சீர்மரபு ஒப்புரு

சீர்மரபு ஒப்புரு (Standard Model) என்பது அணுத்துகள்கள் பற்றிய ஒரு கொள்கைக் கட்டுமான அமைப்பு. உலகில் நாம் அறிந்தவற்றுள் அடிப்படையாக இருக்கும் நான்கு "விசை"-களில் மூன்று விசைகளைப் பற்றியதை விளக்க உதவுவது இந்தச் சீர்மரபு ஒப்புரு. குறிப்பாக அணுத்துகள்கள், (1) மின்காந்த, (2) மெல்லியக்க, (3) வல்லியக்க "விசைகள்" ஆகியவற்றின் இடைவினைகளுக்கு உட்பட்டு அவற்றின் இயக்கத்தை விளக்குவது இந்த ஒப்புரு (மாடல்).

அணுவின் அடிப்படைத் துகள்களுக்கான சீர்மரபு ஒப்புரு (The Standard Model), இதில் கடைசி நிரலில் (நெடுக்கு வரிசையில்) புலம்மாறா போசான் (gauge boson) அல்லது காழ்ச்சு போசான் காட்டப்பட்டுள்ளது

சீர்மரபு ஒப்புரு, புவியீர்ப்பு போன்ற பொருளீர்ப்பு விசை தவிர்த்த இருவேறு கொள்கைகளை ஒன்றிணைத்துக் காட்டும் ஒரு கொள்கை ஒப்புரு. அவ்விரு கொள்கைகள்:

இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து வளர்த்தெடுக்கப்பட்டு, 1970-களில் குவார்க்குகளின் இருப்பை உறுதி செய்தபிறகு தற்போதுள்ள சீர்மரபு ஒப்புரு நிலைபெற்றது. அதன்பின் அடிகுவார்க்கு (1977), உச்சிக் குவார்க்கு (1995), டௌ நுண்நொதுமி (டௌ நியூட்ரினோ) (2000), இகிசு போசான் (2012) ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டபின், இந்த ஒப்புரு நம்பத்தகுந்தவாறு உறுதிசெய்யப்பட்டது. பல்வேறு விளைவுகளையும் இயக்கங்களையும் சரியாக இந்த ஒப்புரு விளக்குவதால் இதனை ஏற்புபெற்ற ஓர் ஒப்புருவாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

சீர்மரபு ஒப்புரு குவார்க்குகளுக்கும் மென்மிகளுக்கும் இடையே நிகழும் வினைகளைத் துல்லியமாக விளக்கிக்காட்டுகின்றது. என்றாலும் குவார்க்குகள் மென்மிகள் இவற்றின் நிறைகளின் அளவுகளைப் பற்றி முற்கூற இயலுவதில்லை. மேலும் இந்த சீர்மரபு ஒப்புரு புதிதாக அறியப்பட்டுள்ள கரும்பொருள் (dark matter) என்பதைப் பற்றிய இயற்பியல் எதையும் விளக்காததால், முழுமை பெற்ற, எல்லாவற்றையும் விளக்கும் ஒரு கொள்கையாகக் கொள்ள இயலாது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீர்மரபு_ஒப்புரு&oldid=2745476" இலிருந்து மீள்விக்கப்பட்டது