சுகோவில் அளவுகோல்

அளவீட்டு முறை

சுகோவில் அளவுகோல் (Scoville scale) என்பது மிளகாய், மிளகு போன்ற மசாலா உணவுப் பொருட்களின் கார்ப்புச் சுவையின், கார வெப்பத்தினை அளவிட உதவும் அளவீட்டு முறை ஆகும். இவை சுகோவில் வெப்ப அளவீடு (Scoville heat units SHU) என்று குறிப்பிடப்படுகிறது.[1]

ஊஸ்டன் சந்தையில் சுகோவில் அளவுக் குறிப்புப் பலகையுடன் உள்ள காரப் பொருள்கள் விற்பனை நிலையம்

வேதிப்பொருள் தொகு

இந்த அளவீடு அந்த உணவுப் பொருளில் உள்ள காப்சசின் (Capsaicin) அளவின் அடிப்படையில் மாறுபடுகிறது. காப்சசின் என்பது ஒன்றுக்கொன்று தொடர்புடைய காப்சினாய்டுகள் (Capsaicinoids) தொகுதியில் உள்ள ஒரு வகை வேதிப்பொருள் ஆகும்.

வரலாறு தொகு

இந்த அளவீட்டு முறையானது அமெரிக்க மருந்தாளர் வில்பர் சுகோவில் என்பவரால் பயன்படுத்தப்பட்டு வந்தது. 1912 முதல் அவரது பெயரிலேயே இந்த அளவீட்டு முறை பொது பயன்பாட்டில் இருந்து வருகிறது. இது சுகோவில் புலனுணர்வு சோதனை (Scoville Organoleptic Test) என்றும் கூறப்படுகிறது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Peter, KV, ed. (2001), Handbook of Herbs and Spices, vol. 1, CRC Press, p. 120, ISBN 0-8493-1217-5.
  2. Scoville, Wilbur (மே 1912). "Note on capsicums". Journal of the American Pharmaceutical Association 1 (5): 453–4. doi:10.1002/jps.3080010520. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகோவில்_அளவுகோல்&oldid=2075539" இலிருந்து மீள்விக்கப்பட்டது