சி. அனந்தராமகிருஷ்ணன்

இந்தியத் தொழிலதிபர்

அனந்தராமகிருஷ்ணன் சின்னசாமி (C. Anandharamakrishnan), பொதுவாக அனந்தராமகிருஷ்ணன் என அறியப்படுபவர், இந்திய விஞ்ஞானி மற்றும் கல்வியாளர் ஆவார். இவர் உணவு பதப்படுத்தும் பிரிவில் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இரண்டு தசாப்த கால அனுபவம் பெற்றவர். இவர் தற்போது (ஏப்ரல் 2016 முதல்) தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகத்தின் (உணவு பதனிடும் தொழிற்சாலை அமைச்சகம், இந்திய அரசு) இயக்குநராக உள்ளார்.


சி. அனந்தராமகிருஷ்ணன்
2019ல் அனந்தராமகிருஷ்ணன்
பிறப்புகோயம்புத்தூர், இந்தியா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்லோப்போரா பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியம்
பணிஇயக்குநர், இஉபநி
விருதுகள்
  • டாடா புதுமையாக்க ஆராய்ச்சி நிதியுதவி (உயிர்தொழில்நுட்ப துறை, இந்திய அரசு) 2019-20
  • தேசிய அறிவியல் கழகம், இந்தியா-ரிலையன்சு தொழிலக பிளாட்டினம் ஜீப்ளி விருது (2018)
  • பொறியியல் தொழில்நுட்ப தேசிய வடிவமைப்பு விருது (2019)
  • அகில இந்திய உணவு பதனிடுதல் பிளாட்டின ஜீப்ளி சிறப்பு விருது (2018)
  • அல்கைல் அமைன் பத்மபூசன் பேரா. பி. டி. திலக் கெம்கான் சிறப்பு பேச்சாளர் விருது (2016)
  • பேராசிரிய ஜிவான் சிங் சிந்து விருது (2010)
  • தேசிய அறிவியல் கழக உறுப்பினர் (2019)
  • தேசிய விவசாய கழக உறுப்பினர் (2019)
  • உணவு அறிவியலாளர் தொழில்நுட்பவியலாளர் கழக உறுப்பினர் (2017)
  • Fellow of RSC (2016)
வலைத்தளம்
www.anandharamakrishnan.com

ஆனந்தராமகிருஷ்ணன் தனது பி. டெக். படிப்பினை வேதிப் பொறியியலிலும் எம். டெக். படிப்பினை சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் ஏ.சி. தொழில்நுட்பக் கல்லூரியில் முடித்தார்.[1] பின்னர் பொதுநலவாய ஆய்வு நிதி திட்டத்தின்கீழ் ஐக்கிய இராச்சியத்தின் லாப்போரோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் பட்ட ஆய்வில் இவர் ’தெளி-உலர்த்துதல் மற்றும் புரதங்களைத் தெளித்தல்-உலர்த்துதல் பற்றிய கணிப்பியப் பாய்ம இயக்கவியல் பரிசோதனைகளை மேற்கொண்டார்.

இவரது ஆராய்ச்சி முயற்சிகளின் விளைவாக 105 ஆய்வுக் கட்டுரைகளை, அறிவியல் மேற்கோள் சுட்டெண் கொண்ட ஆய்விதழில் வெளியிட்டுள்ளார். சராசரியாக இந்த ஆய்விதழ்களின் ஆய்விதழ் மேற்கோள் சுட்டெண்ணானது 3.219 ஆகும்.[2] இரண்டு சர்வதேச காப்புரிமைகள் மற்றும் ஏழு இந்தியக் காப்புரிமைகளை இவர் கொண்டுள்ளார். இவர் 4 புத்தகங்களை எழுதியுள்ளார் மேலும் 2 புத்தகங்களைத் தொகுத்துள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Director". www.iifpt.edu.in. Archived from the original on 7 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 7 August 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "C. Anandharamakrishnan, PhD, FRSC - Google Scholar Citations". scholar.google.com.au. பார்க்கப்பட்ட நாள் 7 August 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._அனந்தராமகிருஷ்ணன்&oldid=3840889" இலிருந்து மீள்விக்கப்பட்டது