சிலி தேசிய காற்பந்து அணி

சிலி தேசிய கால்பந்து அணி (Chilean national football team), பன்னாட்டுக் காற்பந்தாட்டப் போட்டிகளில் சிலி நாட்டின் சார்பாகப் பங்கேற்கும் காற்பந்து அணியாகும். இதனை, 1895-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட சிலி கால்பந்தாட்டக் கூட்டமைப்பு தேர்ந்தெடுத்து நிர்வகிக்கிறது. இதுவரை எட்டு உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். 1962 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை நடத்தியபோது, மூன்றாம் இடத்தை வென்றனர்; அதுவே, இவர்களின் அதிகபட்ச உலகக்கோப்பை வெற்றிமுடிவாகும். எக்குவடோர் அணியை அக்டோபர் 15, 2013, அன்று வென்றபோது 2014 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.[3] 1960-களின் இடைப்பகுதியிலிருந்து எலோ தரவுகோள் முறையில் எப்போதும் 25 வலுவான காற்பந்து அணிகளுள் ஒன்றாக வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

சிலி
Shirt badge/Association crest
அடைபெயர்La Roja (The Red One)
கூட்டமைப்புFederación de Fútbol de Chile (FFC)
கண்ட கூட்டமைப்புதென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு
தலைமைப் பயிற்சியாளர்Jorge Sampaoli
அணித் தலைவர்Claudio Bravo
Most capsLeonel Sánchez (84)
அதிகபட்ச கோல் அடித்தவர்Marcelo Salas (37)
தன்னக விளையாட்டரங்கம்Estadio Nacional
Estadio Monumental David Arellano
பீஃபா குறியீடுCHI
பீஃபா தரவரிசை15 3
அதிகபட்ச பிஃபா தரவரிசை6 (ஏப்ரல் 1998)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை84 (திசம்பர் 2002)
எலோ தரவரிசை10
அதிகபட்ச எலோ5 (சூலை 2011)
குறைந்தபட்ச எலோ60 (2003)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 அர்கெந்தீனா 3–1 Chile சிலி
(Buenos Aires, அர்கெந்தீனா; 27 May 1910)
பெரும் வெற்றி
சிலி Chile 7–0 வெனிசுவேலா 
(Santiago, சிலி; 29 August 1979)
சிலி Chile 7–0 ஆர்மீனியா 
(Viña del Mar, சிலி; 4 January 1997)[1]
பெரும் தோல்வி
 பிரேசில் 7–0 Chile சிலி
(Rio de Janeiro, Brazil; 17 September 1959)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்9 (முதற்தடவையாக 1930 இல்)
சிறந்த முடிவுமூன்றாம் இடம், 1962
கோபா அமெரிக்கா
பங்கேற்புகள்38 (முதற்தடவையாக 1916 இல்)
சிறந்த முடிவுவாகையர், 2015, 2016

2015-ஆம் ஆண்டில் முதன்முறையாக கோபா அமெரிக்காவை வென்றனர்; அப்போட்டித் தொடர் சிலி நாட்டிலேயே நடத்தப்பெற்றது. அமெரிக்காவில் 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற கோப்பா அமெரிக்கா நூறாண்டுகள் போட்டியிலும் வென்று கோப்பையை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். சிலியின் தேசிய கால்பந்து அணியானது அவர்களின் நிலையான-செயல்பாட்டுக்குப் பெயர்பெற்றவர்கள் ஆவர். 21 முறை, கோபா அமெரிக்கா காற்பந்துப் போட்டியில் சிறந்த 4 அணிகளுள் ஒன்றாக முடித்துள்ளனர்; 4 முறை இரண்டாம் இடம் பெற்றிருக்கின்றனர்.

குறிப்புதவிகள் தொகு

  1. Fifa.com, Comparison of Armenia and Chile
  2. 2.0 2.1 Since 1992, squads for Football at the Summer Olympics have been restricted to three players over the age of 23. The achievements of such teams are not usually included in the statistics of the international team.
  3. Uruguay play-off bound, Chile, Ecuador through பரணிடப்பட்டது 2013-11-16 at the வந்தவழி இயந்திரம் Fifa.com, 16 October 2013. Sourced 31 October 2013.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலி_தேசிய_காற்பந்து_அணி&oldid=3763194" இலிருந்து மீள்விக்கப்பட்டது