கடல்சார் தென்கிழக்காசியாவில் சிறீவிஜயம் நகரத்தின் மீது கடற்படைத் தாக்குதல்களை நடத்தியதைக் குறிப்பதாகும்.[1] இவர் சிறீவிஜயத்திலிருந்து கடாரம் (நவீன கெதாவை) வரைச் சென்று அதைக் கைப்பற்றி சிறிது காலம் ஆக்கிரமித்தார். சிறீவிஜயாவுக்கு எதிரான இராசேந்திரனின் கடற்படை பயணம் இந்தியாவின் வரலாற்றில் ஒரு தனித்துவமான நிகழ்வாகவும். தென்கிழக்கு ஆசியா நாடுகளுடனான அமைதியான உறவுகளாகவும் இருந்தது. மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் பல இடங்கள் மீது சோழ வம்சத்தைச் சேர்ந்த இராசேந்திர சோழன் படையெடுத்தார். [2] [3] சோழர் படையெடுப்பு மணிகிராம், அயயவோல் மற்றும் ஐநூற்றுவர் போன்ற தமிழ் வணிக சங்கங்களை தென்கிழக்காசியாவிற்கு விரிவுபடுத்தியது. [4] [5] [6] [7] சோழர் படையெடுப்பு சிறீவிஜயத்தின் சைலேந்திர வம்சத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. சோழர் படையெடுப்பு 1025 ஆம் ஆண்டில் சுமாத்திராவிலிருந்து இந்தியா மற்றும் திபெத்துக்கு வந்த சிறந்த பௌத்த அறிஞர் அதிசரின் பயணத்துடன் ஒத்துப்போகிறது. [8] முதலாம் இராசேந்திர சோழனின் பயணம் பற்றிய குறிப்புகள் இடைக்கால மலாய் நாளேடான செஜரா மெலாயாவில் ராஜா சுலன் என சிதைந்த வடிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் மலாய் இளவரசர்களுக்கு பேராக்கின் ராஜா சுலன் போன்ற சோலன் அல்லது சுலானுடன் முடிவடையும் பெயர்கள் உள்ளன. [9] [10] [11] [12] [13]

சிறீவிஜயத்தின் மீதான சோழப் படையெடுப்பு
முதலாம் இராசேந்திர சோழனின் தென்-கிழக்கு ஆசியா மீதான படையெடுப்பு பகுதி

Rajendra Chola's Territories c. 1030 CE
நாள் 1025–1030 பொ.ஊ
இடம் பலெம்பாங் (சுமாத்திரா), கெடா (மலாய் தீபகற்பம்), சிறீவிஜயம்
சோழர், மற்றும் கெமர் பேரரசு மீதான வெற்றி
  • சிறீவிஜயம் சோழர்களின் ஆளுமையின் கீழ் வந்தது
  • சங்கிராம விஜயதுங்கவர்மன் கைது செய்யப்பட்டான்
பிரிவினர்
சோழர் சிறீவிஜயம்
தளபதிகள், தலைவர்கள்
இராசேந்திர சோழன்

பீமசேனன்
அமரபுஜங்கன் திவாகரன்
கருணாகரன்

சங்கிராம விஜயதுங்க வர்மன் (கைதி)

சமர விஜயதுங்க வர்மன்

படைப் பிரிவுகள்
சோழர் கடற்படை

சோழர் படை

சிறீவிஜய கடற்படை

சிறீவிஜய தரைப்டை

பின்னணி தொகு

சிறீவிஜயத்தின் பகிரப்பட்ட வரலாற்றில், பண்டைய இந்தியா மற்றும் இந்தோனேசியா உடன் அந்நாடு நட்பு மற்றும் அமைதியான உறவுகளை கொண்டுள்ளது. எனவே இந்த இந்திய படையெடுப்பு ஆசிய வரலாற்றில் ஒரு தனித்துவமான நிகழ்வாகும். 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளில், சிறீவிஜயம் வங்காளத்தின் பாலப் பேரரசுடன் நெருங்கிய உறவைப் பேணி வந்துள்ளது. சிறீவிஜயத்தின் மகாராஜா பாலபுத்ரன் என்பவர் பாலப் பிரதேசத்தில் உள்ள நாளந்தா மகாவிகாரத்தில் ஒரு மடத்தை அர்ப்பணித்ததாக 860 நாளந்தா கல்வெட்டு பதிவு செய்கிறது. முதலாம் முதலாம் இராஜராஜ சோழரின் ஆட்சியில் சிறீவிஜயத்திற்கும் தென்னிந்திய சோழ வம்சத்துக்கும் இடையிலான உறவு நட்பாக இருந்தது. பொ.ச. 1006-ல் சைலேந்திர வம்சத்தைச் சேர்ந்த ஒரு சிறீவிஜய மகாராஜா - மன்னர் மாரவிஜயத்துங்கவர்மன் - துறைமுக நகரமான நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரத்தைக் கட்டினார் . [14] இருப்பினும், முதலாம் இராசேந்திர சோழனின் ஆட்சியின் போது, சோழர்கள் சிறீவிஜய நகரங்களைத் தாக்கியதால் உறவுகள் மோசமடைந்தன. [15]

