சி. ஆர். நாராயண் ராவ்

சி. ஆர். நாராயண் ராவ் (C. R. Narayan Rao, 15 ஆகஸ்ட் 1882 - 2 ஜனவரி 1960) ஒர் இந்திய விலங்கியல் மருத்துவர் மற்றும் ஊர்வனவியலாளர் (herpetologist) ஆவார். ”இன்றைய அறிவியல்” எனும் அறிவியல் பத்திரிகையின் நிறுவன ஆசிரியர்களில் ஒருவராக இருந்தார். இந்திய நில நீர் உயிரினங்களில் (இருவாழ்விகள்) இவரது முன்னோடிப் பணியை அங்கீகரிப்பதற்காக, "ராவ்ரெசுடெசு" என்ற தவளை இனத்திற்கு இவரது பெயரிடப்பட்டுள்ளது

பின்னணி தொகு

கோயம்புத்தூரில் பிறந்த இவர் பெல்லாரியில் தனது பட்டப்படிப்பை பயின்றார். பிந்தைய பட்டப்படிப்பினை பேராசிரியர் எண்டர்சனின் கீழ் சென்னை கிறித்துவக் கல்லூரியில் பயின்று தங்க பதக்கம் பெற்றார். பிறகு, அவர் கற்பித்தலில் டிப்ளமோ பெற்றார். இவர் கோயம்புத்தூர் மற்றும் எர்ணாகுளத்தில் கற்பித்தல் பணியேற்றார். அதன் பின்னர் பெங்களூரில் உள்ள மத்திய கல்லூரியில் பணியாற்றினார். அங்கு உயிரியல் துறையை ஒருங்கமைத்து விலங்கியல் தலைவராக செயல்பட்டு 1937 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.[1]

பங்களிப்புகள் தொகு

ஆய்வுகளைப் பல்கலைக்கழக கல்வியோடு ஒருங்கிணைப்பில் அவர் ஈடுபட்டுள்ளதால், அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் அவரது பங்கு குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது. சர் மார்ட்டின் ஆன்ஸ்லோ ஃபோஸ்டர் மற்றும் பிற இந்திய விஞ்ஞானிகளுடன் இணைந்து ஜூலை 1932 இல் நேச்சர் இதழைப் போன்ற மற்றொரு இதழான "தற்போதைய அறிவியல்" தொடங்கினார். அதன் முதன்மை ஆசிரியராக இருந்தார். அவரது முதல் தலையங்கங்களில் ஒன்று, இந்தியாவில் விஞ்ஞான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து இந்திய அறிவியல் அகாதமி உருவாக உதவியது.[1][2]

பேராசிரியர் ராவ் தவளைகள் மற்றும் அவைகளை வகைபிரித்தல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். பல தவளை வகைகளை அவர் பெயரிட்டு விளக்கியுள்ளார். அர்பன்டெரிக் மற்றும் சிக்மண்டேசன் தவளைகளின் வாழ்வாதார வளர்ச்சியைப் பற்றிய நமது புரிதலுக்கு முக்கிய பங்களிப்பாகக் கருதப்படுகிறது. அவர் புதிய மைக்ரோலைட் இனமான ராமானேலாவை விவரித்தார். "ராரெஸ்ட்டெஸ்" என்ற இனத்துக்கு இவர் பெயரைச் சூட்டி .[3]

1938 ல் லாகூரில் இந்திய அறிவியல் காங்கிரஸின் விலங்கியல் பிரிவிற்கு பேராசிரியர் ராவ் தலைமை வகித்தார். இவரது மெல்லிய லொரிஸின் கருப்பை முனையின் விரிவுரைகள் ஜேம்ஸ் பீட்டர் ஹில் என்பவரால் ராயல் சொசைட்டிக்கு வழங்கப்பட்டது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Seshachar, B.R. (1960). "Obituary. Professor C.R. Narayan Rao". Current Science 29 (5): 173. http://www.currentscience.ac.in/Downloads/article_id_029_05_0173_0173_0.pdf. 
  2. Krishnan, Riki & P. Balaram (2007). "Current Science: some early history". Current Science 92-138 (1): 129-. http://eprints.iisc.ernet.in/9937/1/Current_Science.pdf. பார்த்த நாள்: 2017-07-10. 
  3. Biju, S. D.; Yogesh Shouche; Alain Dubois; S. K. Dutta; Franky Bossuyt (2010). "A ground-dwelling rhacophorid frog from the highest mountain peak of the Western Ghats of India". Current Science 98 (8): 1119–1125. http://www.amphibia.be/pubs/CurrSci_2010.pdf. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._ஆர்._நாராயண்_ராவ்&oldid=3605134" இலிருந்து மீள்விக்கப்பட்டது