சோழர்கள் கடல் கொள்ளை மற்றும் வெளிநாட்டு வர்த்தகம் இரண்டிலிருந்தும் பயனடைந்ததாக அறியப்படுகிறது. சில நேரங்களில் சோழர் கடற்படை தென்கிழக்கு ஆசியா வரை வெளிப்படையான கடல் கொள்ளை மற்றும் வெற்றிக்கு வழிவகுத்தது. [16] மலாக்கா நீரிணை மற்றும் சுண்டா நீரிணை என்ற இரண்டு முக்கிய கடற்படை சாக் புள்ளிகளைக் கட்டுப்படுத்திய சிறீவிஜயம் அந்த நேரத்தில் ஒரு பெரிய வர்த்தக சாம்ராஜ்யமாக இருந்தது. அது வலிமையான கடற்படை சக்திகளைக் கொண்டிருந்தது. மலாக்கா நீரிணையின் வடமேற்கு திறப்பு தீபகற்பத்தில் உள்ள கெடாவிலிருந்தும், சுமாத்ரா பக்கத்தில் உள்ள பன்னாயிலிருந்தும் கடற்படைகளை அது கட்டுப்படுத்தியது. அதே நேரத்தில் மலாயு (ஜம்பி) மற்றும் பலம்பாங் ஆகியவை அதன் தென்கிழக்கு திறப்பையும் சுந்தா நீரிணையையும் கட்டுப்படுத்தின. அவர்கள் கடற்படை வர்த்தக ஏகபோகத்தை கொண்டிருநதனர். இது அவர்களின் கடல் வழியாக செல்லும் எந்தவொரு வர்த்தக கப்பல்களையும் தங்கள் துறைமுகத்திற்குள் வந்து செல்லும்படி கட்டாயப்படுத்தியது, இல்லையெனில் கொள்ளையடிக்கப்பட்டது.

மேலும் காண்க தொகு

குறிப்பு தொகு

  1. Munoz, Paul Michel (2006). Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula. Singapore: Editions Didier Millet. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:981-4155-67-5. https://books.google.com/books/about/Early_kingdoms_of_the_Indonesian_archipe.html?id=NqwuAQAAIAAJ&redir_esc=y. 
  2. Nagapattinam to Suvarnadwipa: Reflections on the Chola Naval Expeditions to Southeast Asia by Hermann Kulke,K Kesavapany,Vijay Sakhuja p.170
  3. Trade and Trade Routes in Ancient India by Moti Chandra p.214
  4. Buddhism, Diplomacy, and Trade: The Realignment of Sino-Indian Relations 600-1400 by Tansen Sen p.159
  5. Power and Plenty: Trade, War, and the World Economy in the Second Millennium by Ronald Findlay,Kevin H. O'Rourke p.69
  6. Wink, André, Al-Hind: The Making of the Indo-Islamic World, Vol. I, Early Medieval India and the Expansion of Islam: 7th-11th centuries, p.325, ISBN 978-0391041738
  7. Ancient Indian History and Civilization by Sailendra Nath Sen p.564
  8. Atisa and Tibet: Life and Works of Dipamkara Srijnana by Alaka Chattopadhyaya p.91
  9. Gunn, Geoffrey C. History Without Borders: The Making of an Asian World Region, 1000-1800 p. 43
  10. Kulke, Hermann; Kesavapany, K.; Sakhuja, Vijay. Nagapattinam to Suvarnadwipa: Reflections on the Chola Naval Expeditions to Southeast Asia p. 71
  11. Sen, Tansen. Buddhism, Diplomacy, and Trade: The Realignment of Sino-Indian Relations p. 226
  12. Kalyanaraman, A. Aryatarangini, the Saga of the Indo-Aryans p.158
  13. Singam, S. Durai Raja. India and Malaya Through the Ages
  14. Sastri, pp 219–220
  15. Power and Plenty: Trade, War, and the World Economy in the Second Millennium by Ronald Findlay, Kevin H. O'Rourke p.67
  16. Craig A. Lockard (27 December 2006). Societies, Networks, and Transitions: A Global History. Cengage Learning. பக். 367. https://books.google.com/books?id=qOfjaW7C3AsC&pg=PA367&dq=Chola+piracy&hl=id&sa=X&ei=BNKWT5LNKsH3rQeXs8HXDQ&ved=0CDkQ6AEwAg#v=onepage&q=Chola%20piracy&f=false. பார்த்த நாள்: 23 April 2012.